ஞாயிறு, மார்ச் 17, 2019

நினைவலைகள்-87.


காந்தி உயர் சாதிக்காரர்களின் தந்தை...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்திய பணம் க்கான பட முடிவு

காந்தியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூற்று..

நீதி உணர்வே இல்லாத பாவியாகத்தான் இருந்தார் காந்தி. என்னைத் தோற்கடிக்க வேண்டும்
என்பதற்காக வஞ்சகமான கோழைத்தனமான ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்கிற கருவியைப் பயன்படுத்தினாரே அல்லாமல்அறிவுக்கூர்மையை அவர் பயன்படுத்தவில்லை.

 இதன் மூலம் இந்துக்களின் நிலையான அடிமைகளாகத் தீண்டப்படாதவர்களை ஆகும்படி செய்தார்.

இந்தியாவின் பணக்கார மனிதர்களே ஏழைகளின் அறங்காவலர்கள் என்றார் காந்தி. 

அந்த நிலையிலேயே இந்தியாவின் செல்வங்களை யெல்லாம் ஏழைகளின் அறங்காவலர்கள் என்ற முறையில் அவர்கள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் பொருளாதார சமநிலைக்காக காந்தி அழைப்பு விடுத்ததே இல்லை. வறுமை ஒழிப்புக்காக இயக்கம் நடத்தவும் இல்லை.

காந்தி தீண்டப்படாதவரைப் பலிகொடுத்து இந்து மதத்தைக் காப்பாற்றியவர்.

காந்தி நூற்றுக்கு எண்பத்தைந்து விழுக்காடு இந்தியர்களுக்கு ‘இந்தியாவின் தந்தை’ ஆகமுடியாது.

 பதினைந்து விழுக்காடாக உள்ள ‘உயர்சாதி மக்களின் தந்தை’ என்கிற பட்டத்தையே அவர் பெற முடியும்..

4 கருத்துகள்: