பக்கங்கள்

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 05 2023

தேவசகாயத்தின் மீசை....


திருவனந்தபுரம் செல்லும் வழியில், நெய்யாற்றின் கரை எனும் ஊர்.....

அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி.... உத்ரம் திருநாள் மன்னரின் ஆட்சி....(1846-1860)

ஒடுக்கப்பட்ட ஆண்கள், மீசை வைக்கக்கூடாது என்பது #சட்டம்.. ஆனால், தேவசகாயத்திற்கு

மீசை வைக்க வேண்டும் என்பது ஆசை..

சட்டத்தை மீறினால் அன்றைய மன்னன் ஆட்சி என்ன செய்யும் என்பதும் அவனுக்கு தெரியும்!

ஆனாலும் இளம் காளையான, தேவசகாயம், இதை எதிர்த்து கலகக்கொடியை, கையில் ஏந்தினான்; தனக்குள் ஒரு சமூகப் போராளி உருவாவதைஅப்போதுஅவன்உணரவில்லை... மீசை வைக்கக்கூடாதுஎன்றசட்டத்தைஉடைக்க, திமிறி எழுந்தான்...

தனக்கு மீசை வைத்துத் தர வேண்டும் என்று, சிகையலங்காரம் செய்பவரிடம், பல முறை கேட்டும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை...

ஒரு வேளை, மீசை வைத்துக் கொடுத்தால், தனது நிலை என்னவாகும் என்ற அச்சம்...

ஆனாலும் விடவில்லை, தேவசகாயம்...


இறுதியில், தேவசகாயத்தின் முகத்தில், முறுக்கு மீசை, குடியேறியது...விடவில்லை ஆட்சியாளர்கள்;துரத்தியது நாயர் பட்டாளம்!

அதே நேரம் மிகவும் ரகசியமாக, தேவசகாயத்தை, திருவனந்தபுரம், திருமலை எனும்இடத்தில்உள்ள,மன்னரின்மாளிகையில், தோட்டக்காரனாக, ஊழியம் செய்ய அழைத்துச் சென்று,ஏற்பாடுகள் செய்தனர் உறவினர்கள்....

ஊழியம் என்பது, திருவாங்கூரின் #தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கருதப்பட்ட மக்கள் எதிர்ப்பு எதுவும் கூறாமல் செய்ய வேண்டிய #கட்டாயமானது;இந்த #ஊழியம் என்பதற்கு #ஊதியம் எதுவும் இல்லை..

அங்கே, அவர்கள், ஊற்றும் #கஞ்சி அல்லது #கூழ் போன்றவை கிடைக்கும் போது குடித்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!

கொஞ்சம் நெல்லும் கொடுப்பார்கள்...


மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில், அவரை, எட்டுவீட்டு பிள்ளைமார், போத்திகள், ஆகியோரிடமிருந்து, காப்பாற்றிய, நாடார் சமூகத்தின், உதவிகளுக்காக, திருமலை மாளிகை அருகாமையில் சில நாடார் குடும்பங்களை, மார்த்தாண்ட வர்மா, வசித்துக் கொள்ள அனுமதித்திருந்தார்...

தேவசகாயம், பூந்தோட்டத்தில், தனது வேலையை செய்து வந்தார்..

ஆனால், அங்கே அவருக்கு, சம்பளம் எதுவும் இல்லை... ஏற்கனவே குறிப்பிட்டது போல் வெறும் கஞ்சியும், நெல்லும் தான் கிடைத்தது..

வெகுண்டெழுந்தான், தேவசகாயம் எனும் போராளி..


"எனக்கு, கஞ்சியும், நெல்லும், தேவையில்லை;எனது, பெற்றோருக்குக் கொடுக்க, எனக்கு சம்பளம் தான் வேண்டும்; அதுவும், மன்னரின், #சக்கரம்(எங்கள் பகுதியில், நாணயத்தை இப்போதும் சக்கரம் என்று சொல்லும் வழக்கு உண்டு; அப்போது, சக்கரம் என்ற நாணயமும் உண்டு) தான் வேண்டும்!வேலைக்கு கூலி வேண்டும்; கஞ்சி அல்ல", என்ற, கலகக்குரல், முதன் முதலாக, திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஓங்கி ஒலித்தது! தேவசகாயத்தின் கலகக் குரல்,

திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும், இடி

முழக்கமாக ஒலித்தது; ஆடிப் போனது அரண்மனை....


தன்னோடு, வேலை செய்த 5 பேரையும்இணைத்துக் கொண்டார், தேவசகாயம்!

ஆனால், விடவில்லை ஆட்சியாளர்கள்..

தேவசகாயத்தையும், சகாக்கள் 5 பேரையும், துரத்திப் பிடித்து, கண் காணத இடத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்து படுகொலை செய்தது, நாயர் பட்டாளம் ...

தனது மண்ணின் மக்கள், படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, அதற்காக குரல் எழுப்பவோ, ஒரு துளி கண்ணீர் சிந்தவோ கூட, அங்கே அனுமதி இல்லை..


ஆனால், ஜான் காக்ஸ் என்ற கிறிஸ்தவ மிஷனரி, இதை விடவில்லை..

தேவ சகாயத்தின் குடும்பத்தினரையும், சகாக்கள் 5 பேரின் குடும்பத்தினரையும், தனது வீட்டில் பாதுகாப்பாக, மறைத்து வைத்து விட்டு,நேராக,மன்னரிடம்சென்று,நடந்தவற்றை கூறி, தேவசகாயத்தையும், அவரது சகாக்களையும் படுகொலை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்....


அதே நேரத்தில், அரண்மனை அதிகாரிகள், ஆறு உடல்களையும் எடுத்துக்கொண்டு, திருவனந்தபுரம், பொது மருத்துவமனைக்கு சென்றார்கள்....(திருவனந்தபுரத்தில் இப்போதும் இந்த மருத்துவ மனை இருக்கிறது; General Hospital)..

டாக்டர், முல்லர், என்ற ஐரோப்பிய மருத்துவரை சந்தித்து, கொலை செய்யப்பட்ட, ஆறு பேரும், காலரா காரணமாக இறந்து போனதாக, சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்டனர்; நேர்மையான அந்த மருத்துவர், போலி சான்றிதழ் தர முடியாது என்றும், ஆறு பேரும், கொலை செய்யப்பட்டதாக மட்டுமே சான்றளிக்க முடியும் என்று உறுதியாக கூறினார்..

அப்போது, அரச குடும்பத்தினர் சார்பில், அப்போது, Resident பொறுப்பில் இருந்த, Major General: william Cullen(1840-1860),டாக்டர், முல்லர் அவர்களை சந்தித்து, போலி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்டார்...

முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் டாக்டர்; 

விடவில்லை டாக்டர் முல்லர்; தேவ சகாயமும், அவரது சகாக்கள் 5 பேரும், படுகொலை செய்யப்பட்டதாக, மதராஸ் நீதிமன்றத்தில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்..

இறுதியில், கொலையாளிகள்அனைவருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கொலையாளிகள் அனைவரையும், தண்டிக்காமல் காப்பாற்றி விட்டது, திருவாங்கூர் ஆட்சி....


ஆனாலும், தேவ சகாயங்கள், வருவார்கள்...

அனைத்தையும் தகர்ப்பார்கள்..


முகத்தில் முளைக்கும் ரோமத்தைக் கூட, விட்டு வைக்காத,தேவ சகாயத்தின், ரோமத்தைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள், இறுதியில், அதிகாரங்களை இழந்தது கூட, வரலாறு தான்...


நாடுணர்த்திய நாடார் போராட்டங்ஙள்(மலையாளம்)

பக்கம், 214-219..By.Prof.J.Darwin

கவடியார் தாஸ் எழுதிய ஜோலிக்கு கூலி சமரம் 1854 என்ற மலையாள நூல்

ஞாயிறு 19 2023

மூடர்களின் கூடாரத்திற்கு....

மூடர்கூடாரத்திற்கும் அதை நம்பும் பித்துகுளிகளுக்கும்.......





 'பெரியார் வயது முதிர்ந்த நிலையில் மணியம்மை என்ற ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் .அவர் பெண்விடுதலை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?' என்ற கேள்வி திராவிட எதிரப்பாளர்களாலும் அண்மையில் சங்கிப் பரிவாரங்களால் அதிகமாக முன்வைக்கப்பட்டு வருவதோடு கல்லூரி ஆசிரியர்கள் சிலராலும் எழுப்பப்பட்டிருக்கிறது


பெரியாரின் சொத்துக்களுக்கு நம்பகமான வாரிசு இல்லாத சூழலில் அவருக்கு உறுதுணையாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாயும் இருந்து வந்த 30 வயதைக் கடந்த மணியம்மையைத் தத்து எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லாத சூழலில் அவர் திருமணம் என்ற உறவின் மூலமாக மணியம்மையை வாரிசாக்கிக் கொண்டாரே..தவிர .... காந்தியைப்போல் ஆத்ம பரிசோதனைக்காகவோ..ஆசை நாயகிக்காகவோ அல்ல மூடர் கூடாரமே !!!!

புதன் 27 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...16





ஒரு கோபம் எப்படி இருக்க வேண்டும்? (சர்தார் உத்தம் சினிமா)
அரசியலில் நடிப்பு சுதேசிகளையும், போலி தேசபக்தர்களையும், வாய்ச்சவடால் பேர்வழியும் பார்த்து சலித்த நமக்கு, இப்படி ஒரு சுத்த வீரன் நம்மிடம் வாழ்ந்திருக்கிறானே! என இருமாப்பை ஏற்படுத்துகிற படம் சர்தார் உத்தம் .



















போலி தேசப்பற்று சினிமாக்களால் எரிச்சலைடைந்த அனைவரும் பார்த்து சிலிர்க்கும் படியான ஒரு படம் #SardarUdham




போலி தேச பக்தர்களுக்கு Sardar Udham கற்றுக்கொடுத்த பாடம் | Chat with Has...

செவ்வாய் 28 2021

சாதி ஆதிக்க போலீசின் கைதை கொண்டாடிய மக்கள்..!!!!

 



கண்ணகி கொலை வழக்கில் சாதிவெறி போலீஸ் தமிழ்மாறன்.


ஸ்டாலின் தி


தேனி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்மாறன், கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இப்பகுதி மக்களிடம் பணம் பறிப்பதையே தம் கடமையாக செய்து கொண்டிருந்த தமிழ்மாறன், ஒரு கைகலப்பு வழக்கில் லஞ்சம் கேட்டு, அது விஜிலென்ஸ் புகாராக ஆகி, நேற்று கையும் களவுமாக காவல் நிலையத்திலேயே பிடிபட்டார். தமிழ்மாறன் பணியாற்றிய இடங்களிலெல்லாம் இலஞ்சத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டவர். அதன் பலனாகவே இன்றைக்கு கம்பி எண்ணுகிறார். மேலும், தமிழ்மாறன் இலஞ்சப் பேர்வழி மட்டுமல்ல, மோசமான சாதிவெறியனும் கூட.
தேவர் சாதியைச் சார்ந்த இவர் விருதாச்சலம்-பெண்ணாடம் பகுதிகளுக்கு திட்டமிட்டே நியமிக்கப்பட்டவர். இவர் விருதாச்சலத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றிய போது, அன்றைய வி.சி.யின் அரசியல் குழுத்தலைவர் திருவள்ளுவன் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராணடுக்குப் பிறகு விடுதலையானதையொட்டி இயக்கத்தினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டியை ஆள் வைத்து கிழித்தார். 'அவன் என்ன தியாகியாடா?' என்று கேட்டு சுவரொட்டி ஒட்டியவர்களை தாக்கினார். இதுபோன்ற பல சம்பவங்கள் அவரது சாதிய முகத்தைக் காட்டினாலும், தமிழகமே அதிர்ந்த ஒரு சாதியாணவப் படுகொலையில் கை நனைத்ததுதான் முக்கியமானது.
2003 இல் விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கூரைப் பேட்டையில்வைத்து, வன்னியர்களால் விஷம் கொடுத்து, எரித்துக் கொல்லப்பட்ட காதலர்களான முருகேசன்(பறையர்)-கண்ணகி(வன்னியர்)யின் சம்பவத்தில் தமிழ்மாறனுக்கும் பங்கிருக்கிறது. அவர்கள் இருவரும் கொல்லப் படுவதற்கும் முன்னவே, காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், விரைந்து சென்று குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, கொல்லுவதற்கு அனுமதிக்கொடுத்துவிட்டு திரும்பிய அயோக்கின்தான் இந்த இன்ஸ்பெக்டர். அப்போதே இந்த நபரின் தில்லுமுல்லு மக்களிடம் வெறுப்பை உருவாக்கியது.ஆனாலும் எந்த பதற்றமும் இல்லாமல் இலஞ்சத்தில் மூழ்கிக் கிடந்திருப்பது இப்போது தெரிகிறது. குற்றங்களை தொடர்ந்து செய்வதில் அவ்வளவு தீவிரம்.
எங்கும் இல்லா அதிசயமாக இவர் கைதை மக்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள். கைவிலங்கிட்டு கொண்டு செல்லுங்கள் என்று முழங்கியிருக்கிறார்கள் அவர்கள். அந்தளவுக்கு மக்களிடம் 'நல்ல பெயரை' சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் புகுந்த இந்து முன்னணியினர், போலீஸ் மீது கல்வீச்சில் இறங்க, தடியடியும் நடந்திருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களும் தமிழ்மாறன் கைதானதில் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
தடியடியை தவிர்த்து இருக்க வேண்டும் காவல்துறை. ஒருவன் கல்லெறிந்தான் என்பதற்காக நூற்றுக்கும் அதிகமானவர்களை, அதுவும் வன்முறையை நாடாமல் இலஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவளித்த எளிய மக்களைத் தாக்குவது கண்டனத்திற்குரியது.
இத்தகைய சாதிவெறி போலிஸ் தமிழ் மாறனை உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்

புதன் 22 2021

ஆறாவது ஆண்டு நினைவு.........

 


யம்மா.....ஒனக்கு என்பதுக்கு மேல் வயசாச்சும்மா... இன்னும் பர ரன்னு வேலை செய்வேன்னு மல்லுகட்டதம்மா..  நான் சொல்றத கேட்டேன்னா.... நூறு வயசு வரைக்கும் இருப்பேம்மா.... அவர் சொல்லி முடிக்கும்முன்னரே அவருடைய தாய் இடைமறித்து சொன்னார்...


“ நூறு வயசு வரைக்கும் நான் இருந்தா.... அப்புறம் செத்த பிறகு யார்டா..? தூக்கி போயி என்ன. பொதைப்பா.....

“ யாரு இருக்காவா....    ஒம் மக ..மருமகன், ரெண்டு பேத்தி, ரெண்டு பேரன்கள்ல..வச்சுகிட்டு... யாரு இருக்காங்கன்னா  கேட்க்கிற.... எனக்குத்தான் உன்னவிட்டா யாரு  இருக்கா... மனைவி, மகன்.மகள், மனைவி வழி உறவுகள்னு யாரு இருக்கா.... உன் மகளுக்காக என்னை செக்குமாடாக்கிட்டேயம்மா.... எனக்கு  யாருமில்லாத காரணத்ததால்  ஒனக்கு முன்னாடி நான் போயிட்டா ...... நல்லாயிருக்குமுன்னு  சொல்றேன்..   அதக்கூட கேட்க மாட்டுறீயேம்மா....


நீ சொல்வதை கேட்க முடியாதுடா......நான்தான் முன்னாடி போவேன்.. நீதான் என்னை தூக்கி போகனும்--- அதற்குத்தான் ஒன்னை பெத்தென் வளத்தேன். உன் கடமையை  செய்டா...   .

அதன் பிறகு அவர் தாயிடம்  எதுவும் சொல்வதில்லை....சொன்னாலும் அவர் கேட்கமாட்டார்....  நாளாகி வாரமாகி, மாதமாகி. வருடமாகி கழிந்த ஒருநாள் அவரின் எழுந்து  நடமாட ஒரு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தார்

அவரின் தாய் என்ன நினைத்தாரோ ..அந்த ஊன்றுகோலை கடைசி வரைக்கும் பயன்படுத்தவில்லை. ஊன்றுகோல் இல்லாமல் தனியாக எழுந்து நிற்க முயன்றபோது தவறி விழுந்து இடுப்பெலும்பு பலத்த சேதமாகி  படுக்கையில் விழுந்தார்.

எலும்பு முறிவு மருத்துவமனைக்கு தூக்கி சென்று காண்பித்தபோது.. நல்ல மனது உள்ள அந்த மருத்துவரோ  தாயார்  வயது முதுமை அடைந்துவிட்டார் இடுப்பு எலும்பை சரி செய்ய முடியாது.. சில நாட்கள்தான் உயிருடன் இருப்பார் . வேறு மருத்துவமனைக்கு  சென்று பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். வலிக்கு ஊசி போட்டு சில மாத்திரையும் தந்து. வீட்டுக்கு  போங்கள் என்று அனுப்பி வைத்தார்.


வீட்டுக்கு வந்து படுத்த படுக்கையாக இருந்தவர் உயிர் பிரிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தன் மகனை ஈனக்குரலில் பல தடவை அழைத்தார். அந்த தாயின் பேரன் பேத்திகளும் அவரிடம் வந்து கூறிய போதும்  போகவில்லை

 சத்தியம் சர்க்கரை பொங்கல் என்று தெரிந்த போதும்..சாகப்போகும் தருவாயில் இன்னும் ஏதாவது  வாக்கு ,சத்தியம் என்று கேட்டுவிட்டால் அதை நிறைவேற்ற இந்தச் சூழ்நிலையில்  நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே. எல்லா வகையான ஆசைகளை எல்லாம் துறந்து ...கொடுத்த வாக்கை நிறைவேற்றவே தனக்கு  ஐம்பத்திஐந்து வயதாகிவிட்டது. அதனால் அவரின் தாய் உயிர் பிரியும் வரை அருகில் செல்லவில்லை. தாய் இறந்தபின்தான்   அதற்க்காக வருத்தப்பட்டார்.

சரியாக 20.09.2015 -ல் இரவு எட்டுமணி  வாக்கில் அவரின் தாய் பிரிந்தது.  முதன்முதலில் அவரின் உற்ற நண்பர் செல்வம்தான் முதலில் வந்தார்..பின் அவர் தமக்கையிடமும் அரின் கணவரிடமும்  சடங்கு சம்பிரதாயம், மூடநம்பிக்கை அற்ற வழியில் தன் தாயின் உடலை எரியுட்டுவதற்கு ஒப்புதலை பெற்றார். பின் அதற்கான செலவுக்கான பணத்தை தயார் படுத்துவதற்கு வெளியில் சென்றார்.

ஆட்டம் பாட்டம். கொட்டு ரேடியா. நீர்மாலை போன்ற எந்தவித சடங்கு  சாத்திரம் எதுவுமில்லாமல்   நன்றாக குளிப்பாட்டி. துக்கம் விசரிக்க வருபவர்கள் பார்த்தால் தூங்குவதுபோல் தெரிகிற மாதிரி ஐஸ் பெட்டியில் வைத்து மாலையில் நல்ல நேரம் பார்க்காமல் ஆம்புலன்ஸ் வண்டியில்  கோயிந்தா..கேயிந்தா என்ற கோஷமிடாமல்.  மாலைகளை ரோட்டில் போட்டு துவம்சம் செய்யாமல்  மிக அமைதியான முறையில்  சற்று தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரியூட்டினார்.... தாயை  இழந்து அனாதையான அந்த மகன்.



புதன் 18 2021

கடவுளை மறுக்கும் அறிஞ‌ர் ஸ்டீவன் ஹாக்கிங்ன் அனுபவம்,

 






2009-ம் ஆண்டு ரோமில் போப்பாண்டவர் "கடவுளும் பிரபஞ்சமும்"என்ற தலைப்பில் வாட்டிகன் கிறிஸ்துவ தலைமைச்சபையில் ஒரு மாநாட்டை கூட்டினார்.

அந்தமாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்கை போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு சென்றார் ஸ்டீபன்.

உலகம் முழுதுமிருந்து வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம் தலை தாழ்த்தி ஆசி பெற்றனர். ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தஹாக்கிங் முன் வந்த போப் முழங்காலிட்டு தலைகுனிந்து தன்னை வாழ்த்தும்படி கேட்டார். ஆம், கடவுளின் இருப்பை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்..!

மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த "swift-key joined Intel" கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.

நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய். இது பொய் என்பதை விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என ஆணித்தரமாக எடுத்துவைத்தார். இறுதியாக பேசிய போப் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மறுத்து அவர்களை மதம் தண்டித்தது தவறு என்று அறிவித்தார். அன்றாலும்... விஞ்ஞானத்துக்கு அப்பால் அதிசய சக்தி ஒன்று நிச்சம் இருக்கிறது என்று மதவாதிகளுக்கே உரிய வலிமையற்ற வாதத்தையும் முன்வைத்தார்.

ஹாக்கிங்கின் அன்று பேசியற்றில் சில..!

1. பிரஞ்சத்தில் இருண்ட குகைகள் (black holes) இருக்கின்றன. ஆனால், அந்த இருட்டை விட, விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டுதான் மிகவும் ஆபத்தானது.

2. #பலகோடிக்கணக்கான #மக்கள்கடவுளை #நம்புகிறார்கள் #என்பதற்காகவே அந்த #ஆதாரற்றபொய்யை #சுயசிந்தனையுள்ளமனிதனும் #ஏற்கதேவையில்லை.

3. கடவுள் என்ற ஒரு னி க்தி இருந்தால் கூட அது இயற்பியல் விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத்தான் இருக்கமுடியும்.

4. நல்லவேளை "பெருவெடிப்பு" பற்றிய என் உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்கு புரியவில்லை. இல்லையென்றால் எனக்கும் கலீலியோக்கு நேர்ந்த அதே கதிதான் நேர்ந்திருக்கும்.

விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட வேண்டும். விஞ்ஞானம் த்திற்கு முன் ஒருபோதும் மண்டியிடக்கூடாது.

விஞ்ஞானம் ஆதாரங்களின், தெளிவுகளின், நிரூபங்களின் அடிப்படையில் ஆனது.

உங்கள் அன்றாடவாழ்வின் செளகரியங்களும் திகளும் விஞ்ஞானம் அளித்தமா அல்லது ம் கொடுத்தஅதிசமா என்று டுநிலையோடு சிந்தித்தால் உங்களுக்கே அது புரியும்


சனி 31 2021

குத்தாமல் குடலை உறுவும் கலை

 இன்று காலை 11மணி வாக்கில் என் வீட்டீற்கு நாலைந்து அதிகாரிகள் வந்தார்கள்.   அவர்கள் எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் என்று பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது. வந்தவர்கள் என் பெயரைச் சொல்லி கேட்டார்கள்.

என்ன விபரம் என்று கேட்பதற்கு முன்னமே நான் ஊகித்துக் கொண்டன்.

ஒரு அதிகாரி வழக்கு போட்டு இருக்கீறீர்களா?? என்று கேட்டார்.

“ ஆமாம்” என்றேன்.

“ வெறும் மெமோதான் வந்திருக்கு .ஆதாரம் எதுவுமில்லை. உங்களின் ஆதாரங்களின் நகல்களை எங்களுக்கு தரவும் ” என்று கேட்டார்.

நான். மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இருந்துதானே, தங்களுக்கு வந்திருக்கும் அவர்களிடம் கேட்டுப் பெறலாமே? என்று சொன்ன போது ஆதாரம் எதுவும் வரவில்லை நீங்கள்தான் தரவேண்டும் என்றார்.

ஒரிஜினல் ஆதாரம் கோரட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நகல் வக்கிலிடம் இருக்கிறது என்றபோது..... வழக்கில் உள்ளவர்கள் எல்லோரும் திங்கள்கிழமை நாங்கள் வரும்போது நகல்கள்மட்டும் எங்களிடம் கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

போலீஸ் ஸ்டேசன் ஆனாலும் மாநகராட்சி ஆனாலும் சரி, வட்டாட்சியர் ஆனாலும் சரி , என் தரப்பு ஆவணத்தை தரும்போது  பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு எதுவும் எனக்கு வழங்கப்படுவது இல்லை. நான் அலைந்து திரிந்து வாங்கும் ஆவணம் எல்லாம்..குத்தாமல் குடலை உறுவுவது போல என் எதிராளிகள் கைளில் கிடைத்துவிடுகிறது.

இதனால் வெறுத்து போன நான்... வந்த அதிகாரிகளின் ஒருவரிடம் தொலைபேசியில்  உங்கள் வக்கிலிடம் கேட்டு பெறலாமே?? என்றபோது

அந்த ஆதிகாரி..“ எங்க வக்கிலிலுக்கு இதுதான் வேலையா? என்றார். மனதுக்குள் சிறிது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எனக்கு...வக்கிலின்..வேலையே அதுதானேய்யா....

சரி, நான் தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது... அதற்கு அவர், தரவில்லை என்றால்.  நாங்கள் திருப்பி அனுப்பி விடுவோம்.என்றார்.

சரி, அப்படியே! செய்யுங்கள் என்றேன்..

பிறகு, நானா புலம்பினேன். ஆமய்யா....என் ஆவணத்த வாங்கி... என் எதிராளிடம் தர...  நீங்க கேட்டவுடன்...தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கனும், பொது மக்களிடம் வாங்கும் மனுவுக்கு உடனே நடவடிக்கை எடுப்பது மாதிரி,என் அப்பன் பெயரிலுள்ள வரியை என் பெயருக்கு மாற்ற ஆறு ஏழு வருடங்களாக அலையவிட்டவனுகல்ல  நீங்க....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சனி 20 2021

சத்ரபதி சிவாஜி காவி தலைவன் அல்ல..கோவிந்த் பன்சாரே

 

கோவிந்த் பன்சாரே




நேற்று சத்ரபதி சிவாஜியின் 19.2.1630  பிறந்தநாள். அவரை முஸ்ஸிம்களுக்கு எதிரானவராக காவி இந்துத்துவ அமைப்புகளால் காட்டப்படுகிறார். உண்மையில் அவருடைய வரலாறு  உண்மையாக சொல்லப்படவில்லை.

சிவாஜி என்பவர். ஔரங்சீப்பை எதிர்த்தவர், முஸ்ஸிகளுக்கு எதிராக களமாடியவர் . இந்துக்களின் தலைவர்  என்றுதான் காவிகளால் பிறர் மூளையில் ஏற்றப்பட்டுள்ளது.

 சிவாஜியின் உண்மையான வரலாற்றை மராட்டியத்தை சேர்ந்த கோவிந்த் பன்சாரே என்ற பொதுவுடமை இயக்கத்தலைவர், எழுத்தாளர் . சிவாஜியின் உண்மை வரலாற்றை “ யார் இந்த சிவாஜி” என்ற நூலை எழுதினார். சிவாஜி காவிகளின் தலைவன் அல்ல .காவியத் தலைவன் என்று ஆதாரங்களுடன் புத்தகத்தை எழுதினார். அதில் சிவாஜியின் படையில் மெய்க்காப்பாளராக இஸ்லாமியர்கள் இருந்தனர், படைத்தலைவர்களாக, நம்பிக்கை மிக்க அரசியல். தூதர்களாக இருந்தனர் என்று ஒரு பட்டியலையே சொல்கிறார். அதன்படி வீர சிவாஜியின் மெய்க்காப்பாளராக இரந்தவர் பெயர். மாதாரி திகடர் என்ற முஸ்லிம்தான்,இவர் பலமுறை சிவாஜியின் உயிரை காப்பாற்றியிருக்கிறார்.

மொகலாய மன்னர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய  விலைபோகாத நம்பிக்கையான  முஸ்லிம் தூதர் பெயர் ஹைதர். சிவாஜியின் பீரங்கி படைத் தளபதி பெயர். இப்ராஹிம்கான் இவரோடுதான் பீஜப்புர், கோல்கொண்டா அரசுகளை பிடித்தார்சிவாஜி.

கப்பற்படை தளபதியின் பெயர் தவுலத்கான். கொங்கன கடற்பகுதியில் மொகலாயர்களை எதிர்த்து வெற்றி பெற்றது இந்த தளபதியோடுதான். சிவாஜி 1630 ல் பிறந்து 1680ல் மறைந்தார். தன்னுடைய 16ம் வயதிலேயே மன்னரானார் என்பதெல்லாம் பொய் கதைகள். .1674ல்தான் மன்னராக முடிசூட்ட அனுமதிக்கப்பட்டார். சூத்திரன் படைக்கு தலைமை தாங்கலாமே தவிர அவன் மன்னன் ஆகக்கூடாது என்ற வர்ணாசிரமம்தான் சிவாஜி மன்னராக விடாமல் தடுத்தது. சிவாஜிக்கும் அவுரங்கசீப்பிற்கும் நடந்த போர் மண்ணிற்க்கான நடந்த போரே தவிர மதத்திற்க்கான  போரே அல்ல என்று கோவிந்த் பன்சாரே எழுதிய புத்தகம் 5 லட்சம் பிரதிகள் விற்றன. காவிகளின் பொய்யும் புனை சுரட்டும் நாடு முழுவதும் தெரிந்து மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள் என்ற காரணத்தால்தால்தான்  கோவிந்த் பன்சாரே அவர்களை  பரர்ப்பன இந்து மதவெறிக்கும்பல் சுட்டுக் கொன்றது.

சத்ரபதி சிவாஜியை பாசிச காவிக் கும்பல் இந்துக்களின் தலைவன் என்று பரப்பியது.. சிவாஜியை பற்றி  “அண்ணா அவர்கள் தனது “ சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகம் மூலம் வர்ணாசிரமத்தின் மூலம் இழைக்கப்பட்ட அநீதியை பற்றி   தமிழர்க்கு  பாலபாடமே நடத்தி விட்டார்.

 வர்ணாசிரமத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனக் கும்பல் விடாமல் இன்று சிவாஜியை முன் நிறுத்துகின்றன.     இந்த வீர சிவாஜியின் பிறந்த நாளோடு நிணைக்கப்படுபவர்கள், கோவிந்த் பன்சாரே மற்றும் அண்ணா அவர்கள்தான்


வரலாறு மறந்தவன்

திக்கற்று போவான்..

திசை மாறி போவான்.

 இந்து வெறி புளுகர்களிடம்  

கவனமாக நில்லுங்கள்.!!!

நன்றி!..

சனி 18 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -17-

 வரலாறு அறிவோம். திராவிடம் பற்றி

ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்ற உட்கார்ந்து சாப்பிட முடியாது.

எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும்.

சென்னையில் அன்றைய மவுண்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.

இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை
வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல.

இருப்புப் பாதைகள் போடப்பட்டு, இரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக

உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் இரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.

இயக்கத்தின் தொடக்கம்

இப்படிப்பட்ட சூழலில்தான் 1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க திராவிடர் சங்கம் என்று புதுப் பெயர் பெற்றது

பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், 

காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

பிராமணர் அல்லாதோர் நிலை

அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%. 

கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர். சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன? 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!

கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன?.

1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது. நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது. திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை
'திராவிடர் இயக்கம்’  என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.

திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால், 

1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் ‘பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3%’ என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது. 

இந்த நிலையில்தான் பெரியார், ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற பெருமுழக்கத்தை வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார். 

பின்னதாக, நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.

ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம்.

 டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 

மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்கள்

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள்.

2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து மேற்கொண்டுவரும் மாற்றங்கள்.

3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.

இவற்றில் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், பொதுத் தளத்தில் நின்று அரசியல் கட்சிகளுக்கான சமூக நீதி அழுத்தங்களையும் கொடுத்துவரும் திராவிடர் கழகம் வெளியிலிருந்து உருவாக்கிவரும் மாற்றங்கள் என்றால், இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிராமணியத்துக்குத் துணை போகும் காங்கிரஸை ஒழிப்பதே என் கடமை என்று கூறி காங்கிரஸிலிருந்து வெளியேறி வந்த பெரியார், காமராஜரின் ஆட்சிக்காக அதே காங்கிரஸைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தார் என்பதும் பெரியார் முன்மொழிந்த பல திட்டங்களையும் யோசனைகளையும் நிறைவேற்றியவர் காமராஜர் என்பதும் வரலாறு.

ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை தாங்கி தடுத்து நிறுத்தியது முக்கியமான ஒன்று. எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் கழகத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது. ஆகையால், திராவிடர் கழகம் பொதுத் தளத்தில் செய்த காரியங்களை இந்தச் சின்ன கட்டுரைக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதால், முன்னதாக நீதிக் கட்சி வடிவிலும் பின்னதாக திராவிடக் கட்சிகளுக்குப் பின்னின்றும் செய்த மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

நீதிக் கட்சி கொண்டுவந்த முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள்

■ நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921).

.■ பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).

■ கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.

.தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).

.குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925).

. கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).

.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).

.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).

சமூகமாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே
இருந்த நிலையில்,
பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது;

பனகல் அரசர் என்ன செய்தார்?

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை

இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர்
பனகல் அரசரையே சேரும்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300,

தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது.

இந்த பேதம் நீக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.

நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.

பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான்,  
1921ல் பள்ளிகளில்
இலவச நண்பகல் உணவு அளித்தார் 
இதற்காக
சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை
நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது.

இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு.

இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது.

பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன். 

தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.

திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த பெரும் மாற்றத்துக்கான நகர்வுகள்

திமுகவின் முதல் முதல்வரான அறிஞர் அண்ணா மிக விரைவில் காலமாகிவிட்டதால், இரண்டாண்டுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்தார். எனினும், திராவிடக் கட்சிகள் செல்ல வேண்டிய திசையைச் சுட்டும் வகையில், நான்கு முக்கியமான முடிவுகளை அவர் முன்னெடுத்தார்.

1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 

2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்.

3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு.

4. *அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள் ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களும் ஏன் திராவிடத்தை வெறுக்கிறார்கள் என்று காரணத்தை புரிந்திருப்பீர்கள் தமிழர்களே ஜாதி மத வேறுபாடின்றி தமிழர்களாக ஒன்றினைவோம் தமிழர்களாகவே வாழ்வோம்


அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...