புதன், பிப்ரவரி 05, 2020

செல்வத்தூல் செல்வம் .....??????????

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைக்கான பட முடிவுகள்"

 வருத்தமாகத்தான் இருக்கிறது
 எனக்கு என்ன
செய்ய எல்லாம்
முடிந்துவிட்டது இருக்கிற
வரைக்கும் காலத்தை
இப்படியே ஓட்ட
வேண்டியதுதான். எல்லா
பரிசோதனையும் செய்து
பார்த்தாகி விட்டது
கிழவனை குமரானாக்கி
விட முடியுமா?
முடியாதுதானே! அதே
போல்தான் செல்வத்தூல்
செல்வமும் என்னை
விட்டு எல்லை
கடந்து போய்விட்டது
இப்பொழுது எல்லாம்
தாங்கள் என்ன
 பேசுகிறிர்கள் என்று
வாய் பார்த்துதான்
புரிந்து கொள்ள
 என்னால் முடிகிறது

ஒரே அறை
விட்டேன் உன்
செவுள் பேந்து
போகும் என்று
பேசுவாங்க இல்லீயா
அது என்
விசயத்தில் நிருபண
மாகிவிட்டது அடித்தவனை
அப்போதும் சரி
இப்போதும் சரி
என்னால் ஒன்றும்
செய்ய முடியாது

காக்கி உடையில்
பெரிய பதவியில்
இருந்த  அதிகார
திமிரை என்னிடம்
காட்டியவன் மீது
நான் எந்த
அதிகாரத்தால் அவனை
தண்டிப்பது..உயிரை
இழப்பதற்கு பதில்
செல்வத்தூல் செல்வமான
 செவி செல்வத்தை
இழந்தேன்....அது
பெரிய கதை...
அந்தக் கதை
உங்களுக்கு பயத்தை
ஏற்படுத்தும் என்பதால்
நான் சொல்லவில்லை

10 கருத்துகள்:

 1. என்னால் ஆசிரியர் பேசுவதை கேட்க முடியாது... எழுதியிருப்பதைத்தான் படிக்க முடியும் ஆசிரியரே..!

  பதிலளிநீக்கு
 2. மீண்டு வந்து விடுங்கள்
  மருத்துவ உலகின் உதவியோடு!

  பதிலளிநீக்கு
 3. அதிகாரம் எப்போதும் தன் கோர முகத்தைத் தான் காட்டும். ஆனாலும் எதில் இருந்தும் மீண்டு வரும் சக்தி நமக்கு உண்டு. நம்புங்கள். முன்னேறுங்கள். முடங்கி நிற்பது முயற்சியாளனுக்கு அழகல்ல....!!!!

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடங்கி நிற்பது முயற்சியாளனுக்கு அழகல்ல....!!!! முயங்கிவிடவில்லை நண்பரே!

   நீக்கு

.........