பக்கங்கள்

நிகழ்வுகள். அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள். அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 05 2020

செல்வத்தூல் செல்வம் .....??????????





செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைக்கான பட முடிவுகள்"

 வருத்தமாகத்தான் இருக்கிறது
 எனக்கு என்ன
செய்ய எல்லாம்
முடிந்துவிட்டது இருக்கிற
வரைக்கும் காலத்தை
இப்படியே ஓட்ட
வேண்டியதுதான். எல்லா
பரிசோதனையும் செய்து
பார்த்தாகி விட்டது
கிழவனை குமரானாக்கி
விட முடியுமா?
முடியாதுதானே! அதே
போல்தான் செல்வத்தூல்
செல்வமும் என்னை
விட்டு எல்லை
கடந்து போய்விட்டது
இப்பொழுது எல்லாம்
தாங்கள் என்ன
 பேசுகிறிர்கள் என்று
வாய் பார்த்துதான்
புரிந்து கொள்ள
 என்னால் முடிகிறது

ஒரே அறை
விட்டேன் உன்
செவுள் பேந்து
போகும் என்று
பேசுவாங்க இல்லீயா
அது என்
விசயத்தில் நிருபண
மாகிவிட்டது அடித்தவனை
அப்போதும் சரி
இப்போதும் சரி
என்னால் ஒன்றும்
செய்ய முடியாது

காக்கி உடையில்
பெரிய பதவியில்
இருந்த  அதிகார
திமிரை என்னிடம்
காட்டியவன் மீது
நான் எந்த
அதிகாரத்தால் அவனை
தண்டிப்பது..உயிரை
இழப்பதற்கு பதில்
செல்வத்தூல் செல்வமான
 செவி செல்வத்தை
இழந்தேன்....அது
பெரிய கதை...
அந்தக் கதை
உங்களுக்கு பயத்தை
ஏற்படுத்தும் என்பதால்
நான் சொல்லவில்லை

ஞாயிறு 18 2019

அதிகாலை கனவு-50.














செத்து போவது எந்தன் உடம்பு மட்டுமே க்கான பட முடிவு


க...க..கதை கேட்பதில் ஆர்வம்தான்...


தெரிந்தவர்களோ. தெரியாதவர்களோ,
 நண்பர்களோ.வேறு சிலரோ..
கதை சொல்லும்
போது,. கதை
கேட்பதில் ஆர்வம்தான். ....
 ஆனால் அப்படி
கேட்ட கதைகள்
அதிகாலை கனவில்
வந்து கொல...
கொலய்யா..முந்திரிக்கா...
என்பேரு கத்திரிக்கான்னு
 மறக்காமல் வந்து
ஆட்டம் போடுவதிலிருந்து
தப்பிக்க முடியவில்லை..

அப்படி வரும்
கதைகளில் கதாநாயகன்
வேறு நபராக
இருந்தாலும்..ஏதோ.
.நான் அதில்
சம்பந்தபட்டு   பக்கத்தில்
 இருந்து பார்ப்பது
போல் தோன்றுகிறது....

 இதுவும் காலத்துக்கேற்ற.
டிஜிட்டல் கனவோ..!!!!!!!!

என்னவோ...ம்ம்.......

கேட்ட கதை.. கனவில் வந்த நிலை..

நான் நாற்பது வயதில் இறந்துவிட்டேன்... என்னை உலுக்கி ஒரு பெண் அலறுகிறாள். பிற்பாடு தெரிகிறது அது என் மனைவி என்று  முகம் யாரென்று தெரியவில்லை.. அருகில்  தவழும் வயதில் ஒரு குழந்தை.. அது என் மகனாம்..
 முகம் தெரியாத என் அப்பா..முகம் தெரிந்த என் அம்மா... அக்கா மற்றும் மருமகன் மருமகள் உற்றார் உறவினர் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருத்தாராக வந்து செத்துப் போன என் உடலுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறார்கள்... வந்தவர்களில் ஒருவர் எனது பாஸ் அதாவது நான் வேலை செய்த கம்பெனி முதலாளி  அவரைக்கண்டதும் என் மனைவியானவள் என் குழந்தையை  சுட்டிகாட்டி அழுகிறாள்..  அதிர்ச்சி அடைந்த என் முதலாளி என் உடலருகே வந்து பாவிப்பயலே என்றபடி என் தொடையில் ஊசியால் குத்துகிறார்... தமிழ்மணம் மாதிரி.. செத்துப்போனவன் எப்படி்? கத்திருப்பான்.????



நிஜத்தில் ஆ..ஆ.ஆ..வென்று கதறி சத்தமிட்டுஎ  ஊசி குத்தின தொடையை பார்த்தேன்....... நிஜத்தில் எதோ கடித்தது.கனவில் ஊசி குத்தியது.

இது எப்படி...???
















ஞாயிறு 03 2019

நினைவலைகள்-77.

 மறுபடியும்  மொதல்ல இருந்தா..................!!!!!!!!!!!!!!!!!

டீ கடை பெஞ்ச் க்கான பட முடிவு






அவர திருத்துவது
இருக்கட்டும் மொதல்ல
உங்களத்தான் திருத்தனும்

நான் கேட்கிற
கேள்விக்கு ரெம்ப
நாணயமாக நீங்க
பதில சொல்லனும்

டீ..வித்தவரு
டீ விக்கிற
வேலையை பாக்கம
பிரதமரா ஏன்?
ஆனாரு...இன்னொருத்தரு
 டீ ஆத்துற
வேலய செய்யாம
இணை துனை
முதல் அமைச்சரா
ஏன்? ஆனாரு

இதோடு சரக்கு
அடிக்கிறவுக தொட்டு
நாக்குல வப்பாங்களே!
ஊறுகாய் மாமின்னு
சொல்லுவாங்களே
 அந்த மாமி
ஊறுகாய் போடுற
வேலய பாக்காம
செய்யாம ஒரு
தேர்தல்ல நின்னு
கூட ஜெயிக்காம
ராணுவ அமைச்சராக
ஆனது ஏன்?

ஏன்? பாஸ்
உங்க முகம்
இப்படி அஷ்ட
கோணலா போகுது...
மொதல்ல இதுக்கு
பதில  சொல்லுங்க..
பாஸ்.............பாஸ்

ஞாயிறு 09 2018

நினைவலைகள்-35.

 திட்டும்  பின்அறிவுரையும்.




யாரைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவர். அவனை திட்டிக் கொண்டு இருந்தார். சமாதனம் செய்யப்  போகிற வரையும் திட்டி தீர்ப்பதோடு சில கேள்வியோடு உத்தரவாதம் கேட்ப்பதால்  ..அவர் திட்டும்போது யாரும் ஊடே போவதில்லை.. அவராக பார்த்து எதாவது கேட்டால் என்னவென்று எதுவும் புரியாமல்  அவருக்கு சார்பாக தலையை ஆட்டிவிட்டு ஒதுங்கி கொண்டனர்.

இது வழமையாக நடந்து கொண்டிருக்கும்போல....அன்று நடந்த திட்டில் நான் மாட்டிக் கொண்டேன்..அவர் கேட்ட எல்லாவற்றுக்கும் சளைக்காமல் பதில் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர். அவர் தன் மகனை அன்றிலிருந்து தன் மகனை திட்டுவதையே விட்டு விட்டார்.

என்னைப்பற்றி விசாரித்தவர்...நான் என்னைப் பற்றி உள்ளதை சொன்னதைக் கேட்டு வியப்பால் ஆச்சரியமானார்.. இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தனா...? என்று நம்ப முடியாமல் வியந்தார். என்னைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்தாரோ அல்லது நான் சொல்லியது உண்மைதான் என்று நம்பிக் கொண்டாரா..என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால்  ...திட்டுவதை குறைத்துக் கொண்டு..நிறுத்தியே விட்டார் என்றே எனக்கு தோன்றியது... நான் அந்தப் பக்கம் செல்லும் போது அவரின் குரல் கேட்பேதில்லை என்பதிலிருந்து அறிந்து கொண்டேன். நேரில் பார்க்கும்போது என் நலன் பற்றி விசாரிப்பார். தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை. கடையில் சாப்பிடும் பழக்கம் இல்லையென்று சொல்லி மறுத்துவிடுவதால் அவருக்கு சிறிது வருத்தம்.

அவர். அவர் மகனை திட்டுவிட்டு அறிவுரை சொல்வதை கேட்ட நான்.. அதிலிருந்து நானும் சில வற்றை தெரிந்து கொண்டேன்..

சிக்கனத்திற்கும் கஞ்சனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்றால்

 தேவைகள் அதிகமா இருந்தாலும் சிறிதளவு உண்பது சிக்னம். அதையும் உண்ணாமல் இருப்பது கஞ்சத் தனம் ( கிடைக்காமல் அல்லல்படுவது வேறு)

ஒரு வேலையை முன்னிட்டு செல்லாமல்.. கூடவே  போகிற வழியில் ஆகிற சில வேலையை முன்னிட்டு செல்வது..-- இது மாதிரியாக சில ..

தும்பை விட்டுட்டு வாலை பிடிப்போம் என்ற எண்ணத்தில் வாலையும் பிடிக்க முடியாமல் விட்டகதையாக..எந்த பிடிமானமும் இல்லாமல் இருக்கும்  எனக்கு சற்று  ஆறுதலை தந்தது...

சுற்றி இருப்பவர்களாலும்  உறவுக்காரர்களாலும்  எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும்  பொருள் சேதத்தையும் சற்று குறைக்கும் வழியாக  அவர் அறிவுரை தெரிந்தது.




யாரிடமும் எவரிடமும் யோசனை கேட்பதில்லை...இதுவரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை.  அப்படியே சில நேரங்களில், சில சம்பவங்களில் , மன உளச்சலில் இருக்கும்போது தெரிந்தவரிடமோ. அல்லது வேறு யாரிடமோ, இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால் “ அடே அப்பா..உனக்கு தெரியாத யோசனையா  ” என்று என்னை திருப்பி கேட்பார்கள்..


உண்மையில் என் வாழ்நாளில் இன்றுவரை எவ்வளோ இம்சைகளையும் துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்தபோதும் நான் இன்று வரையில் அழுதது இல்லை. என் தாய் இறந்தபோதும் சரி என் நண்பர்கள் இறந்த போதும்சரி, போலீஸ்காரன்கள் என்னை சரமரியாக அடித்து வெளுத்த போதும் சரி அழுததில்லை. என் கண்ணில் ஒரு சொட்டு கண்ணிர் வந்ததில்லை.. அதற்கு பதிலாக என்னவோ  இரு சக்கர வாகனத்தில்  மூப்பதை கடந்து நாற்பது வேகத்தில் செல்லும்போது என் கண்களிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. யாருக்கும் பயன்படாமல்.........

உண்மையில் “ எல்லாம் தெரிந்தவனுமில்லை.. எதுவுமே தெரியாவனுமில்லை” என்ற சொல்லாடல்தான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று நிணைக்கிறேன்.   வருடம் அறுபதை நெறுங்கும் என்னை பார்ப்பவர்கள் பொறாமைதான் படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பதாக... தலையும் மீசையும் தாடி முடியெல்லாம் நரைத்து இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்களோ அல்லது அவர்களின் கண்களுக்கு தெரியவதில்லையோ..? தற்போது   விபத்தொன்றில் நான்  செவிடானாக போனது  உள்பட...

சிலர் வயது ஆக ஆக..எல்லாம் வரும் என்று பய கொள்ள வைக்க முயலுகிறார்கள். நானும் பயந்தவன்தான் ஆனால் சாவதற்கு பயப்படவில்லை.. எப்போதோ தொலைந்திருக்க வேண்டியவன். எப்போதும் தொலையாதிருக்க முடியுமா...??








வியாழன் 21 2017

மீண்டும் தொடரும் இம்சைகள்.....

மாலை மூன்று மணி இரு காவலர்கள் அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வந்தார்கள். வந்தவர்கள் முன் அவர் ஆஜர் ஆன போது வந்தவர்கள் சொன்னார்கள். உங்கள் மீது குருசாமி மகன் செல்லமணி புகார் கொடுத்து இருக்கிறார் என்றார்கள்.. என்னவென்று அவர் கெட்டபோது.. அவர்கள் வீட்டை மராமரத்து செய்வதை நீங்கள் தடுப்பதாக என்றார்கள். அவர் மீது புகார் கொடுத்த தெரு கோயிலின் பூசாரி குருசாமியின் மகன் செல்லமணி மற்றும் அவனின் தம்பியின் இரண்டு மனைவி மார்கள் என்று ஒரே கும்பல் வந்து அவர்கள்  தரப்பு பொய்யை குப்பையாக கொட்டியது...அவர் அமைதியாக இருந்தார். வந்த காவலர்கள் அவரை பார்த்த போது அவர்கள் சொல்வதை முழுமையாக கேளுங்கள் பின் என் தரப்பை சொல்கிறேன் என்றார்.

ஒரு வழியாக புகார் கொடுத்தவனின் வீட்டு கும்பல்களின் சத்தம் சிறிது குறைந்ததும் அவர் சொன்னார். எனது இடம்  அதுவரை இருக்கிறது என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார். இவர்களுக்கு ஆள்பலமும் பண பலமும் இருப்பதால்  எனது இடத்திற்குள் ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளார்கள்.. நீங்கள் இறங்கி வந்த பாதையை இவர்கள் பாதை என்று என்வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டார்கள். இவர்கள் என் மீது தொடுத்த வழக்கு  எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றதும் பூசாரி சவுண்டு விட்டு தொடங்கி வைத்ததும் எல்லோரும் மீண்டும.. சலசல வென்று பேச ஆரம்பித்தனர்

வந்த காவலர்கள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவரிடம்  நீங்க எட்டு மணிக்கு வந்து எஸ்ஐயை வந்து பாருங்க..என்று விட்டு பூசாரி குருசாமியை பார்த்து நீங்களும் எட்டு மணிக்கு ஸ்டேசனுக்கு வாங்க என்று  நடையை கட்டினர்
அவர் வந்திருந்த காவலர்களுடன் மெயின் ரோட்டு வரைக்கும் வந்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

அவரைப் பார்த்து சார் நீங்க கம்யூனிஸ் கட்சியா என்று கேட்டார் வந்த இருவரில் ஒருவர் அவர் இல்லை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தில் உறுப்பினர் என்றார்.

நீங்க ..அவுங்க எல்லாம்  ஒரே சமூகமா என்றார்.  இல்ல சார்.. அவுங்க என் சொத்த அபகரிக்கிற சமூகம்..நான் என் சொத்த பாதுகாக்குற சமூகம் சார். என்ற போது இரு காவலர்களும் சிரித்தனர்.. பின் அவரைப்பற்றி கேட்டபோது அங்கு நின்று இருந்த பூசாரியை சுட்டி காட்டி.. அவர் சொன்னார். பெரிய இம்சை சார். அந்தாளு இம்சையினாலயே நான் திருமணம் முடிக்க முடியாமல்...ஆகிவிட்டது என் வீட்டில் இருந்தவர்கள் என் அக்காவின் மகன்கள். இந்தாளுவின் கூட்டத்துக்கு பயந்து..ஊரில் இருந்து வந்து வேலையை முடித்துவிட்டு ஊறுக்கு அனுப்பி விடுவேன் என்றபோது....வந்த காவலர்கள் மேற்க்கொண்டு விசாரணை செய்யாமல்  எட்டு மணிக்கு வந்திருங்க சார் என்று சென்றனர்

திரும்பி அவர் விட்டுக்கு வந்தபோது அவர்களின் வசவு சத்தம் ஒய்ந்த பாடில்லை....எதுவும் பேசாமல் விலகி வந்து வீடு சேர்ந்தார் பேருக்கு அன்றைய மதிய உணவை வயிற்றுக்குள் இறக்கி விட்டு. செய்து கொண்டிருந்த கை வேலையை முடித்துவிட்டு... அவரும்  ஒரு மனு எழுத ஆரம்பித்தார்



பெறுநர்:         காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்,
                             காவல் நிலையம், மதுரை
            
அய்யா,
         நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன். என் மீது குருசாமி மகன் செல்லமணி புகாரில் கூறப்பட்டுள்ள வீட்டில் செல்லமணி வசிக்கவில்லை அவரது தம்பி முருகன்தான் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.  மேற்படி வீட்டை செல்லமணியின் அப்பா குருசாமி கட்டும்போதே எனது இடத்தை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டுள்ளது  ..குருசாமியின் ஆக்கிரமிப்பை எனது தாயார் தடுத்தும் என் தாயாரையும் மீறி குருசாமி என்பவர் தனது ஆள்பலத்தால் பண பலத்தால் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டைக் கட்டி முடித்தார். .குருசாமியின் ஆக்கிரமிப்பை என் தாயார் எதிர்த்ததால்  குருசாமி  என் வீட்டுக்கு தீ வைத்தார்.இந்த பிரச்சனை நடந்த சிறிது காலத்தில் நான் குடியிறுக்கும் வீடு மற்றும் இடம் சம்பந்தமாக என் மீதும் என்தாயார் மீதும் அய்யணன் அம்பலம் என்பவர் மாவட்ட முன் சிப் கோரட்டில் சிவில் வழக்கு தொடுத்தார்.
         தற்போது  அய்யணன் அம்பலம் தொடுத்த வழக்கானது நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகிவிட்டது. தள்ளுபடியான நீதிமன்ற தீர்ப்பானையின் மூலம் அய்யணன் அம்பலம் பெயரிலுள்ள வீட்டுவரி ரசீது எனது தந்தை நாகன் பெயருக்கு மாற்றப்பட்டது.. மேற்படி எனது  வீடு சேர்த்து மொத்த இடத்தின் அளவு கிழமேல் 93அடியும் தென்வடல்29 அடியும் உள்ளது  இதற்கு ஆதாரமாக அய்யணன் அம்பலம் பெயரில் பதிவு பெற்ற பத்திரம் உள்ளது குருசாமியின் இடமானது   கிழமேல்30ஆகவும் தென்வடல்33ஆகவும் அவருடைய பத்திர ஆவணத்தில் உள்ளது. இந்த உண்மை நிலையை மறைத்து செல்லமணியின் அப்பா குருசாமி  எனது இடத்தின் வடக்கு பக்கத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி எனது இடத்தை ஆக்கிரமித்து  வீட்டை கட்டியுள்ளார். குருசாமியைத் . தொடர்ந்து குருசாமியின் அக்கா மகனும் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளனர். மேற்படி ஆக்கிரமித்த இடத்தை உறுதி படுத்திட வேண்டும் என்ற காரணத்துக்காவே வீடு பராமரிப்பு என்று சாக்கு போக்கு சொல்லி செல்லமணி என்மீது புகார் கொடுத்துள்ளார். இந்த குருசாமி என்பவர் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே “எனக்கு அங்கு வரை இடமுள்ளது இங்கு வரை இடமுள்ளது என்று பொய்யாக சொல்லி இடப்பிரச்சனையை காரணம் காட்டியே   எனது தாயாருக்கும் எனக்கும் பலவித தொல்லைகள் கொடுத்து  வந்துள்ளார்.
           இந்த நிலையில் எனது வீட்டிற்கு செல்லும் வடக்கு பக்க தெருவிற்கு பாதாளசாக்கடை,சிமெண்ட் தளம் அமைக்க மாநகராட்சியில் அதிகாரிகள் வந்த போது, குருசாமி என்பவரும், காமாயி என்பவரும் ஆளுக்கு ஐந்தடி ஐந்தடி போட்டு இருப்பதால் இந்த தெரு பாதை எங்கள் இருவருக்கும் சொந்தமான பாதை  என்று கூறி பாதாள சாக்கடை, சிமெண்ட்தளம் அமைப்பதை தடுத்துவிட்டனர்.
          இதை எதிர்த்து  எனது வீட்டிற்கு செல்லும்  மேற்படி தெரு மாநகராட்சி தெருவா.? தனியாருக்கு சொந்தமான தெருவா? என்று மாநகராட்சியிடம் மனு செய்து கேட்டபோது.. அது மாநகராட்சி தெரு என்றும் நான் பாதாளசாக்கடை இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று எனக்கு பதில் கடிதம் அளித்தனர்.
          அதைக் கொண்டு நான் எனது வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முயன்றபோது மேற்படி தெரு அவர்களுக்கு சொந்த மானது என்றும் மேற்படி தெருவில் நான் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கு கூடாது என்று  என்மீது வழக்கு போட்டு இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே அந்தத்தெருவழியாக போடப்பட்ட தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் குழாய் இணைப்பு பெற்று உள்ளேன். அதை உடைப்பதற்கு முயற்சி செய்வதை மாநகராட்சி அலுவலரிடம் முறையிட்டு உள்ளேன்.
         மேற்க்கொண்டு குருசாமி என்பவர்  மாவட்ட முன்சிப் கோர்ட்டில்  என்மீது போட்ட வழக்கை எதிர் கொண்ட போது,பல வாய்தா கொடுத்தும் விசாரணைக்கு குருசாமி ஆஜராகததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அந்த வழக்கை கோப்புக்கு எடுக்கச் சொல்லி வழக்கு போட்டார். அந்த வழக்கின் விசாரணையின் போதும் குருசாமி ஆஜராகததால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
          இந்த நிலையில் நான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடுத்து மேற்படி தெரு  குருசாமிக்கு சொந்தமானதல்ல, அந்தத் தெரு மாநகராட்சி தெரு என்று  உத்தரவு பெற்றேன்.  மேற்படி உத்தரவை குருசாமி என்பவர்  அவர் பெற்றதாக மோசடி செய்து பாதையில்லாத வாடகைக்கு விட்டுள்ள அவர் வீட்டுக்கு பாதை வேண்டும் என்பதற்காக. அவர் வீட்டு பாதாள சாக்கடை இணைப்பு குழாயை நான் இல்லாத நேரம் பார்த்து எனது இடத்தில் பதித்துவிட்டார்.. ஏற்கனவே, சிமெண்ட் தளம் போடாமல் விட்டதால் பள்ளமாக இருந்த தெருவை  பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கிறேன்  என்று திட்டமிட்டு மேலும் பலமுறை தோண்டி நான் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாதவாறு வேண்டுமென்றே தெருவை பள்ளமாக்கி பாதையை சுறுக்கி விட்டார்..
         தற்போது அவர் ஆக்கிரமித்து  கட்டியுள்ள வீட்டின்  எனது  இடத்தை அவர் இடம் என்பதை உறுதி படுத்துவதற்காக வீட்டு சுவர் பராமரிப்பு என்று  பொய் சொல்கிறார்.

         ஆகவே. அய்யா அவர்கள் நான் இணைத்துள்ள எனது இடத்திற்கான பத்திர ஆவணங்களையும். செல்லமணியின் அப்பா குருசாமியின் பெயரில்உள்ள பத்திர ஆவணங்களையும் பரிசீலனை செய்து
குருசாமி ஆக்கிரமித்துள்ள எனது இடம் பத்திர ஆவணங்களின்படி அவர்களுடையதாக இருந்தால் உரிய நீதி மன்றத்தின் மூலம்  உத்தரவு பெற்று பராமரிப்பு வேலை செய்யவும். எந்த உத்தரவும் பெறாமல் ஆக்கிரமித்துள்ள எனது இடத்திற்குள் பராமரிப்பு என்ற பெயரில்  அத்துமீறி மேலும் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்திட வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

மதுரை:                                   தங்கள் உண்மையுள்ள
19/12/2017

இணைப்பு நகல்கள்-
1.   அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள எனது இடத்தின் பத்திரம்
2.   நீதி மன்ற தீர்ப்பானையின்படி அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள
வீட்டுவரி எனது தந்தை நாகன் பெயரில் மாற்றிய உத்தரவு கடிதம்.
3.    எனது வீட்டுக்கு செல்லும்  தெரு பாதையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி மாநகராட்சி மைய அலுவலகம் அனுப்பிய கடிதம்.



நிணைவுக்கு வந்தவற்றை மட்டும் எழுதி இணைப்புகளை நகல் எடுத்து 
தயார் செய்து முடித்த போது மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. பின் முகத்தை கழுவி தயார் படுத்தி ஸ்கூட்டி வண்டியில் சென்றபோது குருசாமியின் மருமகள்கள்.. குருசாமியின் தம்பி பொண்டாட்டி காமாயி போன்றவர்கள் தெருவை ஆக்கிரமித்து கட்டியுள்ள கோயிலின் முன் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள். பல தடவை ஒலி எழுப்பியும் கேட்காதவர்கள் போல் கேட்டு மெதுவாக  ஏதோ அவருக்கு இரக்கப்பட்டு வழி விடுவது போல் வழி விட்டனர்

ஆக்கிரமிப்பு செய்யப்படாத தெரு.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மேற்கூறை அமைக்கப்பட்ட தெரு.

படம்--இரக்கப்பட்டு வழி விடப்பட்ட தெரு.முகப்பு .


தொடரும்....


அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...