ஞாயிறு 09 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --33-

 

சென்னை மெரினாவில் சுழலும் சிசிடிவி ...


சிசிடிவி கேமிராக்கள் ஏன் தேவைப்படுகின்றன? என்றொரு வினாவை எழுப்பினால், அதற்கு விடையாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. 1. குற்றம் நடந்த பிறகு குற்றவாளியை அடையாளம் காணவும் விரைந்து பிடிக்கவும் பயன்படுகிறது. 2. சிசிடிவி கேமிரா இருக்கிறது என்பதே உளவியல் ரீதியாக கண்காணிப்பு அச்சத்தை ஏற்படுத்தி குற்றம் நடப்பதை தடுக்கிறது. இவை சரியான காரணங்கள் தானா?

இதுவரை பிடிபட்டுள்ள குற்றங்களில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பிடிப்பதற்கு சிசிடிவி கேமிராக்கள் உதவியுள்ள வழக்குகள் எத்தனை விழுக்காடு? என்று ஏதேனும் கணக்கு இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளியை அடையாளம் காண்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி பெரிய அளவில் பங்களிக்காது. எடுத்துக்காட்டாக சுவாதி வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சிசிடிவி காட்சியைக் கொண்டு தான் ராஜ்குமாரை பிடித்தார்கள். ஆனால் ராஜ்குமார் தான் குற்றவாளி என்பதற்கு எந்த ஆதாரமும் கொடுக்க முடியவில்லை. சிறையில் வைத்தே கொன்றும் விட்டார்கள். எத்தனையோ வழக்குகளில் சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டுள்ளனர். எனவே, சிசிடிவி குற்றவாளிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவும் என்பதில் போதிய உண்மையில்லை. வணிக கடைகளிலெல்லாம் கட்டாயமாக சிசிடிவி மாட்ட வேண்டும் என்று காவல்துறை சொல்லியது. அதுவும், உள்ளிருந்து சாலையை கவனிப்பது போல் மாட்ட வேண்டும் என்று சொன்னது. இதன்மூலம் குற்றவாளிகளை பிடிக்கலாம் எனும் தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். வேறொன்றுமில்லை.

சிசிடிவிக்கு பிறகு குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்று கூறுவதற்கான எந்த புள்ளி விவரங்களும் இல்லை. சிசிடிவி உளவியல் ரீதியாக எந்த மாற்றத்தையும் குற்றவாளிகளிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக, மாற்று ஏற்பாடுகளை சிந்திக்க வைத்திருக்கிறது. கேமிராக்களை உடைப்பது, அந்தப் பகுதி மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் கேமிராவை செயலிழக்க வைப்பது, தொப்பி அணிந்து இறக்கி விட்டுக் கொள்வது, எதிரொளிக்கும் கண்ணாடிகளை பயன்படுத்துவது என்று எத்தனையோ வழிமுறைகள் புதிது புதிதாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அப்படியென்றால் இந்த சிசிடிவிக்களால் வேறு என்ன தான் பயன். மக்களை கண்காணிப்பதற்காக அரசுக்கு பயன்படுகிறது. மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், என்னென்ன உடுத்துகிறார்கள், தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பன போன்ற கோடிக்கணக்கான தகவல்கள் (டேட்டாக்கள்) நிறுவனங்களுக்கு தேவைப்படுகின்றன. இன்னும் வெளியில் கசியாத எவ்வளவோ ரகசியச் செயல்பாடுகளுக்காக அரசுகள் பயன்படுத்துகின்றன. தெளிவாகச் சொன்னால் அரசின் துறைகளுக்குத் தான் சிசிடிவிக்கள் பயன்படுகிறதே தவிர குற்றங்களைக் குறைப்பது என்று சொல்லப்படும் காரணங்களில் துளியும் உண்மையில்லை.

தகவல்  https://senkodi.wordpress.com/

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...