செவ்வாய் 11 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --34-

 

தெரி்ந்து கொள்ளுங்கள்....!!!


செய்யாத குற்றத்துக்கு தண்டனையாக தன் கணவனை கொலை செய்துவிட்டது அரசு.. தனது கோபத்தால் மதுரை மாநகரையே எரிக்கிறார். தன் உள்ளத்தில் எரிச்சல் பற்றி எரிகிறது. கோபத்தில் சிரிக்கிறார். ஆவேசமாக வேகமாக நடந்து செல்கிறார். சற்று நின்று திரும்பி பார்க்கிறார் நகரம் அனைத்தும் எரிந்து விட்டதா? என்று   அன்றைய அநீதிக்கு மதுரையை எரித்தவர் கண்ணகி -  

சிலப்பதிகாரம் / Silappathikaram (Tamil Edition) eBook ...

அவன் இளவரசன் ஒரு பேரழகியின் அழகில் கவரப்பட்டு, அந்தப் பேரழகியிடம் தன் காதைலை தெரிவிக்கிறான். அந்தப் பேரழகி இளவரசனின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அந்தப் பேரழகி தன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த போதும் கோபம் கொண்டு, எனக்கு கிடைக்காதவள். வேறு யாருக்கும் கிடைக்ககூடாது என்று, பழிவாங்கும் எண்ணத்துடன் பேரழகி முகத்தில் ஆசிட் வீசவில்லை..அந்த இளவரசன்  ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை. அந்தப் பேரழகியின் உணர்வுக்கு மதிப்பளித்து சென்றுவிடுகிறார்.--- அந்தப் பேரழகி 

Thinakaran : - சாதாரண குடிமகனை பாட்டுடைத் ...

ஒரு மனைவி தன் கணவனின் கபட வேடத்தை அறிந்து தன் கணவனை திருத்த முயலுகிறார்..அந்தக் கொள்ளைக்கார கணவனோ  கொலைகாரனாக மாற. தன் மனைவியிடம ஆசை வார்த்தை பேசி  தன் மனைவியை கொல்லவதற்க்காக மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். மலை உச்சியை அடைந்த பிறகுதான் அந்த மனைவிக்கு  தன் கணவன் தன்னை கொல்ல அழைத்து வந்திருக்கிறான் என்று தெரிகிறது.. பதறாமல் தன் கணவனிடம் பேசுகிறாள். உங்கள் கையால் நான் மடிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் நிறைவேற்ற தாங்கள் அனுமதிக்க வேண்டும். என்கிறார். வெற்றி அடைய போகும் மிதப்பில் அந்த கணவர் என்னவென்று கேட்க என் கணவரான உங்களை மூன்று முறை சுற்றி வந்தால் எனக்கு  மோட்சம் செல்லும் பாக்கியம் கிட்டும் என்று சொல்ல... அந்தக்  கொள்ளைக்கார கணவன் அனுமதி கொடுக்க..  தன் கொள்ளைக்கார கணவன் மேலும் கொலைகார கணவனாக மாறாதிருக்க.. மூன்றாவது சுற்று சுற்றி வரும்போது  அவனை  கீழே தள்ளி கொல்கிறார்.-இது கலைஞர் திரைக்கதைவசனம் எழுதிய மந்திரிகுமாரி படத்தின் கதையான   குண்டலகேசி

My Views: April 2016

சிலப்பதிகாரம், மணிமேகலை. குண்டலகேசி- இவை தமிழ் இலக்கிய காப்பியங்கள். இந்தகாப்பியங்களில் கூறப்படும் அறம் ..அவன் ஆணோ. கணவனோ, அரசனோ, ஆண்டவனோ.. எவனாயிருந்தால் அநீதி என்றால் அறம் தவறினால் அடங்காதே! அவனை எதிர்த்து போராடு என்று போதிக்கின்றன.

தமிழ் மொழி எப்பொழுதும் பெண்களை கொண்டாடுகிறது. உலகம் முழுவதுமே பெண்களை காலுக்கு கீழே அடிமைபடுத்தி வைத்திருந்த கால கட்டத்திலே பெண்களை மென்னை மிகு பொக்கிஷங்களாக போற்றி புகழ்ந்தது தமிழ் சமூகம்.

சங்க காலத்திலேயே. 47 பெண் புலவர்களை அதாவது தமிழ் எழுத்தாளர்களை கொண்டது தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில்கூட ஏழு பெண்கள்தான் உண்டு.. தற்போது கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும் பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொறித்து பயன் படுத்தும் அளவிற்கு தமிழ்ச் சமூகம் நாகரிகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றி புகழ்ந்து கொண்டாடியது தமிழ் சமூகம். தமிழ் மொழி, தமிழ் சமூதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம்  தாய் மொழி என்று பெண்களை கொண்டாடியதால்தான். பெண்கள் உலகத்தின் ஆணி வேர்கள்


இத்தகைய  பெருமை வாய்ந்த தமிழ் சமூகத்திற்கு எதிரான ஒரு சமூகம் ஒன்று இருக்கிறது. அது இந்தி என்ற வட மொழி சமூகம். அது ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்று சொல்கிறது.

வட மொழிகள் பெண்களை அடிமைதனமாக்கிறது. தேவ பாஷை என்று சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. அந்த சமஸ்கிருதத்தை பெண்கள் வாசிக்கவோ, பேசவோ.. சூத்திரர் ,பஞ்சமர்கள் போல  பெண்களுக்கும் அங்கே உரிமை கிடையாது.


பெண்களை அடிமைதனமாக்கும் வடமொழி இலக்கியம்.-

1. பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் ஒருவன் அவன்.  தன் மனைவியை சந்தேகப்பட்டு தீயில் இறங்கி பத்தினி என்று நிருபித்துகாட்டு என்று பணிக்கிறான். அவனின் மனைவியும் அவன் உத்தரவுக்கு கீழ்படிந்து எறியும் தீயில் இறங்கி தான் பத்தினி என்று நிருபிக்கிறாள்.. அதன் பிறகும் சந்தேகம் தீராத அவதார புருஷனான அவன். ஊராரின் சந்தேகத்தை காரணமாக காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை காட்டிலே தள்ளுகிறான். காட்டிற்கு சென்ற அந்தப் பெண். அங்கயே  இரண்டு குழந்தைகளை பெற்று  அவர்களை வளர்த்து மடிந்து போகிறாள் .இது ராமாயணம் என்று சொல்லப்படுகிறது.

Duraimurugan pandiyan on Twitter: "அறிவியல் ...

2. வயது முதிர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட அழகிய இளம் மங்கை.  கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன் என்று. அந்தப் பெண் வயது முதிர்ந்த கணவனுடன் மனமுவந்து வாழ்ந்து வருகிறாள். ஒரு கட்டத்தில் அந்த வயது முதிர்ந்த கணவன் குஷ்டரோகியாக ஆனபிறகும் அவனுடனே அந்த இளம் மங்கை வாழ்கிறாள்.. தாசியோடு கூட வேண்டும் என்று அந்த குஷ்டரோகி கணவன் கூறும் போதும் வெறுப்பு எதுவும் கொள்ளாமல்.. அவனை தாசி வீட்டுக்கு தூக்கிச் செல்கிறாள்.  அந்த தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை கூட்டி சுத்தம் செய்கிறாள்---இது நளாயினி கதை...

இப்படியான அடிமைத்தனமான  வட மொழி இலக்கியத்தை தமிழ்நாட்டில் புகுத்துவதற்காகத்தான். புதிய கல்வி கொள்ளை என்று கூறி பவனி வருகிறார்கள்..

தாசியின் வீட்டிற்க்கு தன் கணவனை ...


நன்றி! தமிழ் ஆய்வாளர்கள். தமிழ் அறிஞர்கள். தமிழ் சமூகத்திற்கு











4 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்னது ஒரு சதவீதம் தான்...

    தமிழைக் கெடுக்க பல்லாண்டுகளாக வேலை நடந்து கொண்டு வருகிறது...

    பதிலளிநீக்கு
  2. நான் சொன்னது ஒரு சதவீதம் தான்.. என்று சித்தர் சொன்னதை தாங்கள் படிக்கவீல்லையோ....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்