வெள்ளி 04 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -88.....

 



Part 1.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மோசடி என்ன என்று கேட்டால், அது 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பார்கள். ஆனால் அது ஊழல் இல்லை என்று நீதிமன்றமே கூறினாலும் ஏற்கமாட்டார்கள். "ஒரு பொய்யை திரும்ப திரும்ப  சொன்னால் அதை உண்மை என்று மக்கள் நம்புவார்கள்" என்ற கோட்பாட்டை ஹிட்லரின் ஆலோசகரான கோயபல்ஸ் நிருபித்து காட்டினார். அவரை விட மிக தீவிரமாக அந்த கோட்பாட்டை பயன்படுத்தி கொள்பவர் இந்திய பாசிச கட்சியின் தலைவர் அமித்ஷா. 


November 8, 2016. Demonetization அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் இந்தியாவிலே அதிகபட்சமான பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த ஐந்து நாட்களுக்குள் ரூ. 745.59 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் அந்த வங்கிக்கு கொடுக்கப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள வங்கிகளில் அதிக புதிய நோட்டுகள் பெற்ற வங்கி இதுதான். இது நடந்த போது ஏழை மக்கள் எல்லோரும் பணத்தை மாற்ற அல்லாடி கொண்டிருந்த காலம்.


விஷயம் என்னவென்றால், இந்த அகமதாபாத் வங்கியின் அப்போதைய இயக்குனர் அமித்ஷா தான். Demonetization நடந்த பிறகு அமித்ஷா வின் சொத்து மதிப்பு திடீரென்று 81% உயர்ந்தது. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம். 

ஜன்டாவிற்கு மாயாஜாலம் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். 


Demonetization போது குஜராத் மாநில கூட்டுறவு வங்கி வங்கியே 1.1 கோடி தான் பெற்றது. ஆனால் அமித்ஷா வின் அகமதாபாத் மாவட்ட வங்கி 700 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. அதும் ஐந்து நாட்களில்.. 


பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் கூட்டுறவு வங்கிகளில் தான் அதிக அளவு பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. அதாவது மற்ற மாநிலங்களை விட 64% அதிகம். ஏனென்றால் தேசிய வங்கிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கும். கூட்டுறவு வங்கிகளை பெரும்பாலும் பாஜக தலைவர்கள் தான் நிர்வகித்தனர். அங்கு பணபரிமாற்றம் சுலபமாக நடந்தது. 


உண்மையில் இந்த நாட்டில் நடத்த மிக பெரிய மோசடி என்பது 2கி ஊழல் இல்லை, அது Demonetization தான். அதன்மூலம் தாங்கள் ஊழல் செய்த 'கறுப்புப் பணத்தை' 'வெள்ளை' ஆக மாற்றியது தான் பாஜக வின் திறமை. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று சொன்னார்கள் அல்லவா..அதற்கு அர்த்தம் புரிகிறதா.


இப்படி சட்ட நுணுக்கம் தெரிந்து, சாதகமான நிர்வாக கட்டமைப்பு உருவாக்கி, நூதனமாக மோசடி செய்வதால் தான் மோடி அரசின் ஊழல்கள் வெளியே தெரிவதில்லை. தெரிந்தாலும் ஆதாரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உயிர் பிழைப்பதில்லை. 


2016 ல் Demonetization நடந்தது.

2017 முதல் உலகிலேயே நம்பர் ஒன் பணக்கார கட்சியாக பாஜக மாறியது.

மற்ற தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தை விட 66% அதிகம் பாஜக வின் வருமானம்.

எல்லோரும் அருண் ஜெட்லீ யையும், மோடியை யும் திட்டி தீர்த்து கொண்டிருக்கும் போது,

திரைமறைவில் இருந்து கொண்டு மிக பெரிய மோசடிகளை செய்தார் அமித். 


வரும்....





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...