வெள்ளி 29 2021

மனுவின் வேசி மகனின் சாதி வெறி நோய்..



தீண்டாமை வெறியாட்டம்....

தமிழக அரசே நீட் தேர்விற்காக டாக்டர் அனிதாவுடன்
இணைந்து வழக்குத் தொடர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு
தீண்டாமை அவலம் நடந்தேறியது வெட்கக்கேடானது...

பொங்கள் விழாவிற்காக தன் வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவர்
பாரதிதாசன் தனது தலைமுடியை திருத்துவதற்காக சலூன்
கடைக்கு சென்ற பொழுது அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்த
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாதி வெறியன் ராமன்
வீம்புக்கு என்றே பேசி ஆணவத் திமிரோடு நடந்த கொண்டது
வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு
படித்து வரும் மாணவர் பாரதிதாசன் படிப்புக்குப்
பாதுகாப்பு அளித்திட வேண்டுகோள் விடுக்கிறோம்..
அறிவுள்ள மாணவர்களாக வளர்ந்து வரும் இவர்களுக்கு
சாதி ஒரு தடுப்புச் சுவராக இருப்பது பெரும் துயரமானது...

அதை தகர்ப்பது தான் கல்வி நிறுவனங்கள்..

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு,
ஏன் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு
முக்கியத்துவம் அளிப்பதில்லை?? மாணவர்களின்
மனநிலையை புரிந்து ஒத்துழைப்பதும்,வளர்த்தெடுப்பதும்
இன்றைய தேவை என்பதை நாம் உணர்வோம்..
காவல்துறை அலட்சியத்தால் குற்றவாளியை
கைது செய்யாமலிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக அரசு சாதி வெறியனை உடனடியாக
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்..
எதிர்வரும் திங்கட்கிழமை

சென்னை நுங்கம்பக்கம் தேசிய தாழ்த்தப்பட்டோர்
நல ஆணையரிடம் நேரில் சென்று மாணவர்
பாரதிதாசனுக்கு நீதி வழங்கிட
மதுரை மாவட்டம் எஸ்.பியிடம் தொடர்பு
கொண்டு குற்றவாளியை கைது செய்யுங்கள்
என்று அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்,
சட்டரீதியாக வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு துணை நிற்போம்.!!
சாதிய தீண்டாமை எனும் மனநோயை அழித்தொழிப்போம்.!!!


2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...