ரம்மி விளையாடி தோற்றது இவர். ரம்மி ஆபத்தான கேம்ப்ளிங் என்று தெரிந்தேதான் விளையாடியிருக்கிறார்.தோற்ற பின்னர் நன்கு கல்வி கற்ற தன் மனைவி குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்கிறார். செய்தது தவறு அதற்கு தற்கொலை தீர்வு என்பது இவருடைய முடிவு.மனைவி குழந்தைகளைக் கொல்வது யாருடைய முடிவு?மூவரை கொடூரமாகக் கொலை செய்யும் உரிமையை யார் இவருக்குக் கொடுத்தார்கள். நாம் இல்லா விட்டால் நம் குடும்பம் கஷ்டப்படும் என நினைப்பது வேறு, ஒரு வகையில் அது நல்லெண்ணமும் கூட, ஆனால் தான் வாழாவிட்டால் தன்னோடு இருப்பவர்களும் வாழக் கூடாது என எண்ணுவது என்ன மாதிரி மன நிலை. ஒரு இழையில் யோசித்தால் பண்பில் ஆணவக்கொலை போன்ற ஒன்று இல்லையா இது. இதனை அன்பு,பொசசிவ் என்று சிலர் நினைக்கலாம். மணிகண்டனிடம் அப்படி எதுவும் இல்லை. சொத்துடமை,பேராசை,அதன் உச்சமாக அழித்தொழிப்பது இதுதான் மணிகண்டன்!
கொடுமை.
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு