திங்கள் 17 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...52

 

கீதையைப் புறக்கணி!
திருக்குறளை உயர்த்திப் பிடி!
ஜனவரி 15 திருவள்ளுவர் தினம்
இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய சமூக அமைப்பில் நிலவும் கேடான ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை அப்படியே நீடிக்க செய்யும் வகையிலும், பார்ப்பன மேலாதிக்கத்தையும், சனாதன தர்மத்தையும் நிலைநாட்டுகின்ற வகையிலும் கொடூரமான பார்ப்பன பேரரசை நிறுவ ஆர் எஸ் எஸ் கும்பல் ஒரு நூற்றாண்டு காலமாக நமது நாட்டில் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறது.
இளம் மழலைகள் துவங்கி முதியவர்கள் வரை அனைவரையும் படிநிலை அடிப்படையிலான சாதிய பிற்போக்குத்தனமான சிந்தனையை தூண்டி வெறியூட்டுகிறது. இதன் மூலம் இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றுபட விடாமல் தடுக்கின்ற சதிச் செயலை செய்து வருகிறது இதன் மூலம் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை பாதுகாத்து பெரும்பான்மை மக்களை ஏழ்மையிலும், வறுமையிலும் தொடர்ந்து வாழ்வதற்கும், சூத்திர அடிமைகளாக வாழவும் பழக்கி வருகிறது.
இந்த இழிவான பார்ப்பன (இந்து) மதத்தை நம் தலையில் தூக்கி சுமப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் பார்ப்பன இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகின்ற பகவத்கீதை “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று மகாவிஷ்ணு கொக்கரிப்பதையும், “எதிரில் இருப்பவரை கொலை செய்வதற்கு அஞ்சாதே! ஆன்மாவிற்கு மரணமில்லை, உடலைத்தான் கொல்கிறோம்” என்ற தத்துவத்தையும் முன்வைக்கின்றது. இதை மீண்டும், மீண்டும் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் வெட்கப்படுவது இல்லை.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்று உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும், தாவரங்களையும், மனித இனத்தையும் பாதுகாப்பதை பற்றி தெளிவாக விளக்குகிறது.
அதே சமயம் உலகப் பொதுமறையான 170 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த பெருமை கொண்ட திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயர்ந்த சிந்தனையை போதிக்கிறது. அதுமட்டுமல்ல “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்று உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும், தாவரங்களையும், மனித இனத்தையும் பாதுகாப்பதை பற்றி தெளிவாக விளக்குகிறது.
திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளில், 133 அதிகாரங்களில் முன்வைக்கப்படும் 1330 குறளும் ஒவ்வொரு நெறியை முன்வைக்கிறது. இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரால் எழுதப்பட்டது. சனாதனத்திற்கு எதிரான சமத்துவ நெறியை போதித்த வள்ளுவருக்கே பட்டை போட்டு, காவி உடை தரித்த ஆரிய-பார்ப்பன சாமியாராக்க துணிகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். வருடந்தோறும் திருவள்ளுவரை முன் வைத்து பிரச்சாரம் செய்வதன் மூலம் தமிழர்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் ஏய்த்து விடலாம் என துணிச்சலுடன் செயல்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் இசுலாமியர், கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் மீது வெறுப்புணர்ச்சியையும், சாதி ஆணவத்தையும், ஆதிக்க சாதி வெறியாட்டங்களையும் முன் வைத்து பெரும்பான்மை மக்களை அடக்கி ஒடுக்கும் பார்ப்பன சனாதன மரபுகளை ஏற்க முடியாது. அதனை வீழ்த்த நம் கையில் உள்ள வரலாற்று பொருள்முதல்வாத மரபில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இரண்டு கையிலும் ஏந்தி போராட வேண்டிய தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எனவே திருக்குறள் மன்றங்களை உருவாக்குவோம்! மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் திணிக்கப்படும் சாதிய இழிவை போக்குவதற்கும் சமத்துவ உணர்வை ஊட்டுவதற்கும் திருக்குறள் நமக்கு முன் வைக்கிறது என்ற உண்மையை பெருமிதத்துடன் உயர்த்திப் பிடிப்போம். மக்களுக்குள் பிளவை போதிக்கும் பகவத் கீதையை புறக்கணிப்போம்.

சண்.வீரபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...