அவன் பேரு...என்னவோ.........ம்ம்ம் சட்னு ஞாபகத்துக்கு வரமாட்டுது சரி, பேரா முக்கியம் நடப்பு தானே முக்கியம் டெயிலர் கடை வச்சிருக்கான். அழகான மனைவி, குழந்தை குட்டி எல்லாம் இருந்தும் சின்ன வீடு, அதாவது காதலி இருப்பது.. அவுக சமூகத்துல கௌவரமாம்
அதுக்காக டெய்லர் கடைக்கு எதித்தாப்புல தொடக்கபள்ளி கூடத்தில் டீச்சர் எல்லாம் வேறு வேறு ஆட்களுக்கு புக் ஆகிவிட்டதால் கடைசியாக.. அந்த பள்ளி கூடத்தில் ஆயா வேலை பார்க்கும் குண்டம்மாவை ரெம்பா நாளா.. வாட்ச் பன்னி என்னன்ன தூது இருக்கோ அத்தனை தூதுக்களையும் அனுப்பி வெற்றி அடைந்த நேரத்தில்...
அந்த பள்ளி வளாகத்தில் இயங்கும் பலசரக்கு கடைகளுக்கு பலசரக்குகள் சப்ளை செய்யும் மார்க்கெட் கடையில் வேலை பார்க்கும் ஒருவனுக்கும் டெய்லர்க்கும் பயங்கர சண்டை நடந்தது. எதுக்குடா சண்டை? ஏன்டா சண்டை என்பது பக்கத்திலுள்ள கடைகாரர்களுக்கும் குடியிருப்போர்களுக்கும் எதுவும் தெரியவில்லை. தைக்க கொடுத்த துணிகளை சரியாக தைக்கவில்லை என்ற சண்டையாகத்தான் எல்லாருக்கும் தெரிந்தது.
சண்டை சற்று வலுக்க வார்த்தைகள் தடிக்க, அடிதடி நடக்க.. பிறகுதான் உண்மை புரிந்தது. காதலுக்கான சண்டை என்று
ராமராஜன் நடித்த படமொன்றில் கவுண்ட் மணி செந்திலை அடிப்பார். அதைப்பார்த்த ராமராஜன் ஏண்ணே! அடிக்கிறிங்கன்னு கேட்பார். அதற்கு கவண்ட மணி சொன்னதுான்... ஆயா குண்டாவை மார்க் கெட் கடையில் வேலை பார்க்கிறவன் வச்சிருந்து அதாவது காதல் கொண்டு, குண்டாமாவுக்கு நிறைய செலவு செய்து ஓய்ந்த நிலையில் ஆயா குண்டாம்மா.. கடைக்காரனை கழட்டிவிட்டு டெய்லரை செட்டப்பாக்கியது.. தெரிந்தவுடன் கொந்தளித்துவிட்டான்
பெரிய பிரச்சினை ஆகி காவல் நிலையம் சென்ற பின்தான் பிரச்சினை முடிந்தது. ஆயா குண்டாம்மாவை பள்ளியை விட்டு தூக்கிவிட்டார்கள். மார்க்கெட் கடையில் அவனையும் தூக்கிவிட்டார்கள்.
பின் டெய்லர் மூலம் ஆயா வேறு இடத்தில் வேலை பார்த்து வருகிற நிலையில் மார்கெட் கடைக்காரன் மாதிரியே டெய்லரும் குண்டாம்மாவுக்கு நிறைய செலவு செய்கிறான்.
ஆயா..குண்டாம்மாவுக்கு தாலி கட்டிய கனவன் ஒருவன். அவன் கொத்தனார் வேலை செய்கிறான். அவன் டாஸ்மாக் குடிமகனாக இருந்து சிறுசு..பெறுசு என்று வித்தியாசம் பார்க்காமல் சித்தாள்களை மேய... குண்டம்மாவோ இப்படி..
.குண்டம்மாவுக்கு இரண்டு ஆண்பிள்ளை, ஒரு பெண் பிள்ளை. பையன் காலேஜ படிக்கிறான் பெண் பிள்ளை +2 படிக்குது.. கடைசியாக உள்ளவன் பத்தாவது படிக்கிறான்.....
குண்டம்மாவின் மீதான காதல் டெய்லர்க்கு பெரிய கௌவரமாகிவிட்டது. குண்டாம்மாவுக்கு காதலால் வருமானம் தடை படாமல் இருக்கிறது.
இப்படியும் பிழைப்பு...!
பதிலளிநீக்குநல்லவங்க போலவே..கள்ளர்களும் இருப்பாங்க..காசுக்காக மானத்தையே விப்பாங்க..இந்த நாட்டினிலே...
நீக்குகாதலுக்கு மரியாதை.
பதிலளிநீக்குஇது காதலுக்கு மரியாதை இல்லிங்க.. காதலுக்கு அவ மரியாதை...
நீக்கு