வெள்ளி 13 2015

பேசுவதற்கு ஒன்றுமில்லை, பத்து நிமிட அவகாசம் தருகிறோம்.!!!

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

பிப்ரவரி 15ம்நாள் ஏழு கிராம மக்களும் ஒன்றாக திரண்டனர். அந்தந்த கிராம மக்களுக்கு முறையான பேருந்து வசதி இல்லாத போதும் 5.கி.மீ தூரம் நடந்தே வந்து சேர்ந்தனர்.

இவர்களுடன் பள்ளி மாணவர்களும்,பெண்களும் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். பெண்களையும் பள்ளி மாணவர்களையும் கண்டவுடன் குடிப்பதற்க்காக வந்திருந்த குடிமகன்கள்.. வெட்கி தலை குனிந்து.. திரண்டு இருந்த பெண்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் அரணாக நின்றனர்.

பறை முழக்கத்தை.தொடர்ந்து கண்டன முழக்கங்கள் வெடிக்க அவ்விடம் போர்க் கோலமானது.

“எப்பவும் போலவே....வழக்கமாக  தொண்டை தண்ணி வத்த கத்திவிட்டு போயிடுவானுக”  என்று எப்பவும் போலவே   ஏளனமாக வேடிக்கை பார்த்தபடி நின்றனர் பிரம்ம தேசத்தின் போலீசார்.

திரளான மக்களின் ஆராவாரத்துக்கு மத்தியில் பேசினார்கள் பு.முா.இ..மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் ராஜாவும்.....சாரதியும்...

“பேசுவதற்கு ஒன்றுமில்லை, பத்து நிமிடம் அவகாசம் தருகிறோம்.”“ கடையை இழுத்து மூடுங்கள். முடியாதென்றால் விலகிக் கொள்ளுங்கள்” என்று வந்திருந்த  போலீசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

“பள்ளிகள்- கல்லுாரிகள், குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக கடையை வைக்கக்கூடாது” என்று விதி இருந்தும் அதனை அப்பட்டமாக மீறுகிறது  சாராயம் விற்கும் தமிழக அரசு.

தான் சொல்லும் சட்டத்தை தானே காலில் போட்டு மிதிப்பதோடு மட்டுமின்றி, “சட்டப்படி நட, சாராயக்கடையை மூடு“ என்று நியாயமான முறையில் போராடும் மக்களின் மண்டையை பிளப்பதோடு, பொய்வழக்கு போட்டு வைக்கிறது. பின்  மக்களின் நண்பன்  என்று சொல்லிக் கொள்ளும் அந்த போலீசின் துணையோடு மீண்டும் சாராயக் கடையை திறக்கிறது தமிழக மக்களின் முதல்வரின் அரசு.


பத்து நிமிட அவகாசம் முடிந்தது. போலீசும் மாவட்ட நிர்வாகமும் கடையை மூடுவதாக இல்லை. களமிறங்கினார்கள் ஏழு கிராம மக்கள். சாராய பாட்டில்கள் வீதியில் விழுந்து நொறுங்கியது. சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது. சாராயக் கடையின் கதவை மக்களே இழுத்து பூட்டி வெற்றி முழக்கமிட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
படங்கள்- வினவு


சிதறிய கண்ணாடித் துண்டு காலில் பட்டு இரத்தம் கசிந்த நிலையிலும், கடையை நோக்கி கல்லெறிந்த சிறுவர்களின் போர்க்கோலத்தைக் கண்டு போலீசே விலகி நிற்கத்தான் வேண்டியிருந்தது.

நன்றி.-- வினவு.- புதியஜனநாயகம் மார்ச்2015இதழ்



10 கருத்துகள்:

  1. நண்பரே இதே கூட்டம் இதே அரசுக்கு ஓட்டுப்போடவில்லை என்று சொல்லமுடியுமா ? சரி அடுத்து தேர்தலில் நின்றால் கண்டிப்பாக இதே கட்சிக்கு ஓட்டுப்போடாது என்று சொல்லமுடியுமா ? உப்பைத் திண்ணவன் தண்ணி குடிக்கனும் அதுதான் மருந்து.
    மக்கள் காலம் பூராம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதான் தொடர்கிறது.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. சொல்ல முடியாததுான்.... தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை உண்மைதான். நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. பல இடங்களிலும் இது போல் நடக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிட்டியும் போராட தயங்குபவார்களால்... பல இடங்களில் நடப்பது சந்தேகம்தான்.....

      நீக்கு
  4. முட்டாள் மக்களின் தவறான தலைவர் தேர்வால், எல்லோருமே பாதிக்கப்படுகிறார்கள். இனி முட்டாள் மக்களின் வாக்குரிமையைப் பறி்கக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தவர்களே!! அடி முட்டாளாக இருக்கும்போது படிக்காத முட்டாள்களின் வாக்குரிமையை பறிப்பது சரியா...?

      நீக்கு
    2. சில மணி நேரத்துக்கு முதலே இந்த பதிவை படிச்சபோ நினைத்தேன் , மக்களால் ஆதரிக்கபடும் இந்த அரசுக்கெதிரான இப்படியான நடவடிக்கை வெற்றி பெறுமா என்று. நீங்க சொன்ன மாதிரி படித்த அடி முட்டாளாகளால் தீவிரமாக ஆதரிக்கபடும் அரசு இது.

      நீக்கு
    3. படித்த அடி முட்டாள்களோடு தற்குறிகளாலும் தீவிரமாக ஆதரிக்கபடும் அரசு என்றும் சேர்த்து சொல்லலாம். திரு.வேகநரி அவர்களே!!

      நீக்கு
  5. போராட்டம் நடந்து ஒரு மாதமாகி விட்டதே ,அந்த கடை அகற்றப் பட்டு விட்டதா ?
    த ம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் அந்த போலீசின் துணையோடு மீண்டும் சாராயக் கடையை திறந்துவிட்டது தமிழக மக்களின் முதல்வரின் அரசு.

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...