ஞாயிறு 14 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -10

 அவன் பட்டப் பெயரு வீரப்பன். அந்த தெருவுக்கு அவன்தான் சண்டியர். முன் பதிவுல சொன்ன தெரு நாட்டாமை கூட இவனுக்கு பயப்படுவான்..... அப்பேர்பட்ட சண்டியர் பொண்டாடிய  தெரு நாட்டமை லவட்டிக்கிட்டான். அரசல்புரசலாக சண்டியர்க்கு தெரியவந்தது. இருந்தாலும் தன் கண்ணால பாத்தாதான் நம்புவேன்னு உறுதியாய் இருந்தான். ஒருநாள் தெரு நாட்டாமையும் சண்டியர் பொண்டாட்டியும் ஒன்னா இருந்தத பாத்துட்டான் சண்டியர்


கோபம் கொப்பளிக்க  நாட்டாமைய  காலி பன்னுவதற்க்கு சரியான நேரத்துக்காக காத்திருந்தான்...“ தெரு சண்டியர் பொண்டாட்டிய  தெரு நாட்டாமை லவட்டிக்கிட்டாரு” என்ற விபரம்  அந்தத் தெருவுக்கு பரவி கொஞ்சமாக உற்றார் உறவினர்க்கு எல்லாம் தெரிந்துவிட்டதால் சண்டியர் பரபரப்பாய் இருந்தான். அவன் பொண்டாடி இவனுக்கு பயந்து போய் அவுக அம்மா வீட்டுக்கு ஓடிப்போய்விட்டது. சண்டியர்   அவளை வெறுத்து வேண்டாமுன்னு  தீத்துவிட்டார்.

சண்டியரால் நாட்டாமைக்கு ஏதாவது தீங்கு வந்துவிடாமல் இருப்பதற்கு நாட்டாமை  விவரமாக முன் கூட்டியே போலீசில் சண்டியர் மேல் புகார் கொடுத்து வைத்தான். தெரு சண்டியர்க்கு இது தெரியவில்லை. மற்றவர்களுக்கும் தெரியவில்லை

சண்டியர்க்கு எதிர்பார்த்த நேரம் கிடைத்தது. உடலில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓங்கி வெட்டினான். நாட்டாமை சுதாரித்து வலது கையால் தடுத்துவிட்டான். திரும்பவும் வெட்ட சண்டியர்  முயலும் போது நாட்டாமை பயங்கரமான ஊளையிட்டு தன் உறவினர்களையும் தன் குடும்பத்தாரையும் அழைத்து அய்யோ..அய்யோ என்று மேலும் மேலும் ஊளையிட்டு செத்து போனவன்போல் கீழே விழுந்து கால்களை துடிதுடிக்குமாறு ஆட்டினான்.

நாட்டாமையின் ஊளையிட்ட பங்கரமான சத்தத்தாலும் கால்கள் இரண்டும் துடிதுடிப்பதைக் கண்ட சண்டியர் வெலவெலத்துபோயி  பயந்து ஓடி விட்டான்.  தெருவே கூடியது சண்டியர்.... நாட்டாமையை வெட்டிபுட்டான் என்ற செய்தி தெருவை தாண்டி  வெகு தூரத்தில்  உள்ள போலிசு நிலையத்துக்கு. பரவியது.

வந்த போலீசு சல்லடை போட்டு தேடி சண்டியரை கைது செய்து திருச்சி ஜெயிலில் அடைத்தது. அப்போ புது ஜெயில் மதுரையில் இல்லை. வலது கையில் வெட்டுபட்ட நாட்டாமை தர்ம ஆஸ்பத்திரியில் சகிச்சை முடிந்து சில நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தபோது தெருவே மாலை போடாத குறையாக வரவேற்றது. நாட்டாமையால் பதிக்கபட்டவர்கள்தான்

சண்டியர் பொண்டாட்டியை லவட்டிய வெற்றி திருமகனே வருக!! சண்டியரால் வெட்டுபட்டு உயிர் பிழைத்த  வீரம் விளஞ்ச மண்ணே வருக!!  வருக!! என்று  மனதுக்குள் போஸ்டர் ஒட்டாத குறையாக  புழுங்கினர்.


நாட்டாமையை வெட்டிய குற்றத்துக்காக சண்டியர் இரண்டு வருடம் திருச்சி ஜெயில் தண்டனை அனுபவித்து விடுதலையாகி வந்தான். ஒரு வருடம் சுற்றி திரிந்தவன். சோரம் போன முன்னால் பொண்டாட்டியின்  பத்தாவது படித்து கொண்டிருந்த தங்கையை மனமுடித்தான்.  அக்காவே பராவயில்லை என்று சொல்லுமளவுக்கு தங்கையின் நடத்தை இருந்தது. வெகுண்டெழுந்த... அந்தத் தெரு

     அவளுக்கு ஓடுகாலி என்று பட்டம் வழங்கி கௌரவித்தது.



2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...