ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை வரலாறு கதைகள் இருக்கும். அதிலிருந்து எனக்கும் சில கதைகள் இருக்கிறது.. அதிலிருந்து சில.....
அண்ணன் பேரு முருகன் அண்ணி பேரு தெய்வானை என்ற வள்ளி அண்ணன் முருகன் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து பழக்கம். அண்ணி,.. அண்ணன் மூலம் இங்கு வேலைக்கு வந்த பிறகுதான் தெரியும். ஏற்கனவே முதல் முறையாக வேலை செய்த இடத்தை விட்டுவிலகி, இரண்டாவது இடத்தில் வேலை செய்துகிட்டு இருந்தப்போ..அண்ணன் என்னை பார்த்துவிட்டு அவர் வேலை செய்யும் இடத்துக்கே என்னை அழைத்து பணியமர்த்திவிட்டார். அண்ணி அங்கேயதான் வேலை செய்து கொண்டு இருந்தார். நான் முதல் இடத்தில் வாங்கிய சம்பளம் 300 ரூபா, இரண்டாவது இடத்தில் வாங்கியது 1000 ரூபா, அண்ணன் அலுவலகத்தில. வாங்கிக் கொண்டிருபக்கும் சம்பளம் 2500 ரூபா இதோடு கூடுதல் நேரங்களில் வேலை செய்து மொத்தமாக வாங்குவது சுமார் 4000 ஆயிரம்.. நல்லாத்தான் போயிட்கிட்டு இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் முதலாளியின் மவன் தொழிலகத்தை மூடிவிட்டு அமெரிக்காவுக்கு வந்துவிடு என்று உத்தரவு போட்டதால் ,வயதான முதலாளி வருத்தத்துடன் தொழிலகத்தை மூடி விட்டார். அதன்பிறகுதான் அந்த முதலாளி இலவசமாக கொடுத்த சிறு இயந்திரங்களை கொண்டு சிறிதாக சொந்தமாக தொழில் தொடங்கினேன்.
இத்துடன் எனது சுய புராணத்தை முடித்துக் கொண்டு நண்பர் அண்ணனின் நினைவுக்கதைகளை தொடருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை