திருவனந்தபுரம் செல்லும் வழியில், நெய்யாற்றின் கரை எனும் ஊர்.....
அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி.... உத்ரம் திருநாள் மன்னரின் ஆட்சி....(1846-1860)
ஒடுக்கப்பட்ட ஆண்கள், மீசை வைக்கக்கூடாது என்பது #சட்டம்.. ஆனால், தேவசகாயத்திற்கு
மீசை வைக்க வேண்டும் என்பது ஆசை..
சட்டத்தை மீறினால் அன்றைய மன்னன் ஆட்சி என்ன செய்யும் என்பதும் அவனுக்கு தெரியும்!
ஆனாலும் இளம் காளையான, தேவசகாயம், இதை எதிர்த்து கலகக்கொடியை, கையில் ஏந்தினான்; தனக்குள் ஒரு சமூகப் போராளி உருவாவதைஅப்போதுஅவன்உணரவில்லை... மீசை வைக்கக்கூடாதுஎன்றசட்டத்தைஉடைக்க, திமிறி எழுந்தான்...
தனக்கு மீசை வைத்துத் தர வேண்டும் என்று, சிகையலங்காரம் செய்பவரிடம், பல முறை கேட்டும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை...
ஒரு வேளை, மீசை வைத்துக் கொடுத்தால், தனது நிலை என்னவாகும் என்ற அச்சம்...
ஆனாலும் விடவில்லை, தேவசகாயம்...
இறுதியில், தேவசகாயத்தின் முகத்தில், முறுக்கு மீசை, குடியேறியது...விடவில்லை ஆட்சியாளர்கள்;துரத்தியது நாயர் பட்டாளம்!
அதே நேரம் மிகவும் ரகசியமாக, தேவசகாயத்தை, திருவனந்தபுரம், திருமலை எனும்இடத்தில்உள்ள,மன்னரின்மாளிகையில், தோட்டக்காரனாக, ஊழியம் செய்ய அழைத்துச் சென்று,ஏற்பாடுகள் செய்தனர் உறவினர்கள்....
ஊழியம் என்பது, திருவாங்கூரின் #தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கருதப்பட்ட மக்கள் எதிர்ப்பு எதுவும் கூறாமல் செய்ய வேண்டிய #கட்டாயமானது;இந்த #ஊழியம் என்பதற்கு #ஊதியம் எதுவும் இல்லை..
அங்கே, அவர்கள், ஊற்றும் #கஞ்சி அல்லது #கூழ் போன்றவை கிடைக்கும் போது குடித்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!
கொஞ்சம் நெல்லும் கொடுப்பார்கள்...
மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில், அவரை, எட்டுவீட்டு பிள்ளைமார், போத்திகள், ஆகியோரிடமிருந்து, காப்பாற்றிய, நாடார் சமூகத்தின், உதவிகளுக்காக, திருமலை மாளிகை அருகாமையில் சில நாடார் குடும்பங்களை, மார்த்தாண்ட வர்மா, வசித்துக் கொள்ள அனுமதித்திருந்தார்...
தேவசகாயம், பூந்தோட்டத்தில், தனது வேலையை செய்து வந்தார்..
ஆனால், அங்கே அவருக்கு, சம்பளம் எதுவும் இல்லை... ஏற்கனவே குறிப்பிட்டது போல் வெறும் கஞ்சியும், நெல்லும் தான் கிடைத்தது..
வெகுண்டெழுந்தான், தேவசகாயம் எனும் போராளி..
"எனக்கு, கஞ்சியும், நெல்லும், தேவையில்லை;எனது, பெற்றோருக்குக் கொடுக்க, எனக்கு சம்பளம் தான் வேண்டும்; அதுவும், மன்னரின், #சக்கரம்(எங்கள் பகுதியில், நாணயத்தை இப்போதும் சக்கரம் என்று சொல்லும் வழக்கு உண்டு; அப்போது, சக்கரம் என்ற நாணயமும் உண்டு) தான் வேண்டும்!வேலைக்கு கூலி வேண்டும்; கஞ்சி அல்ல", என்ற, கலகக்குரல், முதன் முதலாக, திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஓங்கி ஒலித்தது! தேவசகாயத்தின் கலகக் குரல்,
திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும், இடி
முழக்கமாக ஒலித்தது; ஆடிப் போனது அரண்மனை....
தன்னோடு, வேலை செய்த 5 பேரையும்இணைத்துக் கொண்டார், தேவசகாயம்!
ஆனால், விடவில்லை ஆட்சியாளர்கள்..
தேவசகாயத்தையும், சகாக்கள் 5 பேரையும், துரத்திப் பிடித்து, கண் காணத இடத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்து படுகொலை செய்தது, நாயர் பட்டாளம் ...
தனது மண்ணின் மக்கள், படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, அதற்காக குரல் எழுப்பவோ, ஒரு துளி கண்ணீர் சிந்தவோ கூட, அங்கே அனுமதி இல்லை..
ஆனால், ஜான் காக்ஸ் என்ற கிறிஸ்தவ மிஷனரி, இதை விடவில்லை..
தேவ சகாயத்தின் குடும்பத்தினரையும், சகாக்கள் 5 பேரின் குடும்பத்தினரையும், தனது வீட்டில் பாதுகாப்பாக, மறைத்து வைத்து விட்டு,நேராக,மன்னரிடம்சென்று,நடந்தவற்றை கூறி, தேவசகாயத்தையும், அவரது சகாக்களையும் படுகொலை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்....
அதே நேரத்தில், அரண்மனை அதிகாரிகள், ஆறு உடல்களையும் எடுத்துக்கொண்டு, திருவனந்தபுரம், பொது மருத்துவமனைக்கு சென்றார்கள்....(திருவனந்தபுரத்தில் இப்போதும் இந்த மருத்துவ மனை இருக்கிறது; General Hospital)..
டாக்டர், முல்லர், என்ற ஐரோப்பிய மருத்துவரை சந்தித்து, கொலை செய்யப்பட்ட, ஆறு பேரும், காலரா காரணமாக இறந்து போனதாக, சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்டனர்; நேர்மையான அந்த மருத்துவர், போலி சான்றிதழ் தர முடியாது என்றும், ஆறு பேரும், கொலை செய்யப்பட்டதாக மட்டுமே சான்றளிக்க முடியும் என்று உறுதியாக கூறினார்..
அப்போது, அரச குடும்பத்தினர் சார்பில், அப்போது, Resident பொறுப்பில் இருந்த, Major General: william Cullen(1840-1860),டாக்டர், முல்லர் அவர்களை சந்தித்து, போலி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்டார்...
முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் டாக்டர்;
விடவில்லை டாக்டர் முல்லர்; தேவ சகாயமும், அவரது சகாக்கள் 5 பேரும், படுகொலை செய்யப்பட்டதாக, மதராஸ் நீதிமன்றத்தில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்..
இறுதியில், கொலையாளிகள்அனைவருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், கொலையாளிகள் அனைவரையும், தண்டிக்காமல் காப்பாற்றி விட்டது, திருவாங்கூர் ஆட்சி....
ஆனாலும், தேவ சகாயங்கள், வருவார்கள்...
அனைத்தையும் தகர்ப்பார்கள்..
முகத்தில் முளைக்கும் ரோமத்தைக் கூட, விட்டு வைக்காத,தேவ சகாயத்தின், ரோமத்தைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள், இறுதியில், அதிகாரங்களை இழந்தது கூட, வரலாறு தான்...
நாடுணர்த்திய நாடார் போராட்டங்ஙள்(மலையாளம்)
பக்கம், 214-219..By.Prof.J.Darwin
கவடியார் தாஸ் எழுதிய ஜோலிக்கு கூலி சமரம் 1854 என்ற மலையாள நூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை