ஞாயிறு 19 2025

நினைவலைகள்.101

 அன்றும் இன்றும் தீபாவளி!!


1995-ம் வருடம் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு முதன்முதலாக என் வீட்டிற்கு மின் இணைப்பு பெற்ற நேரம்... மின் இணைப்பு பெற்ற பிறகு வரும் முதல் தீபாவளி..

பொதுவாக என் அம்மா  தீபாவளியை கொண்டாடுவதில்லை..அது செலவு பிடிக்கும் விழா என்று கூறுவார். எனக்கு புது சட்டை எதுவும் எடுக்கமாட்டார். என் அம்மா வேலை பார்க்கும் வீட்டிலிருந்து எனக்கும் என் அம்மாவுக்கும் புது துணிகள் கொடுத்துவிடுவார்கள். அந்த புது துணியை தீபாவளியன்று உடுத்தமாட்டார். புதிய துணியை தண்ணரில் நனைத்து காய்ந்த பின் பின்னொரு நாளில் உடுத்துவார். என் தாயின் பழக்கமே என்னையும் தொற்றிக் கொண்டது. எப்போதும் புது சட்டை எடுத்தாலும் தண்ணிரில் நணைத்து அலசிய பிறகே உடுத்துவேன்.

மின் இணைப்பு பெற்ற சில நாட்களில் பழைய தொலைக்காட்சி பெட்டி கருப்பு. வெள்ளை ஒன்றை குறைந்த விலையில் வாங்கி  .டீ டீ என்ற சென்னை தொலைக்காட்சி தமிழ் ஒளிபரப்பை மட்டும் விடுமுறை நாட்களில் பார்ப்பது. வழக்கம்

அன்று தீபாவளி  என் அம்மா கறி வாங்கி சமைத்து கொண்டு இருந்தார். அன்று சென்னை தொலைக்காட்சியில் இரவு பதினோரு மணியளவில் மாயபஜார் படம் ஒளி பரப்பினார்கள்..காலையில் இந்தி நிகழ்ச்சி ஒளி பரப்பி விடுவார்கள் என்பதால் தூங்காமல் என் அம்மாவுக்கு துனையாக விடிய விடிய முழித்து பார்த்த நினைவலைகள் இன்றைய தீபாவளியல் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தபோது நினைவுக்கு வந்தது.

செல்போன் வந்து விட்டதால் தொலைக்காட்சி பார்ப்பதை அடியோடு மறந்துவிட்டேன். தூக்கம் வராமல்   தவித்தபோது படுத்தபடியே போட்டோவில்  இருந்த என் அம்மாவை பார்த்தபோது அன்றைய தீபாவளி நினைவலைகள் வந்தது.காலையில் மறந்து விடும் என்பதால் இப்போதே பதிவிட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !

பராசக்தி 2026 திரைப்படம்  பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...