ஞாயிறு 02 2025

பந்தியில் பின்னால் நிற்பதற்கு தடை

 


 தொழில் ரீதியான நண்பர் ஒருவர்.. ஒரு நிகழ்ச்சியில் ரூபாய் ஆயிரம் மொய் செய்கிறேன். என்னுடன் நீங்களும் வாங்க இருவரும் நிகழ்ச்சியில் சாப்பிட்டு வரலாம் என்றார்

 வேலை இருக்கிறது. தாங்கள் மட்டும் சென்று வருக என்று மறுத்தேன்..

அய்யோ நண்பா... நான் செய்யப் போகும் மொய் எனக்கு திரும்ப வராது. நாம் இருவரும் சென்றால் மொய் செய்யும் எனக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கும் நாம் இருவரும் அவ்வளவா சாப்பிட போகிறோம்.  நீங்கள் எதிலும் ஈகோ பார்க்கமாட்டீர்கள்  வாங்க நண்பா என்று வலுக்கட்டாயமாக அழைத்தார்.


நிகழ்ச்சியில் 12 மணிக்கு மேல்தான் பந்தி நடக்கும் காலை ஒன்பது மணியிலிருந்து எனக்கு பசி எடுக்கிறது  அதனால் சிறிது டிபன் சாப்பிட்டு விட்டு போகலாமே என்றபோது...

 வேண்டாம் நிகழ்ச்சியில் போய் சாப்பிட்டுக் கொள்வோம் என்று இழுத்துச் சென்றார். 

நண்பரின் பேச்சை தட்ட முடியமால்.. அவருடைய இரு சக்கர  வாகணத்தில் சென்று நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு சென்றோம். நிகழ்ச்சி நடத்துபவரும் எனக்கு தெரிந்தவராக இருந்துவிட்டதால் அவர்க்கு கை குலுக்கி விட்டு அமர்ந்தோம்.

நாங்கள் இருவரும் சென்றது 11 மணி  நண்பர் பல தடவை உணவு கூடத்திற்கு சென்று வந்தார். பந்தி தொடங்கவில்லை.. வந்திருந்த பார்வையாளர்கள் பலர் உணவு கூடத்திற்கு சென்று உதட்டை பிதுக்கிய வண்ணம் வெளியே வந்தனர்.  மணி பணிரெண்டரை ஆகியது.

வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற நண்பரிடம் பந்தி என்னாச்சு என்றேன். இன்னும் தொடங்கவி்லை்லை  என்றார். அந்த சமயம் என்பகுதியை சேர்நத நண்பர் ஒருவர் நிகழ்ச்சி கலந்து கொண்டவர். பொருமை இழந்தவராக எழுந்து சென்று நிகழ்ச்சி நடத்துபவரிடம்  மொய்யை செக்காக கொடுத்துவிட்டு என்னிடம் விடை பெற்றார். நான் சாப்பிடவில்லையே என்றபோது. கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு..  எனக்கு புரியும் வகையில் செய்கை காட்டிவிட்டு சென்றார்.

மணி ஒன்றாகியது  நண்பரிடம்  போகலாம் என்றேன்.  அவரும் பொறுமை இழந்தவராக ஆயிரத்துக்கு பதில் 500யை மொய் செய்து விட்டு வாங்க போகலாம் என்றார்

நண்பரின் அலவலகத்தை அடைந்து எனது வண்டியை எடுத்தபோது நண்பர் அருகில் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது   கொல பட்டினியா போனோம். வெறுப்பு பட்னியா வந்துவிட்டோம். இனிமேலும் என்னை கூப்பிடுவிங்க.. என்றேன்.

 திரும்பவும் நண்பர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்

பராவாயில்லை என்றுவிட்டு நிகழ்ச்சி நடத்துபவரை சந்திக்கும்போது  ஏன் ஒருமணிவரை பந்தி போடவில்லையே  ? என்று கேளுங்கள் அவர் அதற்கு என்ன காரணம் சொல்கிறார் என்று தெரிந்து கொள்வோம் என்றேன்.

அதுவும் ஒரு அனுபவமாக இருக்கட்டும்.


இந்த நிகழ்வில் எனக்கு வெறுப்பைவிட சிரிப்புதான் வந்தது...பந்தியில்  பின்னால் நிற்பதற்குதான தடை.. ஆனா..இங்கே பந்தியே நடக்கலயே....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இது எனக்கு தேவையா...?

 வேலையும் இல்ல அதனால்.. தூக்கமும் இல்ல சிறிது நேரம் நடந்து வரலாம் என்றால் வெளியில் போக அச்சமாக இருக்கிறது ஆங்கங்கே நாலு கால் படைகள் கூட்டம் ...