இந்த நாட்டில் நல்ல தங்காள் என்ற பெண் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவள் பச்சை மட்டையை வைத்து நெருப்பு எரித்தாள் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட பத்தினிதான், தனது நாட்டில் பன்னிரண்டு வருட வரையில் மழையில்லாததால் பட்டினியாகத் தனது குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் மாண்டதாகச் சொல்லப்படுகிறது.
பச்சை மட்டையில் நெருப்பு எரித்த பத்தினி, இந்த நாட்டின் மழையில்லாமையையும் போக்கி இருக்கலாமே! அப்பொழுதெல்லாம் நாஸ்திகம் பரவவில்லையே. ஏன் அந்தப் பத்தினியார் மழையைப் பொழியும்படி செய்யவில்லை?
நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில்தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர்.
ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குத்தானே தோன்றியிருக்கின்றனர். மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக, இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான்.
ஒன்று இந்தக் கடவுள்கள் திறமையற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலேயனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும்."
எழுதியது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை