புரட்சி மனப்பான்மையை எழுத்தாயுதம் கொண்டு தோற்றுவித்த படைப்பாளர்களில் #கார்க்கிக்கு நிகர் யார் என்றிருக்கையில் வாழ்ந்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் போர்முனையில் ஏற்பட்ட காயத்திற்குப்பின் பார்வையிழந்து, கால்களும் பூர்த்தியாக ஸ்தம்பித்து விட்ட நிலையிலும் ஒருவனால்
"தாய்" நெடுங்கதைக்கு நிகராக, பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் எழுத்தாளர் #கார்க்கியின் பாராட்டுதலுக்குரிய ஒரு படைப்பை படைக்க முடிந்தது என்றால் அவர்தான் "வீரம் விளைந்தது" என்ற புரட்சி காவியம் தந்த #நிகோலாய் ஓஸ்திரோவஷ்கி.
இந்த புத்தகத்தின் அட்டைப் படமே அந்த நெடுங்கதையின் பிரதான பாத்திரமான பாவெலின் புரட்சி வெறி ஊறிய கண்களையும், போல்ஷ்விக்குகளின் போராட்டக்களம் பற்றியும் ஆயிரம் கதைகள் சொல்லும். 📕📕
பாவெல் கார்ச்சாகின் என்ற பிரதான பாத்திரம் மூலம் தனதும் தன் நண்பர்களினதும் போல்ஷ்விக்குகான 15வருட போராட்டமயமான வாழ்வை சித்தரித்துள்ளார். இதில் தங்களின் வீரக்கதையை இளமை, காதல், போராட்டம் என்பவற்றை சுவை, சோகம், புரட்சி மனப்பான்மை போன்ற உணர்வுகளை தட்டியெழுப்பும் வகையில் எடுத்துக் காட்டியுள்ளார்.🔥✌️
தவறிழைத்து பாதிரியின் தண்டனைக்குள்ளாகும் பாவெலின் வாழ்வுடன் ஆரம்பமாகும் இந்த நெடுங்கதை எல்லாவிதமான போராட்ட களங்களிலும் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த கம்யூனிஸ்ட் ஒருவன் கால்களையிழந்து, கண்பார்வையிழந்து தனது 30வது வயதில்
#" உங்கள் நாவல் மனப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டது, உங்கள் வெற்றிக்கு பாராட்டுக்கள்" என்ற இலக்கிய வெற்றியுடன் முற்றுப் பெறுகிறது.✌️📝
"வாழ்வு சகிக்க முடியாததாக ஆனபிறகும் எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்" என்ற தன் இலக்கிய வசனத்திற்கேற்பவே தன் வாழ்வையே இந்த நெடுங்கதையில் பாடமாக கொடுத்துள்ள தோழர். ஓஸ்திரோவஷ்கி தன் எழுத்தாயுதத்தால் என் மனதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி விட்டார்.
"#முழு சமுதாயத்தின் வாழ்வுக்காக
சொந்த வாழ்வை தியாகம் செய்வதே
புரட்சி பண்பாகும்."
"#அழகு முகத்தில் அல்ல
அது மூளையின் தன்மையை
பொறுத்தது."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை