வெள்ளி 23 2026

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்..



*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*
கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப­டுத்­தும் செயல்­களை ஒன்­றிய பா.ஜ.க. அரசு செய்து வரு­கி­றது.
கீழ­டி­யில் அமர்­நாத் ராம­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் அக­ழாய்­வு­கள் நடை­பெற்­றது. இந்த அக­ழாய்வு அறிக்­கையை அக்­டோ­பர் 2023 ஆம் ஆண்டு இந்­திய தொல்­லி­யல் துறை­யி­டம் அளித்­தார். இந்த அறிக்­கை­யில் இரண்டுநிபு­ணர்­க­ளி­டம் சரி பார்த்­துத் தரும்படி சொன்­னார்­கள். ஒரு­வர் அயோத்­தியைஅக­ழாய்வு செய்­த­வர். அயோத்­தியை அக­ழாய்வு செய்­த­வர் கீழ­டியை எப்­படி ஏற்­பார்?
அமர்­நாத் ராம­கி­ருஷ்ணா குறிப்­பிட்ட கால­கட்­டத்­தை­யும் தமி­ழின் தொன்மை பற்­றிய விப­ரங்­க­ளை­யும் கேள்வி எழுப்பி திருத்தி தரு­மாறு திருப்பி அனுப்­பி­னர். திருத்தி தர இய­லாது என்று அமர்­நாத் ராம­கி­ருஷ்ணா கூறி­விட்­டார். ‘எழுத்­துப் பிழை­களை வேண்­டு­மா­னால் திருத்­து­கி­றேன். உண்­மை­களை திருத்த இய­லாது’ என்று கூறி­விட்­டார்.
அதற்கு அடுத்து கீழடி அறிக்கை பற்­றிய மதிப்­பீடு மற்­றும் பரிந்­து­ரை­கள் என்று கூறி ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து பரிந்­து­ரை­களை அனுப்பி இருக்­கி­றது ஒன்­றிய அரசு. அந்­தக் குழு­வில் இருக்­கின்ற நான்கு பேர் இது­வரை எந்­த­வித அக­ழாய்­வு­க­ளி­லும் ஈடு­ப­டா­த­வர்­கள். அதில் இருக்­கின்ற மற்­றொரு அதி­காரி அக­ழாய்வு செய்து இருந்­தா­லும் அறிக்­கையை வெளி­யி­ட­வில்லை.
அமர்­நாத்தை விட பணி­யில் கீழே அடுத்­துள்ள நிலை­யில் இருப்­ப­வர்­களை வைத்து பரிந்­து­ரை­கள் செய்து மாற்­றித் தரு­மாறு அனுப்பி உள்­ள­னர். 114 பக்­கம் கொண்ட இந்த அறிக்கை முழு­வ­து­மாக மாற்­றித் தரு­மாறு பல்­வேறு பரிந்­து­ரை­களை கூறி­யி­ருக்­கி­றது
‘‘ஒரே இந்­தியா, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்­சா­ரம், ஒரே வர­லாறு என்ற அடிப்­ப­டை­யில் கீழ­டி­யி­னு­டைய அறிக்­கையை தயா­ரித்து அனுப்ப வேண்­டும். மாநி­லத் தன்மை கொண்­ட­தாக மாநில வர­லாற்றை ஊக்­கு­விப்­ப­தாக கீழடி வர­லாறு இருக்­கி­றது. இத்­த­கைய தனித்­து­வம் மிக்க வர­லாற்றை கொண்டு இருப்­ப­தாக இருக்­கக் கூடாது” என்று பரிந்­து­ரைத்து இருக்­கி­றார்­கள்.
சங்க இலக்­கி­யங்­கள் வர­லாற்­றுத் தன்­மை­யற்­ற­வை­யாக இருப்­ப­தாக கூறி அவற்றை மேற்­கோள்­கள் காட்­டக் கூடாது என்­றும் சொல்லி இருக்­கி­றார்­கள். அதற்கு பதி­லாக வட இந்­திய இலக்­கி­யங்­களை மேற்­கோ­ளாக காட்ட வேண்­டும், அத­னை­யும் கீழ­டி­யு­டன் தொடர்­பு­ப­டுத்த வேண்­டும் என்­றும் பரிந்­து­ரைத்திருக்­கி­றார்­கள். ஆர்ட்­டிஃ­பி­ஷி­யல் இன்­டெ­லி­ஜென்ஸ் வைத்­துக் கொண்டு அதி­லி­ருந்து ஒவ்­வொரு பகு­தி­யை­யும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளாக்கி இருக்­கி­றார்­கள்.
‘‘தமி­ழர்­க­ளுக்கு தனித்­து­வ­மான வர­லாறு கிடை­யாது. கலாச்­சா­ரம், பண்­பாடுகிடை­யாது. சங்க இலக்­கி­யங்­களை மேற்­கோளே காட்­டக்­கூ­டாது’’ என்று கூறு­வ­தன் மூலம் சங்க இலக்­கி­யங்­களை படிக்­கக்­கூ­டாது, பார்க்க கூடாது, தீண்­டக் கூடாது என்ற நிலையை நேர­டி­யாக ஒன்­றிய அர­சாங்­கம் கூறி தமிழ்­நாட்டை அவ­மா­னப்­ப­டுத்தி நிரா­க­ரித்து இருக்­கி­றது.
கீழடி பெருமை நிலை­நாட்­டப்­பட்­டால் தமி­ழர் பெருமை நிலை­நாட்­டப்­ப­டும் என்று நினைத்து தொடர்ந்து தொல்லை தந்து வரு­கி­றது ஒன்­றிய அரசு.
கீழ­டி­யில் 1, 2, 3-ஆம் கட்ட அக­ழாய்வு பணி­களை ஒன்­றிய அர­சின் தொல்­லி­யல்­துறை மேற்­கொண்­டது. 4 முதல் 9 கட்ட அக­ழாய்­வு­களை தமிழ்­நாடு அர­சின் தொல்­லி­யல்­துறை நடத்­தி­யது. தமிழ்­நாடு அரசு நடத்­திய அக­ழாய்வு முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டு­விட்ட நிலை­யில், முதல் மற்­றும் 2-ஆம் கட்ட முடி­வு­களை ஒன்­றிய அரசு வெளி­யி­ட­வில்லை. முதல் மற்­றும் 2-ஆம் கட்ட அக­ழாய்வு அறிக்­கையை வெளி­யி­டக் கோரி உயர்­நீ­தி­மன்ற மது­ரைக்­கி­ளை­யி­லும் வழக்கு தொட­ரப் பட்­டது. உயர்­நீ­தி­மன்­றத்­தில் கடந்த 2024 பிப்­ர­வ­ரி­யில் விசா­ர­ணைக்கு வந்­த­போது, 9 மாதத்­தில் அறிக்கை வெளி­யி­டப்­ப­டும் என ஒன்­றிய அரசு கூறி­யி­ருந்­தது.
கீழ­டி­யில் நடந்த தொல்­லி­யல் அக­ழாய்வு குறித்த அறிக்­கையை மாற்­றித்தரு­மாறு அமர்­நாத்தை கட்­டா­யப்­ப­டுத்­தி­னார்­கள். ஒன்­றிய கலாச்­சா­ரத்­துறை அமைச்­சர் கஜேந்­திர சிங் ஷெகா­வத், ‘‘கீழடி குறித்த அறிக்கை அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லும், தொழில் நுட்ப அடிப்­ப­டை­யி­லும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இன்­னும் கூடு­தல் தக­வல்­க­ளு­டன், ஆய்வு முடி­வு­க­ளு­டன் வரட்­டும். எல்லா விதங்­க­ளி­லும் ஆய்­வு­கள் முடி­யட்­டும்” என்று வெளிப்­ப­டை­யா­கவே கீழடி முடி­வு­க­ளுக்கு எதி­ரா­கக் கருத்­துச் சொன்­னார்.
கீழடி அக­ழாய்வு தளத்­தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட கரிம கரி (Charcoal) மாதி­ரி ­க­ளின் கார்­பன் டேட்­டிங் (Carbon dating) மூலம், அந்­தப் பகுதி கி.மு. 800 ஆம் ஆண்­டைச் சேர்ந்த ஒரு குடி­யி­ருப்­புப் பகு­தி­யாக இருந்­தி­ருக்­க­லாம் என்று உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. பண்­டைத் தமிழ்ச் சமூ­கம் கி.மு. ஆறாம் நூற்­றாண்­டில் எழுத்­த­றிவு பெற்­றும், நகர நாக­ரி­கத்­து­ட­னும் மேம்­பட்ட தமிழ்ச்­ச­மூ­க­மா­க­வும் விளங்­கி­யதை கீழ­டி­ அ­க­ழாய்வு முடி­வு­கள் வாயி­லாக அறி­வி­யல் பூர்­வ­மாக தொல்­லி­யல் துறை நிலை நிறுத்­தி­யுள்­ளது. இந்த அறிக்­கையை ஏற்­றுக் கொள்­வ­தற்கு ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு மன­மில்லை. அது­தான் உண்­மை­யா­கும்.
கீழடி குறித்து அமர்­நாத் ராம­கி­ருஷ்­ணன் கொடுத்­தது 982 பக்க அறிக்கை ஆகும். இதில் அனைத்து ஆதா­ரங்­க­ளை­யும் அவர் கொடுத்­தி­ருக்­கி­றார். இறுதி அறிக்­கை­யைக் கொடுத்து இரண்­டரை ஆண்­டு­கள் ஆன பிறகு கேள்வி கேட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள்.
அதி­லும் குறிப்­பாக கீழ­டியை இந்­தி­யத் தன்மை உள்­ள­தாக மாற்­றித் தரச் சொல்­வ­தும், சங்க இலக்­கி­யங்­கள் வர­லா­று­கள் அல்ல என்­ப­தும் எந்த வகை­யி­லான அறிவு நாண­யம்?
சங்க இலக்­கி­யங்­கள், கி.மு. 3-ஆம் நூற்­றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்­றாண்டுவரை­யி­லான காலப்­ப­கு­தி­யில் (சங்க காலம்) தமிழ்­நாட்­டின் வர­லாற்றை எழு­த­வும், புரிந்­து­கொள்­ள­வும் உத­வும் மிகத் தொன்­மை­யான, நம்­ப­க­மான இலக்­கிய ஆதா­ரங்­க­ளாக விளங்­கு­கின்­றன. அவை தமி­ழர்­க­ளின் தொன்­மை­யை­யும், நாக­ரி­கத்­தை­யும், பண்­பாட்­டுச் சிறப்­பை­யும் உல­கிற்கு எடுத்­து­ரைக்­கின்­றன.
இலக்­கி­யங்­கள் மூல­மாக வர­லாறு அறி­தல் அடிப்­ப­டை­யா­னது ஆகும். இன்று வர­லாறு எழு­து­வது போல அன்று வர­லா­று­கள் எழு­தப்­பட்­டது இல்லை. இலக்­கி­யங்­கள் மூல­மா­கத் தான் சொல்­லப்­பட்­டன. அதையே கேள்வி கேட்­பது, தமி­ழுக்­குச் செய்­யப்­ப­டும் இழுக்கு அல்­லவா? காசி தமிழ்ச் சங்­க­மம் நடத்­திக் கொண்டே தமி­ழின் கழுத்தை அறுக்க வேண்­டுமா?
இரண்டு திருக்­கு­றள் சொல்­வ­தும் காசி தமிழ்ச் சங்­க­மம் நடத்­து­வ­தும் தாங்­கள் செய்­யும் தமிழ் விரோ­தச் செயல்­களை மறைக்­கவே!
-முரசொலி
(31-12-2025)
(தலையங்கம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...