வெள்ளி 30 2026

என்னாது காந்தி செத்திட்டாரா...????

1.சுடப்பட்டு செத்தவர்.2. தூக்கில் கொல்லப்பட்டவன்.




“ அண்ணே! அண்ணே!! காந்தி செத்திட்டாருண்ணே...”


“ எந்த காந்தி..டா..”


“இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரு..ல்ல  , அவருன்ணே...”


“ எப்படிடா செத்தாரு... சுட்டுடாங்கண்ணே..”


“ என்னாது சுட்டுடாங்களா.... யாருடா.... போலீசா...??”


“ போலீசும்  இல்லண்ணே.!” இராணுவமும் இல்லேண்ணே..”


“ அப்ப..யாருடா..சுட்டது..”


“நாத்துராம்கோட்சே என்ற செத்தவரு சாதிகாருணே”


“அந்தாளுக்கும் இந்தாளுக்கும்  வாய்க்கா வரப்பு சண்டையாடா..?”


“ அப்படி தெரியலண்ணே.... இனிமே தான் தெரியும்ணே”


“ சரி விடு,  செத்தாளு பிரிட்டிஸ் அரசுக்கு நெருக்கமானவாரு, சுட்டவனும் பின்னாளில் சாவான்...  சுட்டாளும்சரி, செத்தாளும் சரி..ரெண்டுஆளும் நமக்கு நல்லவங்க  இல்ல.. பாடு படும் மக்களுக்கு  எந்த பலனுமில்ல....ரெண்டு ஆட்களை சேர்ந்தவங்க மாறி மாறி ஆட்சி செய்து நம்மள கொல்லுவானுங்க..”


“ என்னண்ணே இப்படி சொல்றிங்க....”

“ உண்மையைத்தாண்டா சொல்றேன். அம்பேத்தார் எழுதிய புத்தகத்தை படி செத்தளோட வன்மம் புரியும்.. சுட்டவனும் செத்தாளவிட பயங்காரமானவன். அவனப்பற்றி தெரியுனும்னா கம்யுனிஸ் காரங்க புத்தகத்தைப்படி விவரமா புரியும்.டா.”.


“ கண்டிப்பாண்ணே ரெண்டு பேரு வரலாற தெரிந்து கொள்கிறேன்.”


“ அவுக ரெண்டு பேரும் பங்காளிகள்.. வெளிப்பார்வைக்கு பகையாளிகள் போல் காட்டிக் கொள்வார்கள்..இவர்களை நம்பிட சாவது நம்ம மக்கள்தான்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

என்னாது காந்தி செத்திட்டாரா...????

1.சுடப்பட்டு செத்தவர்.2. தூக்கில் கொல்லப்பட்டவன். “ அண்ணே! அண்ணே!! காந்தி செத்திட்டாருண்ணே...” “ எந்த காந்தி..டா..” “இந்தியாவுக்கு சுதந்திரம...