பக்கங்கள்

உறவுமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவுமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 03 2014

வல்லரசாகும் இந்தியாவில் இது எந்த வகையான உறவுமுறை..

படம-www.nhm.in


ஒருவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை பொறந்தது. அந்தக் குழந்தை நடக்கும் காலத்தில் குழந்தை தனக்கு பிறக்க வில்லை என்று. கணவர் மனைவியை சந்தேகப்பட்டு  இம்சை செய்ய,. இம்சை பொறுக்க முடியாத மனைவியானவர். குழந்தையை  அந்த இம்சை காரனிடமே விட்டுவிட்டு, இன்னொருத்தியின் கணவருடன் எஸ்கேப் ஆகவிட்டார்.  

மூன்று பெண் குழந்தைக்கு தந்தையான் ஒருவர்,திடிரென்று அகால மரணமடைந்துவிட, மூன்று குழந்தைக்கு தாயான் பெண், வேறு ஒரு நபரின் துணையுடன் மூன்று குழந்தைகளுடன் கிராமத்தைவிட்டு,நகரத்துக்கு குடியேறி,கட்டுமானத் தொழிலில் சித்தாளாக வேலை பார்த்து வர..

 அந்தத் தொழிலின் போது தன்னைவிட.இளவயது கொத்தானரை  சேர்த்துக் கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டு வரும்பொழுது, இளவயது கொத்தனார்க்கு அவரது வீட்டார் ஒரு பென்ணைப்பார்த்து திருமணத்தை முடித்துவிட்டதால், இள வயது கொத்தனரால் சித்தாள் கைகழுவி விட.ப்பட்டார்.....


ஓடிப்போன மனைவிக்கு பிறந்த குழந்தையை மனைவியின் வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு , கட்டுமானத் தொழிலில்  சென்ட்ரிங் பலகை  அடைக்கும் தொழில் செய்து வருகையில்...ஒரு சில மாதங்களில்  வேலைக்கு சென்ற இடத்தில் வாழா வெட்டியாய் இருந்த ஒரு பெண்ணை கூட்டி வந்து வாழ்ந்தபோது  அந்தப் பொண்ணுக்கு பிள்ளையே பிறக்கவில்லை...இது இப்படி இருக்க...

இளவயது கொத்தனாரால் கைவிடப்பட்ட சித்தாளும் பிள்ளை ஏக்கத்தில் இருந்த சென்ட்ரிங் தொழிலாளியும் ஒரே இடத்தில் வேலை பார்த்த முதல் நாளில்  முதல் பார்வையிலே இருவரும் காதல் கொண்டு கனவன் மனைவியாக   தனியாக ஒரு வீட்டில்  சேர்ந்து வாழ்ந்தனர்.

இப்படியாக, இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சித்தாளின் முன்னாள் இறந்துவிட்ட கணவருக்கு பிறந்த மூன்று பெண் குழந்தைகளில் மூத்தப் பெண்ணை, பெரிய அரசியல் பிரமுகர் வீட்டில், வீட்டு வேலை செய்வதற்கும் அவர்களே ! வளர்த்து திருமணம் முடித்து விடுவதாக பேசிய பேச்சில் சிறிது பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு தத்து கொடுத்துவிட.............

இரண்டாவது பெண்னோ... சித்தாள் வேலை பார்த்தபோது ஏற்கனவே, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கொத்தனாரை கட்டிக்கொள்ள....

மூன்றாவதாக உள்ள பெண்ணோ , தாயாருடன் சித்தாள் வேலை பார்த்து வரும் சித்தாள் மூலம் தாய் தந்தை இல்லாத ஒரு பையனுக்கு கழுத்தை நீட்டிவிட..

இந்நிலையில் செண்டரிங் தொழிலாளி, தனக்கு பிறந்தது .முதலாவதாக பிறந்த ஆண் மட்டும்தான் மற்ற இரண்டும் தனக்கு பிறக்கவில்லை அது  பில்டிங் கான்ட்ராக்ட்காரனுக்கு பிறந்தது என்று சித்தாள் பெண்ணுடன் சண்டையிட...............

அந்தச் சண்டையை சென்ட்ரிங் தொழிலாளியின்  சொந்த மச்சான் விலக்கி விடுவதற்க்காக அவ்வப்போது வந்து போகும் நிலையில், மனைவியான சித்தாள்  பெ்ண், அவரின் மச்சானை அண்ணா....அண்ணா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிட்டு பழக..... அதே போல் எல்லாப் பிள்ளைகளும் மாமா....மாமா.....மாமா..... என்று கூப்பிட்டு குடியருக்கும் தெருவுக்கே “டமாரம்” அடித்து தெரிவிக்க்க..................

ஊடல் புரிவதும், ஊடல் முடிந்தவுடன் கூடுவதும், கூடி முடித்தப் பின் சண்டையிடுவதுமாக சென்று கொண்டு இருந்த காலத்தில்  ஒருநாள்.

அதிகமான டாஸ்மாக் போதையில் சென்ட்ரிங்தொழிலாளியும் சித்தாளின் தற்போதைய கனவனுமானவன் உயிர் துறந்தான். அவன் செத்த பின்.,பிள்ளை இல்லாதவள் சென்ட்ரிங் தொழிலாளியின் சகலையுடன் எஸ்கேப் ஆகிவிட்டாள்.

அவன் இறந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து, அடிக்கடி வந்து போய்க் கொண்டுருந்த செத்தவனின் மச்சான்காரன்.., அதாவது செத்தவனின்  மனைவியான சித்தாளால் அண்ணா..அண்ணா என்று அழைக்கப் பட்டவர் சித்தாளின் அத்தானாக மாறிவிட்டார். மாமா..என்று கூப்பிட்ட அத்தனை பிள்ளைகளும் பிளேட்டை மாற்றி போட்டு “ அப்பா” என்று அழைக்கத் துவங்கிவிட்டன.

இவர்கள் இருவரும் உறவு கொண்டு இருப்பதை நேரில் கண்ட செத்தவனுக்கு பிறந்த மூத்த மகன் ..  தெருவே ரணகளமாகச் சவுண்டுவிட்டு சண்டையிட்டுப் பார்த்தும் அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. 

வெறுத்துப் போனா அவன், பந்தல் தொழிலுக்காக சென்ற இடத்தில்,  தான் காதலித்த ,தந்தையின் சாதியைச் சேர்ந்த ஒரு பென்னை  திருமணம் முடித்துவிட்டு அந்தத் தெருவிலே இல்லாமல் வேறு தெருவுக்கு குடிபோகிவிட்டான்.

அண்ணாவாக இருந்து அத்தானாக மாறிவிட்டவருக்கு தனியாக குடும்பம் குட்டி எதுவும் இல்லை போலிருக்கிறது. மைத்துனனின் மனைவியை தன் மனைவியாக மாற்றிக் கொண்டார். மாமாவாக இருந்தவர் அப்பாவாக மாறி அந்தக் குடும்பத்தோடு ஒன்றிவிட்டார். இந்த மாதிரியான நிகழ்வுகள்.

 வல்லரசாகும் இந்தியாவில் இது எந்த வகையான் உறவு முறை..???????????

சனி 14 2012

சந்தேகப்பட்ட புரட்சி நடிகரும்,சந்தேகத்தை தீர்த்து வைத்த நகைச்சுவை நடிகரும்...

ஒலக சினிமாகாரங்களுக்கு உறவு முறை இருக்கோ. இல்லீயோ.
ஆனால் தமிழ் சினிமாகாரங்களுக்கு எந்தவித உறவு முறையும்
சினிமாவுக்குள்ளும் சரி, வெளியிலேயும் சரி இருந்தது கிடையாது

உதாரணத்துக்கு உறவு முறையே கிடையாது என்பதற்கு சாட்சியாக
சிலதுகளை சொல்லலாம். விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற
நடிகர், முன்னால் கதாநாயகி ஜெயலலிதாவின் அம்மாகூட கனவனாக நடித்திருப்பார்.அடுத்து அந்த அம்மாவின் மகளான கதாநாயகியுடன் காதலனாகவும் கனவனாகவும் நடித்திருப்பார்.

இவரே,ஸ்ரீதேவி என்ற நடிகைக்கு கவரிமான் என்ற படத்தில் அப்பா
வாக நடித்திருப்பார். வேறு ஒரு படத்தில் காதலனாக நட்த்திருப்பார்.


கோச்சடையானக்கூட எடுத்துக்குங்க, மருமகனுடன் நடித்த நடிகையுடன்
கட்டிப்பிடித்து காதல் ஆட்டம் போட்டுயிருப்பார்



புரட்சி நடிகருக்கூட ,அவரு படத்தில் தன்னை நேசிக்கும் பென்னுடன் கட்டிபிடித்து காதல் டூயட்பாடி மணவறைக்கெல்லாம் சென்று விட்டு கடைசியில் தங்கச்சி என்பார். என்னய்யா? இப்படி என்றால்
அவருக்கு முன் அவரது ரசிகர்கள் சொல்வார்கள். அது கனவுங்க
என்பார்கள். கனவிலேயும் ,நிஜத்திலேயும் சினிமாகாரனுக்கு உறவு
முறையே கிடையாது என்பதுதான் உண்மை.

இதற்கு மாறாக, இருபதாம் நுாற்றாண்டில் நடித்து மறைந்த ஒரு
நகைச்சுவை நடிகர் சினிமாவிலும் நிஜத்திலும் முறையான உறவு
முறையை கடைப்பிடித்தள்ளார். அதற்கு பின்வரும் சம்பவங்களையே
 எடுத்துக்கொள்ளலாம்

புரட்சி நடிகர். தன்னுடைய எம்ஜியார் படக் கம்பெனி மூலமாக “அடிமைப
பெண்” என்ற படத்தை எடுத்துக்கொண்டு இருந்தாராம். அதில்புரட்சி
நடிகர். அப்பா.மகன் என்ற இரு வேடத்திலும், புரட்சி தலைவி அக்கா
தங்கை இரு வேடத்திலும் நடிக்க. அந்தப் படத்தில் புரட்சி நடிகருக்கு
தோழனாக சந்திரபாபு என்ற நகைச்சவை நடிகரும் நடித்திருந்தனர்.

அந்த பட்த்தின். படப்பிடிப்பின்போது ஏற்ப்படும் இடைவெளியின்போது
படப்பிடப்பு இல்லாத நேரங்களின்போதும் புரட்சி தலைவியும்
நகைச்சுவை நடிகரும் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டு
இருப்பார்களாம்.

இப்படி இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவதைக் கண்ட புரட்சி நடிகர்
கோபம் கொண்டாராம். புரட்சி நடிகரின் கோபத்தை கண்ட நகைச்சுவை
நடிகர்...புரட்சி நடிகரிடம்...

ராமச்சந்திரா........( மருதுார் கோபால இராமச்சந்திரன் என்பதை
ராமச்சந்திரன் என்றே கூப்பிடுவார்களாம். அதோடு நகைச்சுவை
நடிகர்.,புரட்சிநடிகர்க்கு சீனியராக இருந்ததால் பெயரைச்சொல்லிதான்
கூப்பிடுவாராம்).

ராமச்சந்திரா...... நானும் அம்முவும் தனியாக சந்தித்து பேசுவதைப்
பத்தி, தப்பாக சந்தேகப்படுர.......தப்பாக சந்தேகப்படாத.... ராமச்சந்திரா..
அம்மு எனக்கு மக உறவு,அம்முவின் அம்மா என் பாதுகாப்பில்
இருந்தபோது பிறந்த பொன்னுதான் அம்முகுட்டி. எனக்கு மக உறவு
முறை இல்லையா? என்றாராம்.

இதைக்கேட்ட புரட்சி நடிகர்.நகைச்சவை நடிகரிடம் சமதானம்
அடைந்து. தந்தையும் மகளும் சந்தித்து பேசுவதைப்பற்றி படப்பிடிப்பு
முடியும்வரை கண்டு கொள்ளவே இல்லையாம்.

இன்றைய கதாநாயகன்.வில்லன்.நகைச்சவை நடிக நடிகையைவிட
அரிதிலும் அரிதான சினிமாத் துறையில்முறையான உறவு
முறையைப் பின்பற்றிஇருப்பது வியப்புக்குரியதாகத்தான் இருக்கிறது.




இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...