ஏலே, மண்ணாங்கட்டி
அப்பனுக்கு தப்பாமே
பிறந்த பயலே........
இங்க வாலே....................
ஓடுற வயசாச்சு
இன்னும் அம்ணமா....
திரியுறேலே......
அம்மணமா திரிஞ்சா
புடுக்கு அந்துரும்லே.....
அந்த புடுக்க யாரும்
சிவன் புடுக்கா.....
கும்பிட மாட்டாம்பிலே..
ஒரு லங்கோடு கட்டிக்கலே........
ரூபா நோட்டுல இருக்குற
காநதியே எட்டு முழ வேட்டிய
நாலு முழமாக்கி லங்கோடு
கட்டிக்கிட்டாருலே.............
அம்மாம் பெருசே.......
லங்கோடு திரியையிலே...
இம்மாம் சிறுசு.............
அம்மணமா திரியலாம்மாலே.
நாடு வல்லரசாகுதுன்னு
தெரியுமாலே............
நாடு முன்னேறுவதற்கு
உறுவ லங்கோடு இல்லேன்னா
ஓம் புடுக்க உறுவியிருவாங்லே......
அதுக்காகவாது லங்கோடு
கட்டுலே..............