அவரை எனக்கு தெரியவில்லை.
யார் மூலமோ என்னை
அவர் நன்கு தெரிந்து
வைத்திருக்கிறார்.....
அதனால்தான் என்னவோ
தெரு நாய் கடித்தவுடன்
என்னைத் தேடி வந்திருக்கிறார்.
எந்தவொரு சடங்கு சம்பிராதயம்
இல்லாமல் கடிபட்ட இடத்தை
உப்பு சோப்பு போட்டு
கழுவி சுத்தமாக துடைத்தப்பின்
ஹோமியோபதியின் மருந்தானா
ஹைப்பெரிகம் என்ற மாத்திரையை
சுவைக்க கொடுத்தேன்.
சிறிது நேரத்துக்கு பிறகு
பின் அவரே சொன்னார்
பெயருக்கு பொருத்தமாக
இருக்கிறீர்கள் என்று........
சிறப்பு. வலைப்பூவிருந்து பலரும் காணாமல் போய்விட்ட சூழலில் நீங்களும் நானும் இன்னும் பயணித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சிதான்.
பதிலளிநீக்குஊரான்
நீக்குமகிழ்ச்சி தோழர்
நீக்கு