| ராபர்ட கால்டுவெல் http://ta.wikipedia.org/s/7s7 |
சூத்திரர்கள் மொழி தமிழ். இதை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள் ஆரியர்கள் என்றார் அறிஞர் கால்டுவெல்
இன்றைய நூற்றாண்டைப் போலவே, 18ம் நூற்றாண்டிலும் ஆங்கிலம் படித்தால்தான் பிழைக்க முடியும், சமஸ்கிருதம் படித்தால்தான் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நிலை இருந்தது.
இன்றைக்கு மத்திய-மாநில அரசுகள் மாதிரிதான் தமிழகத்தை ஆண்டவர்கள் மன்னர்களான ராஜராஜன் காலத்திலும் பல்லவர்கள் காலத்திலும் சமஸ்கிருதம் படிப்பதற்கு மானியம் கொடுத்தனர்
அதனால் அன்றைய காலத்தில் தமிழை படிக்கவோ, வளர்க்கவோ ஆளே இல்லாத நிலைமை இருந்து வந்தது.
இந்த நிலையில்தான் 18ம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் அறிஞர் கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தார். கால்டுவெல் மட்டுமல்ல அவரின் நண்பர்களான வெள்ளைக்காரர்கள் அனைவரும் தமிழ் அறிஞர்கள்.
பவர் என்ற பிரஞ்சுக்காரர்தான் சீவக சிந்தாமணியை கொண்டுவந்தார். இவர் மூலம்தான் உ.வே.சா. பல நூல்களைத் தேடிச்சென்றார். முர்டோக் என்ற அறிஞர்தான் தமிழ் நூல்களின் அட்டவனையைத் தொகுத்தவர். முதன் முதலில் தமிழ் கல்வெட்டை படித்துச் சொன்னவர் ஏ.ஜி. பர்னல் என்பவராவார். இவரைப் போன்றவர்களிடம் தமிழ் பயின்று வந்தவர்கள்தான் ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள்.
தமிழ் மொழியும் கலாச்சாரமும் உன்னமானவை. என்னுடைய ஆய்வு தமிழ் மொழியின் மதியப் பொழுதிலிருந்துதான் தொடங்குகிறது என்றார் கால்டுவெல்.
ஆரியர்-பார்ப்பனர்களின் வேதப் புராணங்களின் புளுகு புரட்டையும் இந்தியாவின் மூல மொழி சமஸ்கிருதமே என்ற வரலாற்று அயோக்கியதனங்களை தகர்த்தது கால்டுவெல்லின் தமிழ் ஆராய்ச்சிதான்.
தமிழை விற்று வயிறு வளர்த்த மன்னர்களும் (கவி)பேரரசர்களும், தமிழை இளித்தும் பழித்தும் பேசிய நாற வாய் ஒன்று. தமிழை வாழ்த்தியது என்று சிலிர்த்து எழுந்து விழா எடுத்தார்கள்.
புதைக்கப்பட்ட தமிழ் மொழியைத் தோண்டி எடுத்து உயிர் கொடுத்து உலா விட்டவர்கள் கால்டுவெல்லும் அவருடைய சம காலத்து மனிதர்களும்தான்.
அவர்கள்தான் தமிழ் மரபு குறித்த அடையாளத்தையும் பெருமிதத்தையும் வழங்கியவர்கள்.
தமிழ் மொழியை எனது தாய்மொழி என்றும் , என்னை வாழ வைத்த மொழி என்று சொல்லிக் கொள்பவர்கள் கால்வெல்லை மறப்பது நன்றிக் கெட்டத்தனமாகும்.
நன்றி!!--புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014
| தலைப்பைச் சேருங்கள் |