திங்கள் 04 2011

அது என்னங்க? சொல்லிபுட்டு போங்க!



பள்ளிப்படிப்பை முடிக்காம சுற்றிதிரிந்த நேரம்.எனக்கு அறிவுரை சொல்ல என் அம்மா ஒரு பெரிசுவிடம் இழுத்து
சென்றார்கள்.அந்த பெருசு என்அம்மா அடிப்பதை தடுத்து
நிறுத்தி என்னை அவரிடம் விட்டுட்டு போகச்சொன்னார்.

பிறகு, என்னைப் பார்த்து, நான் கைகட்டி நிற்பதைப் பார்த்து
கைகளை பிரித்துவிட்டு அருகில் அழைத்துக் கொண்டார்.
  
“டேய்,ய்....எத்தனாப்புடாபடிக்கிற”..                                                        

ஒன்பதாப்புல மூனுவருஷம்”.

வாத்தியார, டீச்சரா,

டீச்சரு,

அதான் மூனு வருஷமா படிக்கிறியா,

இல்ல,அந்த டீச்சரு என்ன சும்மா அடிச்சுகிட்டே இருக்கும்

நீ,நல்லா படிச்சா அந்த டீச்சரு ஏன்னடா அடிக்க போறாங்க,
நல்லா படிச்சாதாண்டா அறிவு வளரும். தெரியுமா?

எனக்கு அறிவெல்லாம் இருக்கு.

“நிஜமா அறிவு இருக்கா”.

.தலையாட்டினேன்.

சரி,ஒ.ஒ அறிவ சொதிக்கட்டுமா? அதுக்கு முன்னடி நமக்குள்
ஒரு பந்தயம். நா.....ன் சொல்ற கதைய சொல்லிட்டினா, நீ
பள்ளிகூடம் போகவேணாம். சொல்லமுடியலைன்னா...!

“நா..பள்ளிகூடம் போறேன்

“சாபஷ், பேச்சு மாறக்கூடாது.எங்க என் கையில சத்தியம்
அடுச்சு சொல்லு”.

“சத்தியம்.-

என்னத்த சொல்லிடப் போறராரு பெருசு”””.- மப்புல இருந்தேன்

கதைய கேட்டபிறகுதான். “ஆகா..நம்மல நைசா பேசி மாட்ட
வச்சுட்டாருன்னு தெரிஞ்சது.
     
ஒரு ஊருல ஒருபுருஷனும் ஒரு பொண்டாட்டியும் இருந்
தாங்க. ஒரு நாளு வெளி வேலைக்கு போயிருந்த வேளையில.அந்த புருஷனத்தேடி ஒருவன்.வந்தான்.வந்தவன்
கடைத்தெருவிலருந்த அந்த பொண்டாட்டியிடம் அவ புருஷ
னைப்பற்றி கேட்டான். அவன் பொண்ட்டாட்டியோ இப்படி
சொன்னாள்.

“அய்யா, எம்புருஷன் சுட்டவனை,சுடப்போயிருக்காரு.

“சரி, ஓம்புருஷன் எப்ப வருவாரு? வந்தவன் கேட்டான்.

அதற்கு அவள், அய்யா.நீர் வந்தால் வரமாட்டர்.நீரு வரா விட்டால் வருவார்.

“உன் வீடு எங்க இருக்கு –என்றான்.

“என் வீடா, என்வீடு பாலுக்கும் பானைக்கும் நடுவுல­என்றாள்

-பல பதில்களைச் சொன்னேன். தப்பு என்றார். என்னை யோசிக்க அவகாசம் கொடுத்தார். சில வழிமுறையும் சொன்
னார். மறுநாள் அவரை பார்க்காமல் பள்ளிகூடம் சென்றேன
                    ----------
படிச்சிடிங்களா?...........
          
“இந்த இடுகையை படிச்சுட்டு போறவங்களே!
    
உங்க எண்ணத்த சொல்லிவிட்டுப் போங்க!
    
உங்க எண்ணத்த சொல்லிவிட்டுப் போங்க!........
    
இந்த மூன்று  கேள்விகளுக்கும் அர்த்தத்தை சொல்லிவிட்டுப் போங்க?.............

x

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...