பக்கங்கள்

Tuesday, July 26, 2011

யாருக்கும் பாரமாய்............

எனக்கு டீ குடிக்கும்
பழக்கமில்லை-அதனால்
டீ கடைக்கு போவதில்லை

மது குடிக்கும் பழக்கமில்லை
ஆனால் மது கடைக்கு
போகமல் இருந்தில்லை

சாமி கும்பிடும் பழக்கமில்லை
ஆனாலும் சாமி கும்பிடாமல்
இருப்பதில்லை

சாப்பாடு கிடைப்பதில்லை
அதற்காக சாப்பிடாமல்
இருக்க முடிவதில்லை

யாரிடமும் பேசுவதில்லை
பேசினால் அவர்களை
விடுவதில்லை

யாரும் என்னை சிரிக்க
வைக்க முடிவதில்லை
அதற்க்காக நானும்
 அழுவதில்லை

வாழ்க்கையை ரசிக்க
தெரியவில்லை-அதற்காக
தற்கொலைக்கு
போனதில்லை

புமி எனக்கு பாரமாய்
இருந்ததில்லை-அதனால்
யாருக்கும் பாரமாய்
இருக்க போதில்லை.


2 comments :

 1. புமி எனக்கு பாரமாய்
  இருந்ததில்லை-அதனால்
  யாருக்கும் பாரமாய்
  இருக்க போதில்லை.//

  மண்ணுக்கு மரம் பாரமா?
  மரத்துக்குக் கிளை பாரமா?

  ReplyDelete
 2. சில நேரங்களில் மண்ணுக்கு மரம் பாரமாகவும் மரத்துக்கு கிளை பாரமாகவும் ஆகிவிடுகிறதே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com