பக்கங்கள்

Saturday, June 09, 2012

பத்தாண்டுகளில் இந்தியாவில் 66லட்சம் பேர் சாகப் போகிறார்கள்!!!!

டாஸ்மாக் மது பாட்டில் விலை ஏறிப்போய்விட்டதாலும்
கஷ்டப்பட்டு டாஸ்மாக் டாஸ்மாக் அருந்தி வாகனத்தில்
செல்லும்போது பிடிக்கும் பேலீசுக்கு,அபராதமோ,மாமுலுலோ
அல்லது ரெண்டுமோ,கொடுக்க வழியில்லாததால். பெரும்
பாலான பேர்கள்.குட்கா.பான்மசாலாவுக்கு மாறிவிட்டார்கள்


குட்கா,பான்மசலா விலைமலிவாக இருப்பதாலும்,அதில்
கொஞ்சுன்னு எடுத்து உள்ளாங்கைளில் கசக்கி நாக்கின்
கீழோ,அல்லது உதடுக்கும் பல்லுக்கும் இடையில் அதாவது
பல் அரனையில் வைத்தால் உடனே, ஜில்லென்று நரம்புகள்
வழியாக புத்துணர்வு பரவி சில நிமிடங்களில் போதை ஏறி
தலை இலேசாகும். டாஸ்மாக் மாதிரிஅருந்தியபிறகு
 முறுக்கோ,திண்பண்டங்களோ எதுவும் கொரிக்க
வேண்டியதில்லை.


பளபளக்கும் பாககெட்டில் அடைத்து மலிவான விலையில்
விற்க்கப்படும் குட்கா,பான்மசலாவினால் இளம் தலைமறை
யினர் உள்பட நடுத்தர.முதியோர் தலைமுறையையும் இந்தப்
பழக்கம் ஆட்க்கொண்டுவிட்டது.

ஆண்டுக்கு சராசரியாக ஆறு லடசம்பேர் குட்கா,பான்மசலா
பழக்கத்தால் வாய்ப்புற்று,மற்றும் வாயில்,நாக்கில்,தொண்டை
யில் கேன்சர் ஏற்ப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கிறார்கள்

புகைப்பிடிப்பது.டாஸ்மாக் போதை அறுந்துவது போன்ற பழக்க
மில்லாதவர்கள்கூட கு்டகா.பான்மசலா பழக்கத்துக்கு ஆட்பட்டு
ஓரல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்

மத்திய- மாநில அரசகளும் உள்நாட்டு,வெளிநாட்டு தனியார்
முதலாளிகளுக்கு முந்தானை விரிப்பதால். தனியார்மயம்
தாராளமயத்தால் பெருகும் வேலையில்லாத்திண்டாடட்த்
தாலும் ,அரசாங்க மருத்துவ சிகிச்சை புறக்கணிப்பாலும்
 தனியார்மருத்துவ சிகிச்சை கொள்ளையாலும் சரியான
சிகிச்சையின்றி அறுபத்தாறு லட்சம்பேர் அடுத்த பத்தாண்டு
களில் பரிதாபமாக சாகப்போகிறார்கள்.

6 comments :

 1. ஸ்லோ பாய்ஸன் குறித்து மிக அருமையாக
  பதிவு செய்துள்ளீர்கள்
  பயனுள்ள பதிவு
  தொடா வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

   Delete
 2. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.in/2012/06/7.html

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரத்தில் குறிப்பிட்டு வாழத்திய தங்களுக்கு நன்றி! நன்றி!!

   Delete
 3. குட்கா - பான் மசாலாவுக்கு தடை: இதுவே தக்க தருணம்!

  http://arulgreen.blogspot.com/2012/06/blog-post.html

  ReplyDelete
 4. வினவு தளத்திலிருந்து உங்கள் பதிவை பட்த்துவிட்டேன். அய்யா!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com