பக்கங்கள்

Friday, June 08, 2012

அறிவு பெருக ஒரு வழி!!!


புதிதாய் வேலைக்கு சென்ற
இடத்தில் தவறாய் செய்த
வேலையால் எனக்கு

கூலி கொடுக்கும் முதலாளி
அறிவு இருக்கா என்றார்.

அறிவு இருப்பதும் இல்லாததும்
அவருக்கே தெரியாத போது
எனக்கு எப்படித் தெரியும்

அறிவு பெருக என்ன
வழி என்று வழியில்
வந்த அகவை முதியவர்
ஒருவரிடம் வினவ.அவரோ

அரசமர காற்றை சுவாசி
அறிவு பெருகும். புத்தர்
அரச மர அடியிலிந்துதான்
அறிவு பெற்றார் என்றார.

2 comments :

  1. நன்றாக இருக்கிறது நண்பா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரைக்கு நன்றி! நண்பரே!

      Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!