சனி 21 2012

“மகாத்மா”ன்னு நாந்தான் பேரு வச்சேன்- தேசியகவி, இல்ல இல்லை முன்னாடியே..நாந்தான் பேரு வச்சேன்-மகாகவி.

பிர்லா மாளிகையின் சுகவாசிக்கு “மகாத்துமா” ன்னு பேரு வச்சது யாருன்னு
இந்தியாவின் தேசிய கவியின் கோஷ்டிக்கும், மகாகவியின் கோஷ்டிக்கும்
சொற்போர்யுத்தமும்,அகிம்சா வழியிலான ஆதார யுத்தமும் இன்னமும்
தொடர்ந்தும். ஓய்வு விட்டும் நடந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் நடாத்திய யத்தத்தில்  வெற்றி பெற்றவர் யாரென்றால்............


இந்திய கரன்ஸி நோட்டில் பல்லு இல்லாத வாயால்  வெற்றிப் புன்னகையுடன்
காட்சியளிக்கும் திருவாளர். மோகன் கரம்சந்த் காந்திதான்.


சனகனமன என்று ஆங்கிலேயனை வரவேற்றுப் பாடிய தோத்திரப்படலே. இன்று இந்தியாவின் தேசீய கீதமாக  அருளியவர்தான் இந்தியாவின் தேசிய கவி. இந்த தேசியக் கவிக்கு முன்னமே.........................


இந்தியாவில் இந்து என்ற ஆங்கில நாளிதழையும்,சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளிதழையும் தொடங்கி நடாத்தியவருமான சுப்பிரமணி அய்யர் என்பவருடன்   சேர்ந்து சென்ற இந்தியாவின் மகாகவி தான் எம்.கே.காந்திக்கு “மகாத்துமா” என்று பெயர் சூட்டினார் என்றும். இதற்கு ஆதரவாக..........



12.9.1921-ல் மகாகவி பாடிய கவிமாலையை காட்டுகிறார்கள்.

வாழ்க நீ எம்மான் இந்த
வையத்து நாட்டிலே ல்லாம்
தாழ்வற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறி கெட்டு
பாழ்பட்ட நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்தமா. நீ வாழ்க! வாழ்க!- ---


இதற்குப்பின்னர்தான் 27.9.1932-ல் தேசிய கவி...“எரவாட” சிறையில் 
காந்திதங்கியிருந்த அறைக்குள் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி பூட்சுகாலுடன் காந்தியை சந்திக்க வந்தற்க்காக... அந்த சிறை 
அறையை சம்ரோட்சனம்அதாவது தீட்டு கழித்து பின்னர் 
விடுதலையாகி வெளியே வந்தபிறகுதான் சந்தித்து “மகாத்துமா” 
என்று புகழ் மாலை சூட்டினாராம்.



ஆக,இந்து சனாதன உணர்வும். இந்துமதப்பற்றுமுள்ள மகாகவியின் பெயரைக் கொண்ட சுப்பிரமணிய அய்யருடன் சேர்ந்து  சுப்பிரமணய பாரதி என்ற மகா
கவியும் தேசியகவியும் சேர்ந்துதான்  காந்திக்கு “மகாத்தமா”ன்னு பேரு
சூட்டியுள்ளார்கள். இந்தியாவின் உழைக்கும் மக்கள் அல்ல என்பது நிருபண
மாகிறது.

இந்திய தேசிய கவியும்.மகாகவியும் அஞ்ஞானவாதிக்கு சூட்டிய பெயர்
“மகாத்துமா”............


அன்றைய இந்தியாவை ஆண்ட பிரிட்டீஸ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் சூட்டிய பெயர் “அரை நிர்வாண பக்கரி”

சாதிப்பொருத்தம்,மதப்பொருத்தம்.நாள் பொருத்தம் பார்க்கும் அவாளான
அய்யர்மார்கள்.  பேர் பொருத்தம் பார்ப்பதில் கோட்டை விட்டவிட்டார்கள்.




அவாள் கோட்டை விட்டதை .வின்ஸ்டன் சர்ச்சில்  சரியாக 
கணித்து பேர்வைத்தள்ளார். அதுதான் “அரை நிர்வாண பக்கரி” 

4 கருத்துகள்:

  1. வெள்ளைகாரனை தவிர இந்த உலகில் வாழும் வேறு யாரையும் மனிதனாகவே நினைக்காத சர்ச்சில் துரையை உதாரணம் காட்டியபோதே உம்முடைய மனநிலையை பற்றி சந்தேகம் வந்துவிட்டது திரு.வலிப்போக்கன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  2. அவாளுக்கு இவாள்தான பொருத்தம் என்ற அர்த்தத்தில்தான் வெள்ளைக்காரனை காட்டியதே ஒழிய,வெள்ளைக்காரன் யோக்கியவான் என்ற அர்த்தத்தில் அல்ல.திரு விஜயன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. காந்தி மேல் செஞ்சட்டைகள் எடுத்துள்ள அவதூறுப் போர் வெ(ற்)றி அடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செஞ்நட்டைகளை வம்புக்கு இழுக்கும் காந்தி பக்தர்களுக்கு நன்றி!

      நீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...