பக்கங்கள்

Saturday, April 05, 2014

மூன்று மயத்தையும் ஓட்டால் தடுக்க முடியுமா,,,...,,,???


questionable-ballot-box
படம் வினவு
http://www.vinavu.com/wp-content/uploads/2014/04/questionable-ballot-box.jpg

கிராமத்தை
அழித்து
நகரத்தை
புரட்டிபோட்டு
கடலிலே
கலக்கும்
வெள்ளத்தால்
கடல் மட்டம்
உயர்வதே
தனியார்மயம்

கிராமத்தை
அழித்தும்
நகரத்தை
புரட்டிபோட்டும்
ஆர்ப்பரித்து வரும்
வெள்ளத்தை
தடுக்காமல்
உவகை கொள்ள
வரவேற்பதே
தாராளமயம்

உயரும் கடல்
நீர் மட்டத்தால்
பள்ளமான
இடங்கள்
முழ்கியும்
மேடான
இடங்கள்
வெளி வருவதே
உலகமயம்

தனியார்மயம்
தாராளமயம்
உலகமயம்
இந்த மூன்று
மயத்தையும்
நீங்கள் அளிக்கும்
வோட்டால்
தடுக்க முடியுமா...???
வாக்காளர்களே!!!!

2 comments :

  1. இந்த மூன்று மயங்களும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை மாயமாக்கி கொண்டிருக்கின்றன ...உலக வங்கியின் கோரப் பிடியில் இருந்து நம்மை கரையேற்றும் கட்சிகள் ஏதும் கண்ணில் படவில்லை !
    த ம 1

    ReplyDelete
  2. அப்ப..எதுக்கு ஓட்டு போட,,,,கண்ண மூடிகிட்டு “நோட்டாவுக்கே ஓட்டு போடுவோம்.....

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!