திங்கள் 08 2015

நடிகர்களை விஞ்சிய அதிகாரிகள்....

படம்-tamil.oneindia.com

எனக்கென்று ஒரு நாடு
எனக்கென்று ஒரு அரசு
என்னை சந்திக்க விரும்பினால்
எல்லோரும் அங்கு வந்து
பாருங்கள் என்று மாம்பழச்
சண்டையில் தோற்றுப் போயி

பழனி மலையில் கோவணத்துடன்
 குடி கொண்டு இருக்கும்
திரு.தண்டாயுதபாணி கோயிலின்
சிறப்பு மிக்க பஞ்சாமிர்தம்
விற்பனையில் தயாரிப்பு தேதி
காலாவதி தேதி எதுவும்
குறிப்பிடாமல் விற்பனை செய்யப்
பட்டு வருவதைக்கண்டு ஆய்வுக்கு
சென்ற உணவு பாதுகாப்பு
அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்களாம்.

16 கருத்துகள்:

  1. பழனி மலையில் கோவணத்துடன்
    குடி கொண்டு இருக்கும் அவனைப் பற்றி பேசி தெய்வக்குற்றத்திற்கு ஆளாக வேண்டாம். பார்த்துக்கொள்ளுங்கள் வலிப்போக்கரே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைப்பற்றி பேசலைங்க.... அதிகாரிகளைப் பத்தி அவரிடம் போட்டு கொடுக்கிறேங்க....

      நீக்கு
  2. எல்லாம் அந்த பழனியாண்டவனுக்கே வெளிச்சம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனியாண்டவர் உயரமான இடத்தில் இருப்பதால் வெளிச்சத்துடனே இருப்பார் நண்பரே .

      நீக்கு
  3. தேதி எதுவும் குறிப்பிடாமல் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கையல்லவா எடுத்திருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு பதிலாகத்தான் நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள்..திரு.வேகநரி அவர்களே.....

      நீக்கு
  4. பதில்கள்
    1. கடவுள் முருகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதே..தலைவரே.....

      நீக்கு
  5. பதில்கள்
    1. கடவுள்கூட இத்தனை நாளும் கண்டும் காணமாத்தான் இருந்திருக்கிறார்..அய்யா

      நீக்கு
  6. பஞ்சாமிர்தத்தை ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்களாமே!

    பதிலளிநீக்கு
  7. இது இன்னைக்குதான் தெரிந்ததா ,இத்தனை நாளாய் நக்கிக் கொண்டு இருந்தார்களா :)

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் சொல்வதைத்தான்செய்து கொண்டு இருந்தார்கள்..ஏதோ போதை மயக்கத்தில் இன்னைக்குத்தான் தெரிந்தது அவர்களுக்கு... நண்பரே...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...