திங்கள் 19 2017

பகவானை முந்திய அய்யர்......!!!

என்னாது இது
என்றைக்கும் இல்லாம
இன்றைக்கு பகவானை
முந்திக் கொண்டு
அய்யரு போறாரு
இது எப்படி
நான் பார்த்திலிருந்து
பகவான்தானே ஆடாம
அசையாம முன்னாடி
முதல் வரிசையில
இருந்தாரு இப்ப
பகவானை இரண்டாம்
இடத்துக்கு தள்ளிவிட்டு
அய்யரு முன்னாடி
வந்து நிக்கிறாரு
மந்திரமா தந்திரமான்னு
ஒன்னும் புரியலையே
ம்ம்........ம்ம்ம்.......

இதப் பத்தி
யாருகிட்ட கேட்கலாம்
சே.... என்னாது
ஒருத்தரும் ஞாபக்துக்கு
வர மாட்டுறாங்க...

ஆ.....வந்திருச்சு
வந்திருச்சு ஞாபகம்
வந்திருச்சு பேசிருவோம்...

டிரிங்.........டிரிங்
டிரிங்.........டிரிங்

சார் வணக்கம்
சார் .... சார்
நான் வலிப்போக்கன்
பேசுறேன் சார்....

சார் எனக்கு
ஒரு சந்தேகம்
கேட்டுகட்டுமா சார்..

நன்றி! சார்
அது ஒன்னுமில்ல
சார் நம்ம
தமிழ் மணத்தில
முதல் வரிசையில
எனக்கு தெரிந்து
பகவான்தான் முதல்
வரிசையில இருந்தாரு
இப்ப திடிரென்று
நா..பார்க்கையில
சிரிராம் அய்யாரு
முதல் வரிசையில
இருக்காரு  அவரு
எப்படி முதல்ல
வந்தாருன்னு சொன்னீங்கன்னா
நானும் தெரிஞ்சுக்குவேன்
சார்......... சார்

தெரிஞ்சு என்ன
செய்யப் பேறேன்னு
கேட்டு சொல்லாம
விடாதிங்க சார்...
சொல்லுங்க சார்..

அட.. அப்படியா
சார் ஒருத்தரே
பல கணக்ககு
வச்சு அவங்களே
ஓட்டு போட்டுக்குங்வாங்களா...
சார்...அப்படின்னா
அது கள்ள
ஓட்டுதானே சார்

ஆமா..சார்
சிரிராம் அய்யரு
தளமான எங்கள்
பிளாக் தளத்துக்கு
போயி பாத்தேன்
சார்..சிரி
ஆசிரியருன்னு அஞ்சு
ஓட்டு வச்சு
இருக்காரு சார்..

என்னாது அய்யரு
மதுரக்காரா அப்படியா
சார்  அப்படின்னா
அய்யரு தமிழ்மனத்தில
முதல் ரேங்குல
வந்தது இப்படித்தானா
சார்....எப்படி
சார் அய்யரு
அம்புட்டு பாஸ்வேர்டு
நம்பரை மனசில்ல
மறக்காம வச்சு
இருக்காரு.....ஆக

பகவானை அய்யரு
முந்தியது இப்படித்தனா...
ரெம்ப நன்றி!
சார்....என்னது
சார்.... சே...சே..
இந்த அரிய
பெரிய ரகசியத்த
சொன்னதுக்கு என்ன
கட்டிப்போட்டு லாடம்
கட்டிப் அடிச்சு
கேட்டாலும் உங்கள
சத்தியமா சொல்ல
மாட்டேன் சார்.

நன்றி! சார்
நம்ம பேசியதை
பதிவா போடுறேன்
படிங்க சார்...


9 கருத்துகள்:

  1. நண்பரே அவர்கள் அப்படி ஓட்டுப் போட்டுக்கொண்டதை நான் இதுவரை பார்த்ததில்லை

    காரணம் நான் தமிழ்மனத்தில் யார் ஓட்டு போடுகிறார்கள் என்பதை கவனித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நண்பரே தற்போது வழக்கம்போல் பகவான்ஜி முதல் இடத்திலும், ஸ்ரீராம் ஜி இரண்டாவது இடத்திலும்தானே இருக்கின்றார்கள்

    சில நேரங்களில் தமிழ் மனம் பகலிலும், இரவிலும் மாறி, மாறி தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”--சில நேரங்களில் தமிழ் மனம் பகலிலும், இரவிலும் மாறி, மாறி தெரியும்“---நான் பார்த்த வரையில்...அப்படித்தான் தெரிந்தது நல்லது நண்பரே

      நீக்கு
  3. நீங்க சொன்ன பின்பு தான் கவனித்தேன், பகவான்ஜியை, கில்லர்ஜி முந்திவிட்டதை சொல்கிறீர்களோ? இவர்கள் முன்னணியில் வந்ததில் மகிழ்ச்சி! நீங்க வந்தாலும் மகிழ்ச்சி!
    தமிழ்மணத்தில் வாக்களிப்பு முறையில் நம்பிக்கையில்லாதததினால் நான் வாக்களிக்கும் உரிமைக்கு பதிவு செய்யவில்லை.எனக்கு பிடித்த பதிவுகளை கூகிளில் சிபார்சு செய்தோடு சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தமிழ்மண ஓட்டு நம்பர் மறக்காமல் இருப்பதற்தற்குத்தான்....

      நீக்கு
  4. வலிப்போக்கன் சகோ தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது சரியில்லை. நம் அன்பான சக பதிவர்களை இப்படிச் சொல்லும் பதிவுகளைத் தவிர்க்கலாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதல் பட்டதை எழுதினேன் வேறு உள் நோக்கம் கெட்ட நோக்கம் எதுவுமில்லை....ஒரு ஆச்சரியத்தில் எழுதினது

      நீக்கு
  5. நண்பரே தமிழ்மணத்தின் தர வரிசை என்பது மாறி மாறி வரும் ஒன்று. இல்லாத ஒன்றை கற்பனையாக நினைத்துக் கொண்டு, வலையுலகில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற சாயத்தை பூசுவது தவறு. ஒரு நல்ல வலைப்பதிவரின் மனதை இவ்வாறு புண்படுத்தும் இந்த பதிவை நீக்கி விடுங்கள், தோழரே!

    பதிலளிநீக்கு
  6. //வலையுலகில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற சாயத்தை பூசுவது தவறு.//
    வலையுலகில் மட்டுமல்ல மனிதர்களிடம் ஜாதி துவேஷம் கொள்வது மிகவும் தப்பு. மார்க்ஸியம் படித்துவிட்டு ஜாதி துவேஷம் கொள்வது கொடுமை. ஆனால் இந்த பதிவில் வலிப்போக்கர் மத சம்பந்மான யேசுவை முந்திய பாதிரியார், முகமதுவை முந்திய இமாம் என்பது போல் பகவானை முந்திய அய்யர் என்று குறிப்பிட்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...