பக்கங்கள்

Saturday, January 24, 2015

இந்தியை எதிர்த்து மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் பொன்விழா ஆண்டு...!!!!..

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
படம்-வினவு

காந்தி சூதந்திரம் வாங்கி தருவதற்கு முன்பு அதாவது பத்து வருடத்திற்கு முன்பு காந்தியின் சம்பந்தியான ராஜ கோபாலாச்சாரி என்பவர் காங்கிரஸ் கட்சியின். சென்னை மாநிலத்தின்  முதலமைச்சர் பதவியை கொல்லைப்புறமாக கைப்பற்றி 1937-ல் முதலமைச்சரானார். முதலமைச்சராக வந்தவுடன் 1937-ஆண்டு ஏப்ரல் ஒன்னாந்  தேதி  முதல் ஒரு உத்தரவு  போட்டு    இந்தீயை கட்டாய பாடமாக்கி னார்.


இதோடு இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவதற்க்கான விதத்தில் முதல் கட்டமாக இந்தியை  கட்டாய பாட மாக்குவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

கொதித்தெழுந்த தமிழ் அறிஞர்களான சோம சுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதன், தந்தைப் பெரியார் போன்றவர்களின் தலைமையில் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக மக்கள்  வீறு கொண்டு போராட்டம் நடத்தினா்

இத்தகைய  இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடராஜன் 1939 ஆண்டு சனவரி 15ந்தேதியிலும். இவருக்குபின்  தாளமுத்துவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும்போதே மருத்துவமனையில் 1939ம்ஆண்டு மார்ச் 12 ந்தேதியிலும தியாகி ஆனார்கள்.

இவ்விரு மொழிப்போர் தியாகிகளின் மரணத்தால் மேலும்  தமிழமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வலிமையால் காந்தி சம்பந்தி ராஜ கோபாலாச்சாரி.. கட்டாய இந்தி திணிப்பு உத்தரவை  திரும்ப பெற்றார்.

இதனால் அன்றைய காங்கிரஸ் அரசு. இந்தியை கட்டாய மாக்குவதில் பின்வாங்கிச் செல்வது போல் போக்கு காட்டிவிட்டு  மீண்டும் 1965 ஆண்டு சனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று இந்தியை  ஆட்சி மொழியாக அறிவிக்க முடிவு செய்து. மீண்டும்   இந்தியை திணிக்க முயன்றது.

இதை எதிர்த்து 1965 ஆண்டு சனவரி 25ந்தேதி மதுரையில் தொடங்கிய போராட்டத்தீ சென்னை, நெல்லை, கொவை, திருச்சி என்று  தமிழக முழுவதும் பரவியது.

சென்னையில் கூடிய அனைத்து கல்லூரி மாணவர் போராட்டக்குழு , சனவரி 26ந்தேதியை துக்க நாளாக அறிவித்தது.

 பள்ளி, கல்லூரி.பல்கலை கழகம் என அணைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டும் போராட்டம் ஓயவில்லை. மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்குவதற்காக முதல்முறையாக  இராணுவம் இறக்கி விடப்பட்டு, கொலை வெறியாட்டம் போட்டது.

அந்த கொலை வெறியாட்த்தின் ஊடே.. திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர் சின்னச்சாமி, சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர் ராஜேந்திரன் போன்ற வீரமிக்க மாணவர்களின்-இளைஞர்களின் உயிர் தியாகத்தால் தமிழகமே சிவந்தது. 55நாட்களாக நீடித்த மாணவர்கள் போராட்டம் இறுதியில் வெற்றி கண்டது.

 1937ஆண்டு ராசாசியில் தொடங்கி, பக்தவச்சலம் போன்ற காங்கிரஸ்  கட்சி தலைமையில்  இருந்து தற்போது ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், பிஜே.பி தலைமையில் தொடர்ந்து படையெடுத்து வருகிறார்கள்.

 இது வெறும் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, இந்த இந்தி திணிப்போடு நாட்டை, நால் வருண, சாதி, வேத, வைதீக, சமஸ்கிருத மயமாக்கும் சதி!!

உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் முன்னோடியாக.....

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பொதுவுடமை பேசிய மொழி, “

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும” என்ற சமத்துவத்தை உயர்த்தி பிடித்த மொழி,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”, “கொல்லாமை”, “கள்ளுன்னாமை”, “பொய் சொல்லாமை”,  “பிறன்மனை நோக்காமை” போன்ற உயரிய அறங்களை கற்பித்த மொழி, நல்ல  பண்பாடுகள் மிக்க மொழி, தமிழ் மொழியே..!!!!!!!!!
நன்றி! 

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி


10 comments :


 1. அவர்களை நினைவு கூர்வோம் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதை
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. கண்டிப்பாக நமது முதல் மரியாதையை செலுத்துவோம்.

  ReplyDelete
 3. தமிழ்ப் பற்று எங்கும் கனலாய்த் தகித்து வரும் இந்நாளில் அதற்கு வரலாற்றுரீதியான உரமூட்டும் வகையில் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி!

  ReplyDelete
 4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. ஞானபிரகாசன் அவர்களே!!

  ReplyDelete
 5. தேவையான நேரத்தில் சரியாக சொல்லியுள்ளீர்கள் !
  த ம 3

  ReplyDelete
 6. மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் பொன்விழா ஆண்டினை
  போற்றி வழி படுவோம்!

  தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் ---இன்பத்
  தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
  தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் ----இன்பத்
  தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

  நன்றியுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 7. தற்போது மற்றுமொரு மொழிப்போர் தேவையாகவுள்ளது. வேதனைதான். அதிலும் வேடிக்கை என்னவெனில் நம் தாய்மொழியை நாம் பயன்படுத்தவேண்டும் என்ற நிலையில் அவ்வாறான மொழிப்போரை நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

  ReplyDelete
 8. தங்களின் வாழ்த்துக்கு நன்றி! திரு.பகவான்ஜி அவர்களே!!

  ReplyDelete
 9. மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் பொன்விழா ஆண்டினை
  போற்றி வழி படுவோம்!--திரு.யாதவன்நம்பி அவர்களே!!

  ReplyDelete
 10. தற்போது மற்றுமொரு மொழிப்போர் தேவையாகவுள்ளது. வேதனைதான். அந்த வேதனையை சாதனையாக ஆக்குவோம் ஐயா.. திரு.ஜம்பலிங்கம் அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com