புதன் 07 2015

கொலையாளிகளை தேடும் குற்றவாளிகள்....!!!


படம்-Vijayakumar R

படம்--Vijayakumar R








Vijayakumar R 10 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.

ஜாதியா?... நீதியா?.. இந்தியாவில் எது பெரியது ? எது ஜெயிக்கும் எனக்கேட்டால்  ஜாதிதான் ஜெயிக்கும்

 
அதற்கான ஆயிரம் உதாரணங்களில்  விஷ்ணுப்பிரியா மரணம் ஒரு ஆதாரம்

முதலில் ஒரு படுகொலையைப் பார்ப்போம்.

காதலுக்காக தலித் என்பதற்காக மர்ம மரணமடைந்த இளவரசனுக்குப் பிறகு கோகுல்ராஜ் தலித் என்பதற்காக கழுத்தறுத்து படுகொலை மரணம்.


கோகுல்ராஜும் அந்த பெண்ணும் கோயிலில் பேசிக்கொண்டிருக்கும் போது யுவராஜ் தலைமையில் நாலைந்து பேர் அவர்களை விசாரிக்கின்றனர் .கோகுல்ராஜ் தலித் என்பதை அறிந்ததும் அவரை மட்டும் தூக்கிக் கொண்டுபோய் 2நாள் சித்ரவதைக்குப் பிறகு கழுத்தையறுத்து
தண்டவாளத்தில் போட்டுவிடுகின்றனர்


இதைச் செய்தது யுவராஜ் நடத்தும் கொங்கு இளைஞர் பேரவை என்ற கவுண்ட ஜாதி வெறிநாய்கள் நடத்தும் சங்கம்.

இவனுக்குத் தொழிலே கவுண்டஜாதி பெண்களை மற்ற ஜாதியினர் குறிப்பாக தலித்துகள் காதலிப்பதை தடுப்பதுதான் வேலையாம்.

இது இந்த சம்பவத்தின் ஒருபகுதி.

அடுத்த பாதி, இந்த வழக்கு விஷ்ணுப்பிரியாவிடம் ஒப்படைக்கப் படுகிறது.

அந்த வழக்கின் நெருக்கடி தாங்க முடியாமல் நேர்மையான அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார் என்பது பரவலான செய்தி.

ஆனால், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கொலையா, தற்கொலையா என்று ஆராய்ந்தால் கொலை என்று முடிவுக்கு வரத்தான் 70%வாய்ப்புள்ளது.


தற்கொலைக்கான வாய்ப்புக்கான காரணம் வலுவிழந்து கொண்டே வருகிறது.

சம்பவத்தை மறுபடியும் தொகுத்துப் பார்ப்போம், 1.30மணிக்கு டிரைவரோடு 5மணிக்கு வரவும் மீட்டிங் இருக்கிறது என்கிறார்.அதையே வேலைக்கார பெண்ணிடமும் சொல்லியிருக்கிறார்


5மணிக்கு ஓட்டுனரும், பணிப்பெண்ணும் வந்ததும் தூக்கில் தொங்குவதைப் பார்த்து பக்கத்திலுள்ள அதிகாரிகளிடம் சொல்கின்றனர்.

அதாவது அவரது வீடு காவலர் காலனிக்குள்ளே காவல் நிலைத்துக்கு அருகிலே உள்ளது.

ஓடிவந்த போலீசார் உடனே கதவைத் திறக்கவில்லை, வீடியோ, பத்திரிக்கையாளர், சாட்சிகள், எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொண்டே திறந்தனர் இதெல்லாம் மின்னல் வேகத்தில் தயாரானது

உடைப்பதற்கு சற்று முன் ஒரு போலீஸ் உள்ளே கடிதம் இருக்கும் அதில் ஏதாவது காரணம் எழுதி வைத்திருக்கும் என கூறியுள்ளார்.உள்ளே நுழைந்ததும் லேப்டாப், மொபைல் போன், கடிதத்தை போலீஸ் கைப்பற்றுகிறது.


இவர் 5.6அடி, அறையில் உள்ள ஒரே ஸ்டூல் 1.5அடி. தூக்கு மாட்டிக் கொண்ட சீலிங் உயரமோ 11அடி. 1.5மின்விசிறி என்றாலும் மீதி உயரம் இடிக்கிறது.

த்ருஷ்யம் படத்திலும் அதன் தமிழ் பாபநாசம் படத்திலும் ஒரு வசனம் வரும். "அவன் எல்லாத்தையுமே சரியாக வைத்திருக்கிறான்.அதுதான் சந்தேகமா இருக்கு"என்பார் அந்த போலீஸ் அதிகாரி.


அதே சந்தேகம்தான் நமக்கும்

தூக்கில் தொங்குவதை அறிந்ததும் ஒருவேளை உயிரிருக்க வாய்ப்புள்ளதென கதவைத்தான் முதலில் உடைப்பார்கள். ஆனால்,போலீஸோ நில்லுநில்லு எனசொல்லிவிட்டு கேமரா,நிருபர்,சாட்சிகளை வைத்து உடைத்ததும் அதன் பிறகு வேகமாக போஸ்ட் மார்டம் செய்து அவசர அவசரமாக அடக்கம் செய்யும்வரை போலீசின் வேகத்தைப் பார்க்க வேண்டுமே நிஜ ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ்தான்.


அதன்பிறகு மீண்டும் ஜெயா போலீசு ஏவள்நாயாக மாறிவிட்டது.

அவரது தோழி மகேஸ்வரி  எவ்வளவுதான் நாங்க ஓடுறது ஒரு டீகூட வாங்கிக்குடிக்காதவள் அவள், நேர்மையா இருக்கக்கூடாதா? என்று டிவியில் கதறி அழுதார்.



நமது சந்தேகத்துக்கு இதுமட்டும் காரணமல்ல. தற்கொலை செய்து கொண்டவர்களை கவனித்தால் தெரியும்.2,3நாட்கள் அல்லது 1வாரமாவது யாருடனும் அதிகம் பேசமாட்டார்கள், தனிமையிலிருப்பார்கள், பேசுவதாக இருந்தால் எரிந்து எரிந்து விழுவார்கள்.

இந்த அறிகுறி ஒன்றும் விஷ்ணுப்பிரியாவிடம் இல்லை.1மணிவரைஒரு குடும்பப் பிரச்சனையை சமாதானமாகப் போகச் சொல்லி அறிவுரை கூறியுள்ளார்.


ஓட்டுனரிடம் SP ஆபிசில் மீட்டிங் 5மணிக்கு வரச் சொல்கிறார்.பணிப்பெண்ணிடம் 5மணிக்கு வரச் சொல்கிறார். 2மணிக்கு மதுரை வழக்கறிஞரிடம் பேசியுள்ளார்


அடுத்த 3மணி நேரத்துக்குள் தூக்கில் தொங்கியநிலை.அதுமட்டுமல்ல கடிதத்தில் சில பக்கங்களை போலீஸ் ஒளித்து வைத்துக் கொண்டு குட்டு வெளிப்பட்டதும் திருப்பித் தந்துள்ளனர்


அவரது குடும்பத்தினர் தற்கொலை என்பதை முற்றிலும் மறுக்கின்றனர்.லேப்டாப்,மொபைல் போன் ஆதாரத்தை போலீஸ் அழிக்க வாய்ப்புள்ளது என்றும் சிபிஐவிசாரணை வேண்டும்

தமிழக போலீஸ்மீது நம்பிக்கையில்லை என்கின்றனர். இதுதான் அவர் வேலை பார்த்த போலீசின் லட்சணம். இன்னும் கேள்விகள் மிச்சமிருக்கிறது.


போலீஸ் இதை தற்கொலையாக சித்தரிக்க அதீத ஆர்வம், பதட்டம் காட்டுகிறது, அவர் காதல் தோல்வியில் இறந்திருக்கலாம்,அவர் ஒரு கோழை, மன உளைச்சலில் இருந்தார் என ஊடகங்களில் கட்டுகதை திட்டமிட்டுப் பரப்பப் படுகிறது.

மதுரை வக்கீல் மாளவியா, அவருக்கு காதலர் இருந்தார் என சொல்லச் சொல்லி நிர்பந்தப் படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்.

கொலைக்கானக் காரணத்தை மகேஸ்வரியிடம் சொல்லிருக்கலாம்

அதனால்தான் அவரது போன் வண்டியிலே காணாமல் போய்விடுகிறது. அதை வழக்காக பதிவு செய்தும் போலீஸ் அதை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை.

ஒரு அர்ச்சகரைக் காதலித்தார் என்று ஒரு கதாபாத்திரத்தை படைத்தனர் அவரை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை, அவர்யார், அது நட்பா,காதலா? அவரது புகைப்படமெங்கே? பதிலில்லை.

அவரது முகத்திலுள்ள காயத்துக்கு பதிலென்ன?
அவருக்கு பயிற்சியளித்த அதிகாரி, அவர் மிகத் துணிச்சலானவர், எல்லா விசயத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமுடையவர் பயிற்சியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றவர் என்கிறார். அவர் கோழை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

யுவராஜை பிடிக்கவிடாமல் நெருக்கடி கொடுத்ததுதான் அவரது 'தற்கொலைக்கு' காரணம் என ஒரு தரப்பு கூறிவந்தது.

ஆனால், யுவராஜோ என்னைப் பிடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுத்ததால் அவர் 'தற்கொலை'செய்திருக்கலாம் அதற்கு SP செந்தில் குமார் மற்றும் சில உயரதிகாரிகள் பெயரைச் சொல்கிறான்.


ஒருவேளை மேலதிகாரிகளின் நெருக்கடியில் தற்கொலை செய்ததாக ஒப்புக் கொண்டாலும் அது கொலையாகத்தான் கருத முடியும்

ஒருவேளையாக கொலையாக இருந்தாலும் காரணங்கள் வேறாக இருக்கப் போவதில்லை.

சரி,கொலைக்கான காரணமென்ன?


கொல்லப்பட்டது தலித் கோகுல் கொன்றது கவுண்ட ஜாதிவெறியன்.


அதில் போலீஸ் உயரதிகாரிகள் இரு பிரிவாக செயல்பட்தாகத் தெரிகிறது ஒரு குழு யுவராஜை பாதுகாத்துக் கொண்டே, என்ன இன்னும் கண்டு பிடிக்கலையா, நீயெல்லாம் வேஸ்ட்,

நீ இந்த வேலைக்கு சரிப்பட மாட்ட சீக்கிரம் கண்டுபிடி கண்டுபிடி என்று சொல்லிக் கொண்டே யுவராஜுக்கும் தகவல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கும்பல்


அடுத்தபிரிவு, இவர் தலித் என்பதாலும் 27வயதிலேயே முதல் கிரேடில் தேறி வந்ததாலும் அவர் பெண் என்பதாலும் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்த கும்பலுக்கு யுவராஜைவிட இவர்தான் அவர்களுக்கு தொல்லையாக இருந்துள்ளார்.


தலித், அதுவும் ஒரு பெண் ADSP யாக இருப்பதா என்ற ஜாதிவெறியும் ஆணாதிக்க வெறியும் சேர்ந்து இவரை சூட்சுமமாக வேட்டையாடியுள்ளனர்.

இந்த கும்பலும் கேட்டது அதே கேள்வியைத்தான், யுவராஜை உன்னால் பிடிக்க முடியுமா,முடியாதா?
என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்


அதற்கு மேல் ஒரு பிரச்சனை அவர் 
"டீ கூட வாங்கிக் குடிக்காத" நேர்மையாளராக இருந்துள்ளார்.


முதலாளிக்கும் அரசியல்வாதிக்கும் ஏவல்நாயாக இருப்பதுதான் போலீஸ் வேலை, அதில் நேர்மையாக இருப்பது தேவையில்லாத தகுதி, அப்படியிருந்தால் அவருக்கு இதுதான் முடிவாக இருக்கும்.
இது அனுமானமல்ல இதற்கும் ஆதாரமுள்ளது. இவருக்கு உயரதிகாரியாக இருப்பவர் இவரை, யுவராஜ் கர்நாடகாவில் இருக்கிறான்,கோவாவில் இருக்கிறான் என பல நாட்கள் சும்மா அலைய விட்டுள்ளார், 

தினமும் யுவராஜ் கேசை முடிக்க முடியுமா, முடியாதா என தொல்லை கொடுத்துள்ளார்.


யுவராஜுக்கு தகவல் கொடுத்துக் கொண்டு அவரைப் பாதுகாக்கும்  அதிகாரிகளாலும் இவருக்கு தோல்வி.

ஜாதிவெறி,ஆணாதிக்கவெறி பிடித்த அதிககாரிகளலாலும் இவருக்கு தோல்வி. பொதுவாக ஒரு ADSPக்கு 6,7 காவல் நிலையம்தான் தருவார்கள்.ஆனால், புதிதாக பணிக்குவந்த 27வயதான இளம் அதிகாரியான இவருக்கு 11காவல் நிலைய பொறுப்பைக் கொடுத்துள்ளனர்

அதற்கிடையில் யுவராஜ் வழக்கு விசாரணை.

மேலும் தமிழ்நாட்டில் பெரும் முதலாளிகள் உள்ள கவுண்ட ஜாதியில் அதுவும் அந்த பகுதியில் கள்ள நோட்டு, ஸ்பிரிட் கடத்தல், தங்கம், செம்மர கடத்தல் மாபியாக்கள் அதிகம் புழங்குமிடம் 
இவரது 11காவல்துறை சரகப் பகுதியில் அப்படிப்பட்ட MLA,MPகள், அவரால் லாபமடையும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு இவரால் ஏதாவது ஒரு நெருக்கடி இருந்திருக்கலாம்
அல்லது மிகப்பெரிய உண்மையை கண்டறிந்திருக்கலாம்.


யுவராஜுக்கு காவல்துறையில் உள்ளவர்கள் தொடர்ந்து தகவல் அனுப்பிக்கொண்டுள்ளனர்.

இந்த நிமிடம்வரை அவர் தப்பித்திருப்பது போலீஸ் உதவியால்தான்.

இதில், யுவராஜ் SPக்கு அனுப்பிய கடிதத்தில் எனக்கு கொலையில் சம்மந்தமில்லை என்கிறான்


இந்த வழக்கில் அரசியல் புகுந்துவிட்டது என்கிறான்.

விஷ்ணுபிரியாவிடம், மேடம் இது என் நம்பர்தான், உங்க துறையில் எல்லோரிடமும் எனது நம்பர் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா என்கிறான்.நீங்க இதில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறான்.

விஷ்ணுப்பிரியாவுடன் இருப்பவர்களே அவனுக்கு தொடர்ந்து தகவல் அனுப்புகின்றனர்.விஷ்ணுப்பிரியாவுக்கு யுவராஜைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.ஆனால்,யுவராஜுக்கு இவர் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்திருக்கிறது அதை அவன் அவரிமே சொல்கிறான்.இப்படி ஜாதிவெறி மதவெறி, ஆணாதிக்கத்தால், ஊழலால், நாறிக்கிடக்கிறது ஏவள் துறை.


ஏதாவது நல்லது செய்யலாமென அப்பாவித்தனமாக போலீஸ் துறைக்கு வருவோருக்கு பைத்தியப்பட்டமோ, இளிச்சவாயன் பட்டமோ,கொலையோ, தற்கொலையோ, இடமாறுதலோ, பணியிடை நீக்கமோ தயாராகக் காத்திருக்கிறது.


தலித் கோயிலுக்குள் நுழையமுடியாது தலித் படிக்கக்கூடாது, செருப்புப் போடக் கூடாது, ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போடக்கூடாது, பூசாரியாக முடியாது

காதலிக்கக் கூடாது, இடஒதுக்கீடு கேட்கக்கூடாது, என்ற வரிசையில் விஷ்ணுப்பிரியாவைப் போல் மிக இளம்வயதில் தலித் பெண் உயர்பதவிக்கு வரக்கூடாது போலும் நெருக்கடியால் தற்கொலையோ கொலையோ விஷ்ணுப்பிரியா சாவுக்கு காரணம் ஜாதிவெறி, ஆணாதிக்கம், 'நேர்மை' தான் காரணமாக இருக்க வேண்டும்.

அதை செயல்படுத்தியவர்கள் யாரார் என்பதை கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் விசாரிப்பதே குற்றவாளிகள்தானே.

12 கருத்துகள்:

  1. என்றுதான் திருந்தப்போகின்றார்களோ.....

    பதிலளிநீக்கு
  2. வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி ...பாடல் கேட்கத்தான் நன்றாக இருக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்பவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்து என்று முன்னமே சொல்லி விட்டார்கள் நண்பரே

      நீக்கு
  3. இந்த ஆட்சியில் நடந்த மிக மிக கேவலமான செயல்! தினமும் தான் பேப்பரில் வருகிறது! ஒருவார்த்தைக்காக போராடிய முட்டாள் மடையன்கள் இதற்கு ஏனோ பொத்திகிட்டு போய்ட்டான்க!
    சாதி வெறி என்னிக்கும் மாறாது! இந்த லட்சனத்தில் சாதி கணக்கெடுப்பு வேண்டுமாம்! எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுத்திற்கு ஆர்பாட்டம் செய்த பன்னிகள் ஒரு உயிர் போனதற்கு இதான் மரியாதையா? இந்த.தமிழ்நாட்டில்???

    பதிலளிநீக்கு
  4. சட்டம் என்ன செய்கிறது?
    மிகவும் வேதனையாக உள்ளது தோழரே!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டம் தன் கடமையை செய்து கொண்டு இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  5. எல்லாம் சரி! உண்மைக்கு மயக்க மருந்து கொடுத்து உறங்க வைத்துவிடாமல் அதை விழிப்புடன் வெளியில் கொணருமா??!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தேசத்தில் உண்மை விழிப்புடன் இருந்தாலும் கொடியவர்களை தண்டித்தாக வரலாறு இல்லையே...நண்பரே...

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...