திங்கள் 29 2016

இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே..


Puthiya kalacharam feb 16
படம்--வினவு
தலித் மக்கள் மீதான அடக்குமுறை இல்லாத நாளோ மாதமோ வருடமோ இந்தியாவில் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே இன்றும் தலித் மக்களுக்கு தனித் தேநீர்க் குவளைதான். கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், நத்தம் காலனி இளவரசன், கடைசியாக திருச் செங்கோட்டில் கோகுல்ராஜ். கொல்லப்பட்டவர்களுக்கும், கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் முடிவில்லை.
மராட்டியத்தின் “கயர்லாஞ்சி படுகொலை”யில் போட்மாங்கே என்ற தலித்தின் மனைவியையும், மகளையும் வன்புணர்ச்சியோடு கொன்று, மகன்கள் இருவரையும் கொலை செய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
இராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.
23 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பதால் ஆந்திராவின் சுண்டூர் கிராம மக்கள், “எங்களது புதல்வர்களை ரெட்டி சாதிவெறியர்கள் வெட்டிக் கொல்லவில்லை என்றால் எங்களது இளைஞர்கள் அவர்களே வெட்டிக் கொண்டு, உடல்களை சாக்குப் பையில் திணித்துக் கொண்டு துங்கபத்ரா கிளைக் கால்வாயில் தாமாகவே வீசியெறிந்து கொண்டார்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர்.
பா.ஜ.க ஆட்சியில் முசுலீம்கள் மற்றும் தலித்துக்களை கொல்வதற்கு போட்டியே நடக்கிறது.
பார்ப்பனியமும், பாராளுமன்றமும் தலித் மக்களின் மீதான ஒடுக்கு முறைகளை வளர்க்கிறது. நீதிமன்ற – போலிஸ் கூட்டணியோ சாதி வெறியர்களை விடுதலை செய்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.
Puka Feb  16 Wrap Back
வினவு
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 300
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி 
044-2371 8706,
99411 75876, 97100 82506
மின்னஞ்சல் 
vinavu@gmail.com

10 கருத்துகள்:

  1. தன்னை ஜாதியில் உயந்தவன் என்று சொல்பவன் எதற்காக ? கீழ்ஜாதி பெண்களை மட்டும் தொடுகின்றான் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னை உயர் ஜாதி என்றும் கீழ் ஜாதி என்றும் சொல்பவன் முதுகெலும்பு இல்லாதவ ன்...
      என்னை பொறுத்தவரை மனித இனத்தில்
      ஆண் ஜாதி பெண் ஜாதி தான் உண்டு...

      நீக்கு
  2. பண்ணைப் புரத்திலேயே .....?இளையராஜா பிறந்ததால் பல நூற்றாண்டாய் தொடரும் தீண்டாமை ஒழிந்து விடுமா ?

    பதிலளிநீக்கு
  3. நல்ல செய்தி...விரைவில் சந்தா செலுத்துகிறேன்..நன்றி..

    பதிலளிநீக்கு
  4. தீண்டாமை முடிவதற்கு வழியில்லையா..??ஐயா.

    பதிலளிநீக்கு
  5. தன்னை உயர் ஜாதி என்றும் கீழ் ஜாதி என்றும் சொல்பவன் முதுகெலும்பு இல்லாதவ ன்...

    பதிலளிநீக்கு
  6. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்