சனி 05 2016

போதைக்கு சமமானது சமூக வலைத் தளங்கள்...???


Image result for கரீனாகபூர்
படம்-www.tamilmurasu.org


போதைக்கு சமமானது சமூக வலைத்தளங்கள் என்று சொல்கிறார்.. நடிகர் சாயிஃப் அலிகானின் மனைவியும் திருமணமாகியும் கதாநாயகியாக நடித்து முத்திரை பதித்துவரும் நடிகையான கரீனா கபூர்.

போதைக்கு சமமானது சமூக வலைத்தளங்கள் குறிப்பாக டுவிட்டரில் உங்களை நூறு பேர் பின் தொடர ஆரம்பித்ததும்.... அது  ஆயிரமாக மாற வேண்டும் என்று நிணைப்பீர்கள். பிறகு பத்தாயிரம் இப்படியாக லட்சம் பத்து லட்சம் என்று உங்கள் ஆசை விரிந்து கொண்டே  செல்லும்

ஒரு கட்டத்தில் உங்களின் சுயம் அழிந்துவிடும்... பின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருப்பீர்கள் என்று சொல்கிறார் கரீனாகபூர்.

அனுபவ பட்டவர்கள் ..சொல்லுங்கள்.. அந்த .நடிகை சொல்வது உண்மைதானா...??? என்று...

9 கருத்துகள்:

  1. ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டிவிடும் ,தற்காலிக போதை என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

    பதிலளிநீக்கு
  2. திருமணம் கூட சலிப்பு தட்டி விடும் அதனால்தான் இவளுகள் கணவரை செருப்பு போல் மாற்றிக் கொள்கிறாள்கள்.

    பதிலளிநீக்கு
  3. போதைக்கு சமமானது சமூக வலைத்தளங்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கு

    பதிலளிநீக்கு
  4. மிகவும் உண்மை நண்பரே...
    போதை தான்
    சமூக தளங்கள்....

    பதிலளிநீக்கு
  5. கட்டுப்பாடு நம் கையில் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் ஐயா கூறுவது உண்மையே.கட்டுபாடு நம் கையில் இருந்தால் போதை என்பது இல்லை.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. எதற்குமே இரு பக்கம் உண்டு இல்லையா. நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நாம் எப்படிக் கையாள்கின்றோம் என்பதைப் பொருத்து

    பதிலளிநீக்கு
  8. அளவினை மீறும் எதுவும் நஞ்சாவது
    தவிர்க்க இயலாததுதானே ?

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே, நமது கையில்தான் உள்ளது. ஆசையே ஒரு வலைதானே ?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....