வெள்ளி 04 2016

காந்தீயின் ஆணாதிக்கத் திமிர்.....!!!!


படிக்க---சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

 வருகிற உலக மகளிர் தினத்தையொட்டி  காந்தியின் ஆணாதிக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலயப் பிரவேச மசோதாவை ஒட்டி அம்பேத்கர்- காந்தி இடையேயான ஒரு உரையாடல்  நடந்தது. அதில்

அம்பேத்கர் .காந்தியிடம் , நான் இந்த மசோதாவை ஆதரித்த பின், நான்கு வர்ணத்தையும் சாதியமைப்பையும் ஒழிக்கப் போராடினால் நீங்கள் எந்தப்பக்கம்  இருப்பீர்கள்? அப்படியே , நான் நான்கு வர்ணத்தை ஏற்றுக் கொள்வதனால் அதற்கு தங்கள் விளக்கம் என்னவாக இருக்கும்?? பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன். அதை தலைகீழாக மாற்றி சூத்திரனை முதலில் வைப்பீர்களா...??? என்று கேட்டார்

அதற்கு காந்தி- -நான் ஓர் இந்து என்பது அந்தக் குலத்தில் பிறந்த ஒரு காரணத்தால் மட்டுமல்ல, கொள்கையாலும் விருப்பத்தாலும் கூட நான் இந்துதான். தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பாகுபாடே நான் அறிந்த இந்து மதத்தில் இல்லை. ஆனால் வர்ணாசிரம தர்மத்தை நீங்கள் எதிர்க்க விரும்பினால் நான் உங்கள் பக்கம் இல்லை. காரணம் வர்ணாசிரமம் இந்து மதத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். ஒரு தர்மம். என்றார்


இப்படி ஏற்றத் தாழ்வையே அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்தை விரும்பி கொள்கைப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட காந்தி, அனைவரும் சமம் என்று சொல்வது     காந்தீயின் அறியாமையா..? அயோக்கியத்தனமா...??

காந்தி ,   தன் வீட்டில் தங்கிய தாழ்த்தப்பட்டவரின்“ கழிவுச் சட்டியை சுத்தம் செய்ய மறுத்த“ தனது மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்கிறார். காந்தீயின் பக்தரும்  தமிழ் இந்துவின் உதவி ஆசிரியருமான சமஸ்.

காந்தி விரும்பிய வருணாசிரமமானது  சாதிக்கொரு வேலையை- நீதியை போதிக்கம்போது... காந்தி தனது மனைவிடம் இதைத்தவிர வேற எதை எதிர்பார்க்க முடியும்..?

சாதி இழிவுக்கு அடிப்படை  காரணமான வர்ணாசிரமத்தை ஒழிக்காமல், தன்னுடைய மனைவிடம் “கறாராக நடந்து கொண்டது . காந்தியின் ஆணாதிக்கத் திமிரே அன்றி வெறேதுவுமில்லை..


5 கருத்துகள்:

  1. சந்தேகமே வேண்டாம்,,, உண்மைதான் வலிப்போக்கரே

    பதிலளிநீக்கு
  2. நண்பரே
    போற்றப்படும் ஒவ்வொரு
    தலைவர்களின் ரகசியங்களை
    உம் பதிவுகளில் பார்க்கிறேன்...

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. இவரே ,அந்த கழிவுச் சட்டியை சுத்தப்படுத்தியிருக்கலாமோ :)

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு பேசிய காந்தி தன மகனுக்கு ஒரு ஹரிஜன பெண்ணை கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்