பக்கங்கள்

Friday, January 06, 2017

என்ன..கணேசா... நல்லாயிருக்கியா......???

என்ன கணேசா...நல்லாயிருக்கியா...என்று இருவரும் கேட்டபோது.... அவர்கள் யாரென்று தெரியாமல் திகைத்து நின்றேன்... என் திகைப்பை பார்த்து பின் அவர்களே..எங்களைத் தெரியலையா என்று கேட்டபோது...நாகரிகம் கருதி அவர்கள் யாரென்று தெரியாததை மறைத்து ஒப்புக்காக... ஓ..தெரியுமே என்று மழுப்பி.. நல்லாயிருக்கேன்..நீங்க நல்லாயிருக்கீங்களா என்று நலம் விசாரித்தேன்..

பின் அவர்கள் நான் கோர்ட்டுக்கு வந்த விபரத்தை கேட்டபோது... இன்னுமா..? உன் வீட்டு வழக்கு முடியல...என்று ஆச்சரியமாய் கேட்டார்கள்.. அவர்களுக்கு விபரத்தை கூறிவிட்டு இருபத்தியோரு ஆண்டாக நடைபெறுகிறது... என்று கூறியபோது  .. அவர்கள் தங்கள் சந்தேகத்தை தெரிவித்தார்கள்.  அப்போதுதான் அவர்கள்  என் அம்மா பிறந்த ஊரும் என் அக்காவை கட்டிக் கொடுத்துள்ள ஊரின்  ஊர்க்காரர்கள் என்று தெரிந்தது.உறவுக்காரர்கள் என்றால் எதையாவது ஒரு முறையைச் சொல்லி அல்லவா கூப்பிட்டு இருப்பார்கள் என்ற முடிவுடன் இவர்கள் ஊரிலுள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டாலும் இவர்கள் இன்னாரென்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை...

அவர்கள்.  கேட்டார்கள்.... டவுன்ல வீட்டைக்கட்டுறத விட்டுப்புட்டு, கிராமத்துல வீட்டைக் கட்டியிருக்கிற.... சென்ட்ரிங்ல சுவர கட்டிப்பிட்டு... சென்ட்டிரிங்ல வீட்ட கட்டாம  ஓட்டு வீட்ட போட்டுட்ட..ஏன் ? கணேசா  என்றார்கள்...


கிடைக்க வேண்டிய பணம் கைக்கு கிடைக்காத உண்மை காரணத்தை அவர்களிடம் சொல்லாமல் நடைமுறையில் நிலவியதை   காரணமாக எடுத்துக் கொண்டு

அவர்களுக்கு விபரத்தைச் சொன்னேன்... டவுன்ல குடியிருக்கிற வீடுதான் இருபத்தியோரு வருசமா வழக்கு நடக்குது.. மீறி கட்டியிருந்தேன்னா, ஒருத்தன் மாத்தி ஒருத்தன் போலீசில ரிப்போர்ட் கொடுத்தே சேமித்த காசையெல்லாம் செலவழிக்க வச்சிருப்பாங்கே.... அதோட என் அக்கா மகன்களுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டியிருப்பதால்.. அங்கு வசதியான வீடு இல்லாததாலும்தான்  வீடு கட்டினேன். முதலில் சென்டிரிங் வீடு கட்டுவதற்குத்தான் பிளான் பண்ணினேன்.... நகரத்தல இருக்கிற மாதிரிதான் கிராமத்திலும் பொறாமைப் பட்டாங்க..... பார்ரா.. வக்கத்த என் மச்சினனுக்கும் எனது அக்காவின் மகனுக்கும்  வீடு கட்டுரான்டா  என்றனர்.. வீட்டுச் சுவரு ஏற..ஏற  நல்லா பேசிக்கிட்டு இருந்த உறவுக்காரங்கே  காச்சுமூச்சுன்னு பேசுறத நிப்பாட்டிடாங்க....


அதோடு சுவரு ஏறி  மேல்தளம் சென்ட்ரிங் போட முயன்றபோது... திடிரென்று என் அம்மா இறந்துட்டாங்க..... என் நலனில் மிகவும் அக்கறை கொண்ட நண்பர்களும் வேண்டியவங்களும்..... கண்ணேர் பட்டுவிட்டது.... அதனால்தான் உங்கம்மா  திடிரென்று இறந்தவிட்டாங்க.... மீறி கட்டினா மீண்டும் ஏதாவது துக்கம் நிகழும் என்று வலியுறுத்தி சொன்னார்கள்... அதனால்தான் சென்டிரிங் ல மேல் தளம் போடாமல் ஓடு போட்டு காட்டேஜ் வீடு மாதிரி கட்டிவிட்டேன்.. என்று அவர்களிடம் சொன்னபோது...

ஏ...... ஆமாப்பா....  குடிக்க கஞ்சி கிடைக்காதவன்  வீடு கட்டினா..... பொறாமைப்படாம...வாழ்த்தவா செய்வாங்கே.....  கணேசா.... ரைட்டு கணேசா... வீட்டை  போயி பார்த்தோம் ... கணேசா.... 36க்கு 16 அடியில வீட கட்டிருந்த...  நீ கட்டின மாதிரி அந்த ஊருல எவனும் கட்டல....வெளியில பாத்தா ஓடு வீடுன்னுதான் தெரியும் உள்ளே பார்த்தா.. பங்களா வீடு மாதிரி இருக்குது கணேசா.... ஏழு எட்டு ரூபா செலவு பன்னுன நீ... சென்டிரிங் போட்டு இருநத வீடு ஒரே தூக்கா தூக்கியிருக்கும்  அதனால்தான் கேட்டோம் கணேசா  என்றார்கள்....

விடைபெறும்போது கேட்டார்கள்.உன் அக்கா மகனுக்கு எப்போ  கல்யாணம் என்றபோது... இப்பத்தான் வீட்டை கட்டி முடிச்சேன். அடுத்தது கலயாணம்தான்... பெண்ணு தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னபோது..   ஆமாம்மா..என்றார்கள்...

அவர்கள் என்னிடம் விடைபெற்று சென்ற பிறகும்  அவர்களுக்கு நான் விடை கொடு்த்து அனுப்பிய பின்பும்  இந்தப் பதிவு எழுதும்வரையிலும் அவர்கள் யார் என்ற விபரம்  என் மண்டைக்குள் உதிக்கவுமில்லை..எழவுமில்லை.... கணேசா..நல்லாயிருக்கியா... என்று அவர்கள் கேட்டது மட்டும் நிணைவில் அழியாமல் இருக்கிறது... ..

8 comments :

 1. இப்படி சில சமயம் ஃபோன்ல கூப்பிடறவங்க கூட யாருனு தெரியாம பேசிய அனுபவம் அதுவும் முழுசும் பேசின அனுபவம் உண்டு வலிப்போக்கன்..

  ReplyDelete
 2. கடைசிவரை தெரியவில்லையா ?

  ReplyDelete
 3. சீக்கிரமே நீங்கள் பத்திரிக்கை வைக்க வேண்டிவரும் :)

  ReplyDelete
 4. நல்ல கருத்து க்கு மகிழ்ச்சி

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com