ஞாயிறு 08 2017

பொய்ப்புகாரில் அபராதம்--தொடர்ச்சி

முன்னதை படிக்க.....பொய்ப்புகாரில் அபராதம்...

காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  படையோடு வெளியே சென்ற சில நொடிகளில் ஏட்டையா போலீஸ் அவர் கையைப்பிடித்து ரைட்டருக்கு அருகில் உள்ள இடத்தில் சுவரோகமாக உட்கார வைக்கப்பட்டார்.  ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த வயர்லெஸ் போன் கரகரவென்று கத்திய மயமாக இருந்தது.. சிறிது நேரம் சுவரில் சாய்ந்திருந்த அவரிடம்..ரைட்டர் பேச்சுக் கொடுத்தார்..

“இன்ஸபெக்டர் என்ன சொன்னார்...

“விசாரிச்சுகிட்டு இருக்கிறப்ப.... திடிரென்று வெளியே போய்விட்டார் என்றார்”

“எந்த ஏரியா என்று விசாரித்த ரைட்டரிடம் ஏரியாவைச் சொன்ன கையோடு நடந்த விபரத்தையும் குறிப்பாக சொன்னார்... ஒரு பேப்பரும், பேனாவையும் கேட்ட போது மறுத்த ரைட்டர்... வேறு ஒன்றுமில்லை உங்களிடம் சொன்ன விபரத்தை மனுவாக எழுதத்தான் கேட்டேன். என்று சொல்லியும் சிறிது நேர இழுத்தடிப்புக்கு பின் பேனாவும் பேப்பரும் கொடுத்தார்.

“ அதில் தான் சொல்ல வேண்டியதை மனுவாக எழுதினார் அவர்

அனுப்புநரில் தன் பெயர் விலாசத்தையும்.. பெறுநரில் காவல் நிலைய ஆய்வாளர். காவல்நிலைய எண்ணையும் குறிப்பிட்டு  தொடங்கி விபரத்தை எழுதத் தொடங்கினார்

அய்யா, நான் மேற்படி முகவரியி்ல் பூர்வீகமாய் குடியிருந்து வருகிறேன். என் தந்தை நான் பிறந்த சில வருடங்களில் இறந்துவிட்டார். என் தாயார்தான் என்னை வளர்த்து ஆளாக்கி விட்டார். என் தந்தையின் தம்பி சொல்வது போல் அந்த நபர் என்னை வளர்க்கவில்லை... என் தந்தை இறந்தலிருந்து  என் தாயாருக்கும் அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டதினால் அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் பேசிக் கொள்வதில்லை.....

என் தந்தை காலத்திலிருந்து என் தாயாரும் நானும் மேற்படி முகவரியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறோம். இந்தநிலையில் நான் குடியிருந்து வரும் வீடும் அதைச்சேர்ந்த 5சென்ட காலி இடமும் தங்களுக்கு சொந்தம் என்று ச.புரத்தை சேர்ந்த அய்யணன் அம்பலம் என் தாயாரின் மீது வாடகை கட்டுப்பாட்டின் கீழ் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதி மன்றத்தில் தள்ளுபடியானது.... அதை எதிர்த்து அப்பீல் செய்தார். அதுவும் தள்ளுபடி ஆகிவிட்டது... இந்த நிலையில்... நான் என் தாயாரின் பெயரில் மின் இணைப்பு பெற்று... அந்த வீட்டில் சொந்தமாக தொழில் தொடங்கினேன்.

இதற்கிடையில்  அய்யணன் அம்பலம் என்பவர் மீண்டும் உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்... என் தந்தையின் தம்பிகளான இருவரும் இறந்துவிட்ட இன்னொரு தம்பியின் மனைவி மக்களுடன் சேர்ந்து வழக்கு இடத்தில் எங்களுக்கும் பங்குள்ளது பங்கை பிரித்து கொடு என்றார்கள்.  அப்போது...நான் இடமும் வீடும் தனக்கு சொந்மானது என்று  உங்கள் அய்யா (பன்னையார்) அய்யணன் அம்பலம் என் மீதும் என் தாயார் மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளார் அதில் உங்களுக்கும் பங்கு இருந்தால் நீங்கள் வைத்திருக்கும் ஆவணத்தைக் கொண்டு நீங்களும் என் மீது வழக்கு தொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறியதை கேட்காமல் என்னுடன் சண்டையிட்டு என்னை அடித்துவிட்டு நான் அடித்தாக சில மாதங்களுக்கு முன் என் மீது பொய்யாக புகார் தெரிவித்தார்கள். அன்றைக்கு விசாரித்த அதிகாரி அவர்கள், உங்களுக்கு பங்கு இருந்தால் நீங்கள் வழக்கு தொடுங்கள் என்று கூறி இரண்டு தரப்பாருக்கும் எச்சரிக்கை விட்டு விசாரனையை முடித்து வைத்தார். அதன் பேரில்  என் தந்தையின் மூன்று உடன் பிறப்புகளும் , வழக்கு தொடுத்ததால் மேற்படி   அய்யணன. அம்பலம் தொடுத்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது..

 மேற்படிவீடும்  இடமும் எனது கட்டுபாட்டில் இருந்தாலும் அவர்களும் வழக்கு போட்டு இருப்பதால் காலி இடத்தை அவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அவைப்பற்றி நான் எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை  என்வீட்டிற்கு கழிப்பறை இல்லாததால்.. என் வீட்டை ஒட்டிய கிழக்குப்பக்கத்தில் உள்ள காலி இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு முயற்சி செய்தபோது... முதல் வழக்கு போட்ட அய்யணன் அம்பலம் கூட வந்து தடுக்கவில்லை... இவர்கள்தான் என்னை கழிப்பறை கட்டக்கூடாது என்று தடுத்தார்கள். வயல் வெளிகளில் ஒதுங்கும் இடமெல்லாம் வீடாகிவிட்டதால்... ஆத்தர..அவசரத்துக்கு ஒதுங்க இடமில்லை.என்  தாயாரும் பார்வை இல்லாமல்போன என் சகோதரியாரும் இரண்டு பெண் பிள்ளைகளும்.... படும் கஷ்டத்தை காண சகிக்காமல்... பல நாள் கடன் கேட்டு அலைந்ததால் கிடைத்த பணத்தைக் கொண்டு கழிப்பறையை கட்டுவதற்கு வேலையை தொடங்கிய போது... கூட்டமாக வந்து தடுக்கிறார்கள். 

அவர்களிடம்  “ இப்படிச் சொன்னே்ன்.. உங்களுக்கு தீர்ப்பாகி விட்டால் உங்களைப்போல் அப்பீல் எதுவும் செய்யமாட்டேன்... தீர்ப்பு சொன்ன சிலநாளிலே எல்லாவற்றையும் காலி செய்து விடுகிறேன். உங்களுக்கு என் பேச்சில் நம்பிக்கை இல்லையென்றால் பத்திரத்தில எழுதித் தருகிறேன். என்றேன். எதையும் கேட்காமல் என்னை அடித்துப் போட்டுவிட்டு எனக்கு முன்னால வந்து நான் கெடுக்க முயன்றதாக பொய்ப்புகார்...கொடுத்துள்ளார்..


மேலும்  புகார் கொடுத்துள்ள அந்த அம்மாவும் ஒழுக்கமானவர் இல்லை... அந்த அம்மாவாவின்  தொடுப்புதான் உங்களிடம் என்னைப் பற்றி தவறாக சொன்னவர்.. அந்த நபர் அந்த அம்மாவின் வீட்டுக்கு வந்த போது...கண்டிக்ககூடவில்லை .. உங்கள் நட்பின்  தொடர்பை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் வீட்டுக்கு வந்து மற்றவர்களை கெடுக்காதீர்கள் என்றுதான் கூறியுள்ளேன்.. அதற்கு என்னை பழிவாங்குறார்...

ஆகவே, அய்யா அவர்கள்.. என் மனுவின் உண்மை நிலையை அறிந்து. என்மீது அவதூறாக புகார் கொடுத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை வேனுமாய் வேண்டிக் கொள்கிறேன்.  இப்படிக்கு்..கீழ்படிந்துள்ள என்று கையெழுத்தப் போட்டு விட்டு பேனாவை ரைட்டரிடம் கொடுத்துவிட்டு அதற்கு நன்றியாக ஒரு கும்பிடு போட்டார். எழுதிய மனுவை சுவரில் சாய்ந்து கொண்டு... ஒருமுறைக்கு இரு முறையாக படிக்க ஆரம்பித்தார்..


“நெடுநேரம் சென்ற பிறகு ... நிறைய ஆட்களை பிடித்து வந்தார்கள்..போலீஸ்காரர்கள்... வந்த சிறிது நேரத்தில்  வந்தவர்களுக்கு லத்தி அடியும் கெட்ட வசவுகளும் மாறி மாறி... கிடைத்தன.   இன்ஸ்பெக்டர்  சேரில் வந்து அமர்ந்தார்... ரைட்டரிடம் கேட்டார் அவர்.. மனுவை கொடுக்கலாமா... என்று.... ரைட்டரோ.... சைகையால்.... பொறு ..பொறு  அவசரப்படாதே.... என்றார்...


அரை மணி நேரத்துக்குப்பின் இன்ஸ்பெக்டரே  அவரை அழைத்தார்... சார், என்று மறுமொழியுடன் சென்றவர் தான் எழுதி இருந்த மனுவைக் கொடுத்தார்.

“சார் இதில  எல்லா விபரமும் எழுதி இருக்கேன் சார்.. படித்து பார்த்துவிட்டு . அதன் மேல் நடவடிக்கை எடுங்க சார், என்றார்.

“வாங்கிய இன்ஸ்பெக்டர் வாங்கிப் படித்தார்...படித்து முடித்துவிட்டு.. எல்லாம் உண்மைதானா..? என்றார். 

“உண்மைதான்.. சார்.. பொய் என்று தெரிந்தால் என் மீது கடுமையான நடவடிக்கை .எடுங்க சார்,  இவர்..”.

“ஒரு போலீசை கூப்பிட்டு.. புகார் கொடுத்தவங்க..வந்திருந்தா.. வரச்சொல் என்றார்.

“பொய்ப்புகார் கொடுத்த அந்த அம்மாவும், அதுதோட தொடுப்பும் வந்தார்கள்..”

“தொடுப்பை வெளியே நிற்கச் சொல்லிவிட்டார் ரைட்டர் .இன்ஸ்பெக்டர். மனுவில் குறிப்பிட்டு இருந்த சிலவற்றை அந்த அம்மாவிடம் கேட்டார்”

“ என்னம்மா...நீ....எல்லாத்துக்கும் ஆமா ஆமான்னு சொல்ற... இவன் கெடுக்க வந்தான்னு  வேறு சொல்றேயே..... இவன உள்ளே தள்ளினா... உனக்கு இடம் கிடைச்சிடுமா...?  உனக்கு தீர்ப்பாச்சன்னாதான் காலி செய்துவிடுறேன்.. சொல்றான்... வழக்கு போட்டது வேறு நபர்....இவன் கழிப்பறையை கட்டுனா.... அதை தடுக்க கோர்ட்டுல  போயி உத்தரவு வாங்கி தடுக்கனும் இப்படி பொய்ப் புகார் கொடுக்கக்கூடாது.... என்றபோது....

“ அந்தம்மா..., இல்ல...சார்...  அவன் என்ன கெடுக்கத்தான் வந்தான் என்று சொன்னதும்.. இன்ஸ்பெக்டர் சற்று கோபமடைந்தார்.. 

என்னம்மா.... நா...ன் சொல்றத கேட்காம.... சென்னதையே சொல்ற... நீ..என்ன பெரிய அழகியா.... உன்ன இவன் கெடுக்க வந்திட்டான்.... என்று சத்தம் போட்டார்...இநதம்“மாவை வெளியே போகச் சொல்லிவிட்டு.. தொடுப்பை அழைத்தார்....  யோவ்் சொத்து சண்டை இடத்து சண்டை இதுல  போயி அந்தம்மா பொய்யா... புகாரு கொடுத்திருக்கியா..... இவன் மேல நடவடிக்கை எடுத்து அபராதம் கட்டச் சொல்றேன்  போதுமா.... என்றார்.

“ அந்த தொடுப்பு எதோ சொன்னார்... இன்ஸ்பெக்டர் எதோ சொல்லவும் தொடுப்பு அமைதியாக  வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தது...

“நின்று கொண்டிருந்த இவரிடம்.... இடத்து சண்டையில  இப்படித்தான் நடக்கும்... அந்தம்மா திருப்திக்கா... ஒரு ஆயிரம் ரூபா பைன் கட்டிவிடுய்யா..... என்று சொன்னபோது.... சார்....அப்படி ஒரு சம்பவே நடக்கல சார்,

“தெரியுதுப்பா..... சண்டை போட்டதாகத்தான் பைன் கட்டச் சொல்றேன். அபராதத்ததை கட்டிவிட்டு அடுத்த வேலைப் பாருப்பா. என்றவர் ரைட்டரை கூப்பிட்டு , வழக்கு எண்ணை சொன்னார். 


இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் சொல்லிவிட்டு.. ரைட்டரிடம் வந்த போது... நாளைக்கு ரயில்வே ஸ்சேடசனுக்கு அருகில் வந்திரு.... மொபைல் கோர்ட்ல அபராதத்தைகட்ட ரூபாயோட வா... என்றார்...ரைட்டர் நீட்டிய சில கோப்புகளில் கையெழுத்தைப் போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது  மணி பதினொன்னுக்கு மேல் ஆகிவிட்டது...
.. 

3 கருத்துகள்:

  1. என்னசெய்வது நண்பரே
    நல்லவர்கள் நொந்து அலைவது தொடர்கதைதானே

    பதிலளிநீக்கு
  2. வலிய வந்து சண்டைப் போட்டவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்று சொல்லவில்லையே !

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...