வெள்ளி 20 2017

நீங்கள் நட்ட மரம் அழுகிறது !





ஒரு நன்மை செய்து அதை மிகப்பெரிய விளம்பரமும் செய்துவிட்டு. அதைவிட பத்து மடங்கு தீமையை மகிழ்ச்சியோடு செய்கிறீர்கள். 

"மரம்"மாசுகலந்த காற்றை சலவை செய்கிறது அதற்காக காற்றிடம் எதிர்ப்போராட்டம் நடத்தி தன் இலைகளையும் கிளைகளையும் பறிகொடுத்து உங்களுக்காக நாள்தோறும் காற்றை சுத்தம் செய்கிறது. இயல்பாக ஏற்ப்படும் மாசுகளை சுத்தம்செய்யவே மரங்கள் கண்ணீர்வடிக்கிறது.

தீபாவளி என்ற பெயரில் வெடிமருந்துகளைக்  கொளுத்தி மகிழ்ச்சி என்ற பெயரில் காற்றையே நஞ்சாக்கி மரங்களின் வளர்ச்சியையும் குன்றச் செய்துவிட்டு பிறகு மானிட அக்கறை உள்ளவர்களைப்போல் மரம் நடுவது எதற்கு ?

இயற்கையைப் பாதுகாக்க என்னாலும் மரம் வளர்ப்போம் என்று பேசியவர்களும் செயல்பட்டவர்களும் கொஞ்சம் வெளியில் வந்து பாருங்கள் கனவான்களே!  தீபாவளி என்ற பெயரில் மனிதன் தன்னைதானே அழித்துக் கொண்டு பிறரையும் அழிக்கும் கொடுமைகள் நடந்துக் கொண்டு இருக்கிறது. இதற்குத் தெரிந்தோ தெரியாமலோ உங்களின் மௌனங்களும் காரணமாகும்.

"மகிழ்ச்சி"மரங்களை நடுவதில் இருக்கிறது !
"மகிழ்ச்சி"காற்றை மாசுபடுத்துவதில் இல்லை !

இயற்கையைப் பாதுகாப்போம் என்றும் சொல்கிறீர்கள்.
மகிழ்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கவும் செய்கிறீர்கள்.

உங்களால் மரம் அழுகிறது ! 
நீங்களோ மகிழ்ச்சியில் சிரிக்கிறீர்கள் !

கொஞ்சம் சிந்தியுங்கள்...மானிடர்களே!!!!!!!!!!!!!!!!!

4 கருத்துகள்:

  1. இப்போதைய மகிழ்ச்சி அடுத்தவர்களை இடிப்பதில்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நியாயமான கேள்விதான் பதில் கஷ்டம்தான்....

    பதிலளிநீக்கு
  3. மானுடர்கள் அவசியம் சிந்திக்கத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. தீபாவளிக்கு மட்டுமல்ல,எல்லா மதங்கள் சார்ந்த கொண்டாட்டங்கள், இனம் சார்ந்த கொண்டாட்டங்களும் டஸ்மாக் குடித்து தான் கொண்டாடுவது, வெடி வெடித்து சுற்றுப்புற சூழலை நாசமாக்கி தான் கொண்டாடுவது, கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்ற தவறான சிந்தனைகள் அவசியம் மாற்றபட வேண்டும்.
    ஆனால் இப்படியான மூடத்தனங்கள் தமிழகத்தில் இருந்து அகற்ற எதாவது முயற்ச்சி நடந்தால்,
    தமிழக புரச்சி போரளிகள் எல்லாம் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவார்கள், ஜூலி அங்கே நின்று கோஷம் போடுவார், அவரை வீர தமிழிச்சி என்பார்கள். மூடத்தனங்களை காலம் காலமாக பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள் என்பார்கள்.
    மூடத்தனங்களை தடைவிதிப்பதை கலாச்சார பண்பாண்பாட்டின் மீதான தாக்குதல் இது என்று புரச்சி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...