சனி 14 2014

வயிற்றுவலி தீர மருத்துவம் சொன்ன மருத்துவரல்லாத பெண்.(1)

  முன் கதையை படிக்க-http://valipokken.blogspot.com/2014/06/blog-post_2883.html


தொடர்ச்சி.............

தான் ஏமாற்றப்பட்டதையும் தான்  ஒரு நொடியில் சபலத்துக்கு ஆளாகி பித்து பிடித்து ஏமாந்து போனதையும் , சாகப்போற நாளில் இப்படி மதியிழந்து மானங்கெட்டு போனதையும் நினத்து புலம்பியவாறு நடந்து வந்து கொண்டு வீடு போய் சேர்ந்தார்.

வீடு போய் சேர்ந்தபோது, மணி ஒன்னாகி இருந்தது.  சத்தமில்லாமல் தன் படுக்கையில் படுத்தார். தூக்கம் வருவதாக இல்லை.

அவளின்மேல் கோபமும் ஆத்திரமும் தான் வந்தது. “சும்மா கிடந்த சங்கை, ஊதி கெடுத்து விட்டாளே” என்று.. ஒவ்வொரு விசயத்திலும் தாம் ஏமாறுவதே ஒரு விதியாஃ? போய்விட்டதே என்று வேதனைப்பட்டார்.

இப்படியாக கண்டதை நிணைத்து குழம்பியவாறு அதிகாலை வேளையில் தன்னையும் அறியாமல் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.  விழித்து போது மணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது.

காலையில் எழுந்தபோது  வீட்டிலுள்ளவர்கள் கேட்டபோது .வயிற்றுவலி வந்ததால் நடந்து கொண்டு இருந்தாக தெரிவித்துக் கொண்டு, பல் துலக்கி அன்றைய உண்வை முடித்துவிட்டு பேப்பரை பார்த்துக் கொண்டு இருந்தார்

பேப்பரை பார்த்து முடித்துவிட்டு ஆப் பன்னி வைத்திருந்த செல் போனை ஆன் செய்தார்.  அதில் இருபதுக்கு மேலான மிஸ்டு கால் பதிவாயிருந்தது. அவள்தான் அந்தக கடையிலிருந்து கொடுத்திருந்தாள்.

அதைப் பார்த்து சிறிது நேரம் அமைதியாக இருந்தவர். சட்டென்று எழுந்து அவள் வீட்டை நோக்கி நடந்தார்.

முதலும் முடிவுமாக, சபலத்துக்கு ஆளாகி ஏமாந்தது போதும் அதனால் மனம் சஞ்சலப்பட்டு தவித்ததும் போதும் அவளின் சங்காத்தமே வேண்டாம் என்ற முடிவோடு அவள் வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர் வீட்டுக்குள் சென்றவுடன் ,அவள் அவனுடைய மகனுக்கு பத்து ரூபாபை கொடுத்து கடைக்கு அனுப்பிவிட்டு. இவரைப் பார்த்து என்னா? எத்தன தடவ போன் அடிக்கிறது. அவ்வளவு  நேரமா பேசிக் கொண்டு இருப்ப...என்றாள்

காமும் காதலும் நிறைந்திருந்த வயதில்கூட நான் இப்படி அலைந்ததில்லை. பாழாய் போன வயிற்றுவலியைக் காட்டி எனனை பித்து பிடிக்க வச்சு ஏமாத்திட்டலே.... என்றார்.

..ஏ.....ஏ  இல்ல........... என் வீட்டுக்காரரின் தங்கச்சி வந்திருந்தாங்க...... அதனால்தான் வர வேண்டாம் என்று சொன்னேன் என்றாள்.

பொய் சொல்லாதே............ எனக்கு எல்லாம் தெரியும். நீ அந்தக் கடையில் இருந்து  எனக்கு போன் செய்ததை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் என்றுவிட்டு அவரே தொடர்ந்து பேசினார்.

“ஏம்மா..நானாவாக ஓங்கிட்ட வந்தேன். நீதானே! என் வயித்துவலியை தீர்ப்பதாக சொல்லி , நைய்யா.நச்சு, ஆசைகாட்டி எனக்கு சபலத்தையும் ஏற்ப்படுத்தின, உனக்கு என் மேல்  இரக்கமுமில்லை காதலுமில்லை, உன்னிடம் நேர்மையுமில்லை ,சுத்தமுமில்லை என்றார்.

அவரின் பேச்சை கேட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தவள். சொன்னா, நீ. நம்ப மாட்ட...  என்கணவரின் ஞாபகம் வந்துவிட்டது. அவருக்கு துரோகம் செய்கிறோமே என்று பயமும் மன உளச்சலும் வந்துவிட்டது. அதனால்தான் மனது மாறி . என் கனவரின் தங்கை வந்தாக பொய் சொல்லி வர வேண்டாம் என்று சொன்னேன் என்றாள்.

திரும்பவும் பொய் சொல்கிறாய், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்கிறாய்., உன் கனவனைத் தவிர வேறு யாரிடமும் போயிருக்க மாட்டாய் என்று நிணைத்துதான். உன்னுடைய வற்புறுத்தலுக்கு மயங்கினேன். ஆனால் நீ கில்லாடியாய் இருப்பாய் என்று நேற்றுதான் தெரிந்தது....

அவள் பேச வாய் எடுத்தபோது. வேண்டாம் எதுவும் பேச வேண்டாம். நான் கொடுத்த பணத்தை  கொடுக்க வேண்டாம். ஆளை விட்டால் போதும். நான் புத்தி கெட்டு போனதற்கு தண்டனையாக இருக்கட்டும். இனி நீ எனக்கு போன் பன்னக்கூடாது.

நான் ஏமாந்தது போதும் . நாமிருவரும் பார்க்கவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் என்று விட்டு வெளியே வந்தபோது. அவள் தடுத்தாள் ப்ளீஸ் ப்ளிஸ்  என்றவாறு  அவரின் கையைப் பிடித்தாள்

அவள் பிடித்த கையை விடுவித்தவாறு  ஒரு கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்தவராக  வருத்தமும் ஏக்கமும் இல்லாத  மன நிம்மதியோடு அவள் வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

வந்ததும் முதல் வேலையாக மனத்தக்காளி கீரையை சாப்பிடச் சொன்ன நண்பரை பார்த்து.. “வயிற்றுவலி தீர  மருத்துவம் சொன்ன மருத்துவரல்லாத இந்த பெண்”ணைப் பற்றி யும் தான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத  வீரத்தையும் சொல்வதற்கு புறப்பட்டார்.

(முடிந்தது.)

http://valipokken.blogspot.com/2014/06/blog-post_2883.html
முன்கதை இணைப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....