செவ்வாய் 06 2025

நிறைவேறா ஆசைகள்.. கனவில் நிறைவேறும்!

 


எந்த சாதியாக இருந்தாலும்  வீடு அற்றவர்களுக்கு வீடு தரும் குடிசைப் பகுதி அது.. அந்தப் குடிசைப் பகுதியில் பலமுறை வந்து கேட்டு கடைசியாக இரண்டு குடும்பங்களுக்கு  வீடு கிடைத்தது.  தாயும் மகனுமான ஒரு குடும்பத்திற்கும் பிள்ளையில்லா தம்பதி குடும்பத்திற்கு  நிபந்தனைகள் எதுவுமில்லை  மாதம் தவறாமல் வாடகை கொடுக்க வேண்டும்.

குடிவந்த புதிதில் இரண்டு குடும்பங்களும் பழக்கம் இல்லாமாலே இருந்தன. நாளடைவில் ஏற்கனவே குடியிருந்து வந்த குடும்பங்களை விட புதிதாக வந்த இரு குடும்பங்களும் மிகவும் பிரியமாக இருந்தன. அதற்கு காரணம் பிள்ளையில்லாமல் இருந்த குடும்பங்கள் தாயின் மகனை தன்மகனாக  நிணைத்துக் கொண்டார்கள். கனவனும மனைவியும் வேலைக்கு சென்று திரும்பி வருகையில் அவனுக்கு எதாவது ஒன்றை வாங்காமல் வந்ததில்லை. . அவனுடைய தாய் வீட்டு வேலைக்கு சென்று இரவு வரும்வரை அவர்களுடனே இருப்பான்.

காலச்சூழ்நிலையில் பிள்ளையில்லா குடும்பத்தின் கனவன் விபத்தில் பலியாகி நிற்கதியாக நின்றவர்க்கு தாயும் மகனுமே பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தனர். நாளடைவில் வீட்டுவேலை சுமையால் களைத்து போன தாயானாவல் நோய்வாய்பட்டு இறந்து போக .அனாதையாக நின்ற மகனுக்கு  தாயாக காத்தாள்.

தாய் இறந்த ஆறு மாதத்தில் பொத்தி பொத்தி காத்து வளர்த்த மகனை பறிகொடுத்த அந்த அபலை அனாதயைாக காலத்தை கடந்தாள்.....

அனாததையாக காலத்தை கடத்தி வந்த அந்த அபலை ஒரு நாள் படுக்கையில் விழுந்தாள். உயிர் இழுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அபலையின் மகன் கனவில் வந்து அவளின் ஆசையை நிறைவேற்றினான்.

அபலையின் கனவன் விபத்தில் பலியான பிறகு.அவளுக்கு உறுதுணையாகவும் வாழ்க்கையின் பிடிப்பாகவும் இருந்தான். பெற்ற அம்மா, வளர்த்த அம்மாக்களின் பேச்சை தட்டாவதனாக இருந்தான். கடைசியாக வளர்த்த அம்மாவின்  ஆசைகளை கனவில் வந்து நிறைவேற்றினான்.

 

குறிப்பு-

கனவுகள் என்பது தூங்கும்போது நம் மனதில் தோன்றும் காட்சிகள், நினைவுகள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். அவை பல காரணங்களால் ஏற்படலாம், 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இது இந்தியாவில் மட்டும்தான்...........

  நெய் எரிக்கப்படுகிறது பால் கொட்டப்படுகிறது  மூத்திரம் குடிக்கப்படுகிறது