விளாதிமிர் லெனின் என்பவர் சோவியத் யூனியன் என்ற பேரரசை கட்டியெழுப்பிய ரஷ்யப் புரட்சியாளர். ஆனால் அவர் இறக்கும் போது அவரது சட்டைப் பையில் சில ரூபிள்கள் மாத்திரமே இருந்தன.
ஜோசப் ஸ்டாலின் ஜேர்மனிய நாஜி படைகளை தோற்கடித்த ரஷ்ய தலைவர். 20,000 யுத்த டாங்கிகள் கொண்ட ஒரு நாட்டை ஆட்சி செய்தார். சோவியத் யூனியன் சரிந்த பிறகு அவரது மகள் வாடகை வீடுகளில் வசித்து வந்தார். ஏனெனில் ஸ்டாலினுக்கு சொந்தமாக வீடு இருக்க வில்லை.
பிடல் காஸ்ட்ரோ நவீன கியூபாவை நிறுவியவர், நிலப்பிரபுத்துவ சலுகைகள் அனைத்தையும் தேசியமயமாக்கினார். ஹவானாவில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அவருக்கு இரண்டு நவீன மெர்சிடிஸ் கார்களை பரிசளித்தார். அவற்றை அவர் தனக்கு சொந்தமாக்காமல் ஏலத்தில் விற்று நாட்டின் கருவூலத்தில் சேர்த்தார்.
ஹோ சி மின் வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர். நவீன வியட்னாமை கட்டியெழுப்பியவர். காலனித்துவத்துக்கு எதிராக களத்தில் இறங்கி போர் புரிந்தவர். கடைசி வரை அவர் தனது விடுதலைப் போராட்ட வீரர்களுடன் குடிசை வீட்டிலே வாழ்ந்து, அதிலே இறந்து போனார்.
மா சே துங் நவீன சீனாவை நிறுவினார், ஐந்து ஆண்டுகளுக்குள் சீனாவை வளர்முக நாடாக மாற்றியமைத்தார். அவர் பல சமயம் பாதை சுத்திகரிப்பாளர்களுடன் இனைந்து பாதையை சுத்தம் செய்பவராக இருந்தார்.
இவர்கள் யாருமே இறை நம்பிக்கையாளர்கள் அல்ல, இவர்கள் அனைவரும் இறை மறுப்பாளர்கள். இவர்கள் இறைவனையோ மறு உலகத்தையோ நம்பி வாழ்ந்தவர்கள் அல்ல.
ஆனால் இவர்களிடம் சமயங்கள், அறநெறிகள் அனைத்தும் போதிக்கும் பற்றற்ற வாழ்வு இருந்தது. மக்களுக்காக வாழ வேண்டும் என்கிற தியாக சிந்தனை இருந்தது. மதங்கள், நீதிநெறிகள் கண்டிக்கும் பொய், களவு, மற்றும் ஊழல் போன்ற மகா பாதகங்கள் இருக்கவில்லை.
இன்று மதங்களின் பெயரால் ஆட்சி பீடம் ஏறி, நாட்டு மக்களுக்கு வஞ்சகம் செய்து சொத்துக்கள் குவித்து ஆடம்பரமான வாழ்க்கை வாழும் ஆத்திக ஆட்சியாளர்கள் இந்த நாத்திக ஆட்சியளர்களுக்கு முன்னால் வெட்கித் தலை குனிய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை