வியாழன் 16 2011

ருசி கண்டவர்களுக்கு,சூடு வைப்பது யாருங்க?

கல்வி கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு
 செய்த கல்வி தந்தையர்களும்வள்ளல்களுககும்
நிதிபதி ரவிராஜன் கமிட்டி அதிகமாக கூட்டிக் கொடுத்தும்
புதிய கட்டணத்தால் வாத்திமார்களுக்கு சம்பளம்கூட
 கொடுக்கமுடியாதுஎன்று மீண்டும் கொட்டி குமுறுகின்றன.
 திரும்பவும் மேல்முறையீடு செய்யபோகின்றன.
இனி என்ன செக்கு மாட்டு கதைதான்.

படி அரிசியில் முனி அரிசியை சோமாறுபவனைவிட
படியையே சோமாறுகின்றன.இந்த தனியார் கல்வி
 நிறுவனங்கள..

ருசிகண்ட cat சும்மா இருந்தாதாக வரலாறு உண்டா?
 சூடு வைத்தால்சும்மா இருக்கும்.இந்த மாதிரி ருசி
கண்ட தனியார் கல்வி கொள்ளையர்க்கு
சூடு வைத்தால்தான் சும்மா இருப்பார்கள்.

இவர்களுக்கு சூடு வைப்பது யார்? நிச்சயமாக
 அன்னபுர்னியம்மாவானதமிழகத்தின்
 வீரத்தாய் சூடு வைக்கமாட்டாங்க.

இந்தியாவின் ஜனநாயகத்துாண்களான
 ரெண்டு, முனு. நாலு துாண்களும் சூடு
வைப்பதற்கு பதிலா மயிலு இறகால்
 வருடிவிடத்தான்செய்யும்

பிள்ளைகளை பெற்ற பெற்றொர்களாவது
 சூடு வைப்பார்களா?இப்போதைக்கு
 பெற்றோர்களுக்கு சூடு வைக்கிற அளவுக்கு
தெம்பும்தகிரியமும் கிடையாது
.கல்விக் கொள்ளையர்கள் அண்டா சூடு
கொடுத்தாலும் சகிப்பு தன்மையோடு
 ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான்
இருக்கிறார்கள்

தேர்தலில் தோற்றுப்போன கடசிகளாவது
 சூடு வைக்குமா?ம்ம்ம்......நாங்க என்னாத்துக்கு
 அவிங்களுக்கு சூடு வைக்க,எங்களுக்கா
ஓட்டு போட்டாங்க.ஓட்ட மாத்தி
போட்டீங்கள்ல?அதன் பலன அனுபவிங்க
எங்களுக்கென்ன என்று சொல்லாம
 சொல்லுகிறார்கள்.

ஆசிரியர் ஏங்கினால். நாளை நாடு ஏங்குமுன்னு
 சொல்ற வாத்திமார்களாவதுசூடு வைப்பார்களா?
அட,போங்கப்பா! இரண்டாவது இருண்டகால
ஆட்சியை நிணச்சா.ஈரக்குடலே நடுங்குது.
சூடாவுது.சுண்ணாம்மாவது.!

அப்போ, யார்தான்?ருசி கண்ட தனியார்
 கல்வி கொள்ளையர்களுக்கு
சூடு வைப்பது.  

சூடு வைப்பதற்கு வையகத்தில் இல்லாமலா
போயிருவாங்க!!!

ருசி கண்ட தனியார் கல்வி கொள்ளையர்க்கு
சூடு வைப்பது யாருங்க!!!

தெரிஞசா, மறக்கமா சொல்லிவிட்டு போறீங்களா??ஃ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...