சனி 18 2011

டாஸ்மாக் கல்லாவிலும் இருப்பார்.செவ்வாய் கிரகத்திலும் இருப்பார்

காந்தியை பார்த்திருக்கியா?

ஓ......பார்த்துஇருக்கிறேனே!. அவரோட பேசியிருக்கனே!


டேய் ,எந்தக்காந்திடா?

சிபிஎம்ல இருக்கிற காந்திதானே?

அந்தக்காந்திய கேக்கலடா?  பிர்லா மாளிகையில
தங்கியிருந்து, ஆட்டு பால குடிச்சுகிட்டு, தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு ”அரிஜன்” ன்னு பேரு வச்சு, இந்தியாவுக்ககே
சுதந்திரம்  வாங்கி கொடுத்தாருலட,. அந்தக்காந்திடா?

படிச்சிருக்கேன், நேருல பார்த்தில்லயே!

போடா, முந்தாநாளு பிறந்த குழந்தகூட
பார்த்துருக்கு,நீ பாக்கலேன்னு சொல்ற?

திரும்ப திரும்ப பொய் சொல்லாதடா?
மொட்டைத்தல,பெரியகாது,அடர்நத மீசை
பொக்கவாய் . அச்சு அசலாய்.இருக்கிற
காந்திய எங்கயோ,இருக்கிற.இத்தாலி
நாட்டச்சேர்ந்த வானிலை ஆர்வலர்
மாட்யு லேனியோ என்பவர்.செவ்வா
கிரகத்திலே பார்த்துயிருக்காரு!
நீ என்னடான்னா,இந்தியாவுல
பிறநதுட்டு காந்திய பாத்ததேயில்லன்னு
அண்டபுளுகு விடுறியேடா?

காந்தி கல்லாவிலும் இருப்பார்,பேங்கிலும்
இருப்பார்ஏன்? சுவிஸ் வங்கியிலும் இருப்பார்.
அவருஇல்லாத இடமேது?.
டாஸ்மாக்கில அவர கொடுத்துதாண்டா
குடிமகனா ஆகமுடியும்

செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில
அய்ரோப்பிய வின்வெளி ஏஜென்சி அனுப்பிய
ஆர்பிட்டர் விண்கலம் .செவ்வாய் கிரகத்திலிருந்து
எடுத்து அனுப்பிய  படங்களைஆய்வு செய்தபோது

செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதில காந்தியின்
உருவம் போலவே இருநததாக வானிலை
ஆர்வலர் ஒருவர் கூறினாரு

அவர் சொன்ன அடையாளம் அனைத்தும்
காந்தி ரூபா நோட்டில் அச்சு அசலா
இருக்கு..காந்தி பணத்தை பார்த்ததால்
மயக்கத்தில் கூறினாரா என்று தெரியவில்லை.


கொஞ்ச நாள் கழித்து  அகில கிரகங்களிலும்
காந்தி காட்சியளிக்கிறார் என்று ஆய்வுகளும்
ஆர்வலரும் கூறுவார்கள். எதுக்கும் கொஞச
நாட்கள் காத்து இருங்கப்பா.......!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக