செவ்வாய், செப்டம்பர் 25, 2012

நாய் ஒன்று நரியாக ஊளையிட்டது..........


ஓங்கி வளர்ந்த
மரங்கள் மட்டுமே
நிறைந்த காடுமல்ல..

முட்களும் புதற்களும்
மனித நடமாட்டம்
இல்லாத மலையுமல்ல...

வான் உயர்நத மாடா
மாளிகைகளும்,இயற்கை
மிஞ்சும் சொகுசு
பங்களாக்களும்..சீறிப்
பாய்கின்ற கார்களும்
நிறந்த ஜனநாயக நாடு.

காற்றில் பறக்கும் ஓடு வீடுகளும்
மழையில் மீன் பிடிக்கும்
கூரை வீடுகளும்  கூடவே
பஞ்சமும் பசியும் வேலை
இண்மையும் விலைவாசி
உயர்வும்  மிகுந்த வல்லரசு நாடு..

வல்லரசு நாட்டின........
நாடாளும் மாளிகையில்
எஜமானர்களின் விசுவாசமிக்க
அடிமை நாய் ஒன்று..........
குரைப்பதை மறந்து
அமைதிகாத்தது.....

திடீரென்று ஒருநாள்
எஜமானர்களின் உயர்வுக்காக
தன்நிலை மறந்து.......
நரியாக ஊளையிட்டது

நரி குரைத்தாலும்
நாய் ஊளையிட்டாலும்
வீட்டிற்கும் கேடு.......
நாட்டிற்கும் கேடு.........


.

2 கருத்துகள்: