செவ்வாய் 18 2017

“தீட்டு கழிக்கும் சுலோகம் தெரியுமா உங்களுக்கு ?

அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி....
                                                  காட்சி---1

மாணவன்-1.  டேய் இங்கப்பாருடா... நம்ம வகுப்புக்கு பாடம் நடத்தப்போறவன் தீண்டத்தகாதவனாம்..டா...

மாணவன்-2.....“இது எங்கப்பாவுக்கு தெரிஞ்சது, அவ்வளவுதான்டா..”

மாணவன்-3....டேய்...இதுல அந்த தீண்டத்தகாதவன் நமக்கு இங்கிலீஷ்ல பாடம் நடத்தப் போறானாம்டா..!!!!!”

(இப்படியாக அந்த வகுப்பறை மாணவர்கள் திண்டத்தகாதவர்களைப்பற்றி எள்ளி நகையாடி சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்“)

                                                              காட்சி-2
மாணவர்கள் குறிப்பிட்டு பேசிக் கொண்டு இருந்த . அந்த ஆசிரியர் வகுப்பு அறைக்குள்  வந்து பேசுகிறார்.

ஆசிரியர்-      “ I am proessor ambekar .” ..“ நான் உங்களுக்கு எடுக்கப் போற சப்ஜெட், அரசியல்-பொருளாதாரம்..., உங்களுக்கு என்ன கத்துக்குடுக்க முடியுமின்னு நீங்க  நிணச்சீங்கன்னா....என் அறிமுகம் உங்கள் சந்தேகத்தை போக்கும்.... I have a M.A.and Ph.d.in Public Finance from Colombia university in new york. My thesis civered the financial history of india from 1765 tp the present in addition I am working towads an Msc from the London school of econmics,- இனியும் எனக்கு கற்பிக்கத் தகுதியில்லை என்று உங்களில் யாரேனும் நிணைத்தால் அவர்கள் தாரளமாக வகுப்பு அறையை விட்டு வெளியே செல்லலாம்... NOW

(ஆசிரியர் பேசி முடித்ததும்.  அந்த வகுப்பறை   சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

ஆசிரியர்-....“ சரி, நாம் பாடத்தை துவங்குவோமா....?????

                                                              காட்சி-3

இடைவேளையின் போது  professorகளுக்கான  அறையில் வைக்கப்பட்டு இருந்த பானையில் புதிதாக வந்த ஆசிரியர் நிீர் அருந்த முயலுகிறார். அப்போது ஒருவர் குறுக்கிடுகிறார்)

குறுக்கிடுபவர் -....“ டாக்டர் அம்பேத்கர்...............”

டாக்டர் அம்பேத்கர்:-     “யெஸ்...”

குறுக்கிட்டவர்:-    நான் புரபசர் திரிவேதி....இங்கு வைத்ததுள்ள குடிதண்ணீர் இங்கு பணிபுரியும் புரபசர்களுக்கு மட்டும்தான்   ”

டாக்டர் அம்பேத்கர்:-    அப்படியென்றால“ நான் யார்???

புரபசர் திரிவேதி:- ..'“யெஸ்..யெஸ்...நீங்களும் புரபசர்தான் நாங்க ஒத்துக்கிறோம்....ஆனா ஒரு முக்கியமான விசயம் என்னான்னா..., நீங்க குடிப்பதற்கு தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்துதான் கொண்டு வரவேண்டும்.

(டாக்டர் அம்பேத்கர் குவளையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து சொல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:- “ இந்தக் குடிநீரை நான் குடிப்பது. மெத்த படித்த உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்.... நீங்கள் அருந்தும் நீரை உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்.

(குவளையில் பிடித்த நீரை அருந்தகிறார். பின் சொல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:-     நல்லது. இனி தூய்மைப்படுத்துங்கள்.

( திரிவேதியைப் பார்த்து) திரிவேதி அவர்களே! நீங்கள் மூன்று வேதம் கற்றவர் உங்களுக்கு தீட்டுப்பட்ட நீரை தூய்மைப்படுத்தும் மந்திரம் தெரிந்திருக்கனுமே..??

திரிவேதி:-  தெரியாதுங்களே.........( தலை குனிகிறார் திரிவேதி)

டாக்டர் அம்பேத்கர்:-  “உங்களுக்கு தெரியதெனில் நான் கூறுகிறேன். அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி....

( குவளையை வைத்துவிட்டு, தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு) மீண்டுமொருமுறை சொல்லவா  என்று கேட்டுவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் தீட்டு கழிக்கும் அந்த சுலோகத்தை சொல்லிக் கொண்டே செல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:- அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி.


குறிப்பு:-   மேற்படி காட்சிகள்  கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த அம்பேத்கர் படக் காட்சிகள்... நன்றி!!7 கருத்துகள்:

 1. இப்ப இது எனக்கும் தெரிஞ்சு போச்சு நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. இது உண்மையா ,படத்தின் சுவாரசியத்துக்காக சேர்க்கப் பட்டதா :)
  வரலாறு கூட சினிமாவில் மிகைப் படுத்தப் படும் ,கடவுளின் திருவிளையாடல்கள் போல :)

  பதிலளிநீக்கு
 3. இந்த ஒரு வியாதியாகப்போய் விட்டது இப்ப பல இடங்களில் .

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு! நான் அந்தப் படம் பார்க்கவில்லை. உங்களுடைய இந்தப் பதிவைப் படித்ததும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு

நான் கண்ட கனவு எனக்கு பலித்தது....1

புத்தகத்தை திறந்து இரண்டு பக்கம் படித்து முடிக்குமுன்னே..தூக்கத்துல தல ஆடிவிடுகிறது. உடனே புத்தகத்தை மூடி வைத்து விட்டு தூங்க ஆரம்பித்து விட...