வெள்ளி 19 2024

இதுவும் கருத்து கணிப்புதான்...

 




டேய்.. ஓட்டு போட்டீயா..

போட்டேன்ணே..

சரி..  போ..


ஏய்..இங்க வா.

என்னான்ணே..

ஓட்டு போட்டியா..

ஓ.. போட்டேண்ணே..

எதுக்கு போட்ட..

சூரியனுக்குன்ணே..

சரி.போ..


அம்மா..தாயி ஓட்டு போட்டீயா..

ஓ..போட்டனே..

எதுக்கு போட்ட..

இரண்டு விரலை காட்டியது

எம்ஜிஆரும் ஜெவும் செத்துப் போனதுகூட தெரியல    .ம்ம்  போ..போ..


சார்..உங்கள் வாக்கை பதிவு செய்து விட்டீர்களா?

என் வாக்கை சனநாயகம் காக்க பதிவு செய்துவிட்டேன்.

நன்றி சார்..


தோழரே..தங்களின் கடமையை நிறைவேற்றிவிட்டீர்களா?

பாசிசத்தை வேரறுக்க, இந்து சனாதனத்தை அழிக்க என் கடமையை ஆற்றிவிட்டேன் தோழரே..

வெல்டன் தோழரே..


ஏப்பா..ஓட்டு போட்டீய்யா..

ஓட்டா..அப்படீன்னா..

சும்மா நடிக்காதிப்பா..

நடிப்பா..அப்படின்னா.

அய்யோ..போ..போ..போப்பா..


அய்யா.       .நீங்க 

சென்ற தடவை ஓட்டு  போட்டும் ஒன்னும் நடக்கல.. அதனால

அதனால..    

இந்ததடவ  போடல..

அய்யோ போடலையா.. நாசமா போச்சு..

நான் கடமையை செய்தாலும் உரிமையை நிலை நாட்டிானாலும்  நாசமா போனதை.போவதை யாராலும் தடுக்க முடியாது..


நண்பா..என்ன சொல்ற..

ஆமா.. . நமக்கு பிடிச்சங்களுக்கு ஓட்டு போட்டாலும்  அது மாறி  வாயால வடை சுட்டு பத்து இலட்சம் உடை உடுத்தும் ஏழைத்தாயின் மகன் கட்சிக்குதான் பதிவாகுது. எதுக்கு நம்ம கையால நம்ம கைண்ணை குத்தனும். தேர்தல் ஆணையமே ஒரு சார்பா இருக்குது . இதுல கடமை உரிமை ன்னு பிலாத்திகிட்டு.  கோபப்படாத நண்பா..


 நல்லவர்கள் வந்து நல்லாட்சி செய்யும்போது  நானும் எனது கடமையை உரிமையை நிலை நாட்டுகிறேன்.-நண்பா...


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...