வியாழன் 19 2013

அதென்ன ..லோக்(கு)பால்.................



வாலிபால் -புட்பால்
விளையாடிய வர்களுக்கு
தெரியும்......................

கிரிகெட்பால்-சிக்ஸர்பால்
பார்த்தவர்களுக்கு
தெரியும்......................

மாட்டுப்பால்- ஆட்டுப்பால்
குடித்தவர்களுக்கு
தெரியும்................

“அதென்ன லோக்(கு)பால்”......

பார்ஆளும் மன்றத்திலும்
சட்ட மன்றத்திலும்
சொகமாய் படுத்து
புரளும் பன்றிகளுக்கு
தெரியும்...................

படி அரிசியில் முனி அரிசி
சோமாறும் சோமாறிகளுக்கு
தெரியும்......................

படி அளக்காமல்
மொத்தமாய்  பதுக்கும்
பதுக்கல் பேர்வழிக்கு
தெரியும்................

எல்லாப் புகழையும்
மொத்தமாய் அள்ளும்
பெரிசு அன்னா கசரேவும்
ஆத்மி கேசரி வாலுக்கும்
தெரியும்.................

 “லோகபால் நிறைவேறியது”

புரட்சி திட்டமுனு
சொல்லித் திரிந்த
தகவல் அறியும்
உரிமைச் சட்டம்

பல்லு போயி
ஒன்றிரண்டு சொத்தை
பல்லைக்காட்டி.
கொண்டு நிக்க
மாட்டாமல் நிக்குது.

இந்த லோக்(கு) பாலும்
லோக்கு பால் அல்ல
லாக்கு பால்லுன்னு
சந்தி சிரிக்கத்தான்
போகுது...................

2 கருத்துகள்:

  1. மன்னிக்கவும், எங்களுக்கு அமலாபால் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. அடடா...! அமலா பால பற்றி தெரிஞ்சுக்காமா போயிட்டேனே.........!!! நன்றி! கும்மாச்சி அவர்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...